உங்கள் வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி?

|

இணைய உலகில் நம்மை இணைத்துக்கொள்ள பெரும்பாலும் வைஃபை-யை பயன்படுத்துவோம். பெரும்பாலானோர் தங்களுக்கென தனியாக வைஃபை வலையமைப்பை வைத்திருப்பர். நீங்கள் உங்கள் வைஃபை-யை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் அதே நேரத்தில், மூன்றாம் நபர்களும் உங்கள் வைஃபை பாஸ்வேர்டை கண்டறிந்து பயன்படுத்தும் போதுதான் சிக்கலே!

உங்கள் வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி?

அதனால் வைஃபை-ன் அலைவரிசை (பேண்ட்வித்) பிரியும் மற்றும் நெட்வொர்க்கின் வேகமும் வெகுவாக குறையும்.யாராவது உங்கள் வைஃபை நெட்வொர்க்கை இரகசியமாக பயன்படுத்துகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அது சரியா தவறா என துப்பறியும் நேரம் வந்துவிட்டது. இந்த கட்டுரையில், உங்கள் வைஃபை-யை திருட்டுதனமாக பயன்படுத்தவர்களை/கருவிகளை கண்டறிவது எப்படி என காணலாம்.

வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்தும் கருவிகளை கண்டறிவது எப்படி?

இங்கு கூறப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுவது மிகவும் எளிமையானது. உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை ஸ்கேன் செய்ய ஒரு மென்பொருளை பதிவிறக்கம் செய்தால் போதுமானது. ஸ்கேன் செய்து முடித்தவுடன் உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை பற்றிய முழுமையான அறிக்கை உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கான வழிமுறை இதோ..

படி#1

" Wireless network watcher " என்ற மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணிணியில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.

படி#2

பின்னர் அந்த கணிணியை, உங்களின் வைஃபை நெட்வொர்க் அல்லது நீங்கள் பரிசோதிக்க விரும்பும் நெட்வொர்க்கில் இணைக்கவேண்டும்.

படி#3

" Wireless network watcher " மென்பொருளை இயக்கி, "Start Scanning" ஐ கிளிக் செய்யவும்.

படி#4

இந்த மென்பொருள் முழுவதுமாக ஸ்கேன் செய்துமுடிக்கும் வரை, சில நிமிடங்கள் காத்திருக்கவும்.

படி#5

ஸ்கேன் செய்து முடித்தவுடன், உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் அவற்றின் ஐ.பி முகவரியுடன் காட்டப்படும்.

இதன் மூலம் எவ்வளவு கருவிகள் உங்களின் வைஃபை-யை பயன்படுத்தியுள்ளன, வைஃபை பெயர் மூலம் அதன் உரிமையாளர் பெயரைக் கூட கண்டறியலாம். பின்னர் அவர்களை நேரிடையாக எதிர்கொள்ளலாம் அல்லது வைஃபை பாஸ்வேர்டை மாற்றிவிடலாம். மூன்றாம் நபர்கள் உங்கள் வைஃபை-யை பயன்படுத்துவதை தடுக்க மாதமொரு முறை ஸ்கேன் செய்வது மட்டுமில்லாமல் பாஸ்வேர்டையும் மாற்றலாம்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

"Softperfect Wifi Guard" போன்ற மென்பொருட்களின் மூலம் யாராவது உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் இணைக்க முயற்சிசெய்யும் போதே கண்டறியலாம். IP network scanner மற்றும் who is On My wifi? போன்ற பிரபல மென்பொருள் மூலமும் இத்தகைய ஸ்கேன்களை செய்யலாம். உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் மென்பொருளை தேர்வு செய்யலாம்.

உங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.!உங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் நம்பமுடியாத மோசடி: உஷார்.!

மெதுவான வைஃபை வேகம் என்பது மிகவும் எரிச்சலூட்டக்கூடியது. சில நேரங்களில் இணையசேவை வழங்கும் நிறுவனங்களின் மீது தவறு இருக்கலாம். மற்ற நேரங்களில் மூன்றாம் நபர்களின் கைவரிசையாக இருக்கும்.மேலே குறிப்பிட்டுள்ள மென்பொருட்களின் மூலம் எளிதாக பிரச்சனைகளை கண்டறியலாம். உங்கள் வைஃபை-யை முழுமையாக பயன்படுத்துவது உங்கள் உரிமை. உடனே ஸ்கேன் செய்து மோசடியாளர்களை கண்டறியுங்கள்.

Best Mobiles in India

English summary
Most of the time, we use Wi-Fi to connect ourselves with the internet world. Many people have their own private Wi-Fi network. You can enjoy your Wi-Fi openly, but things become problematic when a third person starts using your Wi-Fi by guessing your password right. As a result, the bandwidth of your Wi-Fi gets divided, and the network speed slows down.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X