உங்களுடைய டேட்டாபேஸ் விவரங்களை ஃபேஸ்புக்கில் பார்ப்பது எப்படி?

நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த உபயோகிக்கும் சாதனம், பயனம் செய்த இடம் போன்ற அனைத்து தகவல்களையும் இந்தப்பகுதியில் பார்க்க முடியும்.

|

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது. இதன் காரணமாகவே அதிபர் டிரம்ப் தனது பிரசார யுத்தியை மாற்றி அமைத்து மக்களைக் கவர்ந்தார் என்று தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.

உங்களுடைய டேட்டாபேஸ் விவரங்களை ஃபேஸ்புக்கில் பார்ப்பது எப்படி?

இந்நிலையில் ஃபேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ்ஆப் துணை நிறுவனர் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேஸ்புக் பிரச்சனை தற்சமயம் அனைத்து இடங்களிலும் பூதாகரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூக்கபெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

 50 மல்லியன்:

50 மல்லியன்:

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா குறிப்பிட்டுள்ள அறிக்கையில் 50 மல்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. இதனால் பேஸ்புக் மீது பல்வேறு குற்ச்சாட்டுகள் எழுந்துள்ளது.

நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள்:

நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள்:

மேலும் பேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு தகவல்களை நம்மால் எளிமையாக பார்க்க முடியும், அதற்கு சில வழிமுறைகள்உள்ளன. குறிப்பாக உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்கள், நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோடு செய்த புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்கள் போன்றவற்றை பார்க்க முடியும்.

விளம்பரம்:

விளம்பரம்:

வழிமுறை-1:
முதலில் விளம்பரம் சார்ந்த தகவல்களை பார்க்க உங்கள் ஃபேஸ்புக் லாக் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.

வழிமுறை-3:
பின்பு ஆட்ஸ்-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:
அதன்பின்பு நீங்கள் பதிவிட்ட விவரங்கள் மற்றம் ஃபேஸ்புக் பேஜ், ஆப்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களின் தகவல்களை பார்க்க முடியும்.

வழிமுறை-6:
அடுத்து நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த உபயோகிக்கும் சாதனம், பயனம் செய்த இடம் போன்ற அனைத்து தகவல்களையும் இந்தப்
பகுதியில் பார்க்க முடியும். நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் பிழை இருந்தாலோ அல்லது தவறாக பதிவிடப்பட்டு இருந்தாலோ அவற்றை அழிக்க ஃபேஸ்புக் அனுமதிக்கிறது.

பயனர்களின் தகவல்கள்:

பயனர்களின் தகவல்கள்:

வழிமுறை-1:
ஃபேஸ்புக் வைத்திருக்கும் பயனர்களின் தகவல்கள் பார்க்க குறிப்பிட்ட வழிமுறை இருக்கிறது. முதலில் உங்கள் ஃபேஸ்புக் லாக் இன் செய்து,செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து ஃபேஸ்புக் டேட்டாவை டவுன்லோடு செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஸ்டார்ட் மை ஆர்ச்சிவ் எனும் விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும்.

வழிமுறை-3:
பின்னர் உங்களின் பாஸ்வேர்டினை பதிவிட்டால், உங்களுடைய டேட்டா அனைத்தும் மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும். குறிப்பாக மெசேஜ்கள், வீடியோக்கள், நண்பர்கள், விளபம்ரங்கள், புகைப்படங்கள், போன்ற அனைத்து தரவுகளும் இடம்பெற்றிருக்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 அரசியல் :

அரசியல் :

அரசியல் ஆதாயத்துக்காக 50 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டதைப் பற்றி பேஸ்புக் நிறுவனம் எந்த அளவிற்கு அறிந்துள்ளது என்று தலைவர் மார்க் ஜூக்கபெர்க் விளக்கம் அளிக்க வேண்டுமென, அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் Amy Klobuchar கோரிக்கை விடுத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
How to find out everything that Facebook knows about you ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X