தொலைந்துபோன ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிப்பது எப்படி (ஆண்ட்ராய்டு).?

உங்களின் தொலைபேசி காணாமல் போய்விட்டது அல்லது திருடப்பட்டு விட்டது என்ற தருணத்தில் ஐஎம்இஐ எண் தான் உங்களிடம் இருக்கும் கடைசி நம்பிக்கையாகும்.

|

ஐஎம்இஐ எண் என்பது ஒரு ஸ்மார்ட்போனின் மிக அத்தியாவசியமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஸ்மார்ட்போன் சார்ந்த எல்லா வகையான உறுதிப்படுத்தலுக்கும் ஐஎம்இஐ எனப்படும் சர்வதேச மொபைல் ஸ்டேஷன் எக்ஸ்புளோரர் அடையாள எண் என்பது ஒரு தனி அடையாள எண்ணாக திகழ்கிறது.

ஒவ்வொரு சாதனத்திற்கும் தனிப்பட்ட ஐஎம்இஐ (IMEI) எண் இருப்பதால், அதை ஒரு தொலைபேசியின் கைரேகை என்றே நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அடிப்படையில், ஐஎம்இஐ எண் ஆனது சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது, எனவே, நீங்கள் ஒரு இரட்டை சிம் சாதனத்தைப் பயன்படுத்தினால், உங்கள் தொலைபேசி இரண்டு ஐஎம்இஐ எண்களைக் கொண்டிருக்கும்.

கடைசி நம்பிக்கை

கடைசி நம்பிக்கை

இப்படியான மிக முக்கியமான தொலைபேசியின் ஐஎம்இஐ எண் கொண்டு உங்களின் தொலைபேசியை நீங்கள் கண்காணிக்கவும் செய்யலாம் குறிப்பாக உங்களின் தொலைபேசி காணாமல் போய்விட்டது அல்லது திருடப்பட்டு விட்டது என்ற தருணத்தில் ஐஎம்இஐ எண் தான் உங்களிடம் இருக்கும் கடைசி நம்பிக்கையாகும்.

தொலைந்து போயிருந்தால்

தொலைந்து போயிருந்தால்

அதெல்லாம் சரி ஒருவேளை உங்களின் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ சார்ந்த விவரங்கள் எதுவுமே தெரியாத நிலைப்பாட்டில் உங்களின் கருவி தொலைந்து போயிருந்தால் எப்படி ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிப்பது என்பது உங்களின் கேள்வியென்றால் இதோ எங்களின் எளிமையான வழிமுறைகள் கொண்ட விளக்க பதில்.!

இதை நிகழ்த்த

இதை நிகழ்த்த

1. லேப்டாப் / பிசி / ஸ்மார்ட்போன் (செயலில் இணைய இணைப்புடன்)
2. தொலைந்த தொலைபேசியின் கூகுள் அக்கவுண்ட்.

வழிமுறை #01

வழிமுறை #01

கூகுள்.காம்-ஐத் திறந்து, தொலைந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட்டை குறிப்பிட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

இப்போது ஒரு புதிய டாப் திறந்து, பின்னர் கூகுள் டாஷ்போர்டு அமைப்புக்குச் (Google Dashboard Setting) செல்லவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது "ஆண்ட்ராய்டு" என்பதை பார்க்கும் வரை கீழே உருட்டவும். பின்னர் அந்த ஆண்ட்ராய்டை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட சாதனத்தின் ஐஎம்இஐ எண் மற்றும் அதன் இதர விவரங்களைக் காணலாம்.

கூகுள் கணக்கிலில் இணைக்கப்பட்டிருந்தால்

கூகுள் கணக்கிலில் இணைக்கப்பட்டிருந்தால்

இந்த வழிமுறைகள் அனைத்துமே இழந்த சாதனமானது கூகுள் கணக்கிலில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே குறிப்பிட்ட சாதனத்தின் ஐஎம்இஐ எண்ணைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Find IMEI Number of Android Device Even If The Phone Is Lost. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X