கம்ப்யூட்டரில் மறைந்திருக்கும் விண்டோஸ் கேச்சி ஃபைல்களை டெலிட் செய்வது எப்படி?

பிரெளசரில் உள்ள கேச்சியை அவ்வப்போது க்ளியர் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

By Siva
|

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கேச்சி (Cache) என்று கூறப்படும் பைல்களை நீக்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டர் சீராக இயங்க தற்காலிக ஃபைல்களை நீக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த தற்காலிக ஃபைல்கள் பல வடிவங்களில் இருப்பதால் இவற்றை கண்டுபிடித்து நீக்க வேண்டியது ஒருசிலருக்கு சிரமமாம இருக்கலாம். அதுகுறித்து தற்போது பார்ப்போம்

தற்காலிக ஃபைல் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

கம்ப்யூட்டரில் உள்ள ரீசைக்கிள் பின் மற்றும் தற்காலிக பைல்களை 30 நாட்களுக்கு ஒருமுறை நீக்குவது அவசியம் என்ற நிலையில் இவற்றை எவ்வாறு நீக்குவது என்பதை பார்ப்போம்

ஸ்டெப் 1: செட்டிங் சென்று அங்கிருந்து ஸ்டோரேஜ் செல்லுங்கள்

ஸ்டெப் 2: ஆட்டோமெட்டிக் க்ளின் என்ற இடத்தை ஆன் செய்யுங்கள்

ஸ்டெப் 3: அங்கு இருக்கும் Change How we free up space' என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 4: இந்த இடத்தில் தான் தற்காலிக ஃபைல்கள் இருப்பதை காட்டும். அதில் டெலிட் என்ற ஆப்சனை க்ளிக் செய்துவிட்டால் போதும். இந்த ஃபைல்களை 30 நாட்களுக்கு ஒருமுறை தானாகவே டெலிட் செய்யும் ஆப்சனும் இதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக ஃபைல் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

தற்காலிக ஃபைல் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தில் தற்காலிக ஃபைல்கள் ஸ்டோர் செய்வதற்கென்றே ஒரு இடம் இருக்கும். இந்த தற்காலிக டேட்டா ஒருசில நிமிடங்களுக்கு மட்டுமே தேவைப்படும்.

பின்னர் தேவையில்லாமல் இருக்கும் இந்த ஃபைல்களை க்ளியர் செய்ய ஸ்டார்ட் க்ளிக் செய்து அதில் உள்ள டிஸ்க் க்ளின் அப்ளிகேசன் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

இந்த அப்ளிகேசன் மூலம் தேவையான டிரைவில் உள்ள தேவையற்ற ஃபைல்களை க்ளியர் செய்யலாம்.

விண்டோஸ் ஸ்டோர் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

விண்டோஸ் ஸ்டோர் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

விண்டேஸ் ஸ்டோரில் இருந்து நீங்கள் எதையாவது டவுண்ட்லோடு செய்தால் அதில் அதிகமான அளவில் கேச்சிகள் இருக்கும். இந்த கேச்சிகள் இடத்தை அதிகளவு அடைத்து கொள்வதால் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவது மட்டுமின்றி சில சமயம் ஹேங் ஆகவும் செய்யும்.

எனவே இதை முதலில் க்ளியர் செய்ய வேண்டும். இதற்கு WSReset.exe என்ற ஆப்சன் கம்ப்யூட்டரிலேயே இருக்கும். இதை எனேபிள் செய்வதன் மூலம் தேவையற்ற ஃபைல்களை டெலிட் செய்துவிடலாம்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது விண்டோஸ் கீ மற்றும் கீ போர்டில் உள்ள +R ஆகிய கீகளை ஒரே நேரத்தில் பிரஸ் செய்ய வேண்டும். அப்போது WSReset.exe ஓப்பன் ஆகும். அதில் உள்ள ஓகே பட்டனை க்ளிக் செய்தால் போதும்

3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.!3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.!

ரீஸ்டோர் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

ரீஸ்டோர் கேச்சியை க்ளியர் செய்வது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் திடீரென செயல்படுவது நின்றுவிட்டால் இந்த ரீ-ஸ்டோர் ஆப்சன் உங்களுக்கு பயன்படும். திடீரென கம்ப்யூட்டர் ஆஃப் ஆகிவிட்டால் நாம் இழந்தை ஃபைல்கள் அனைத்தையும் இந்த ரீ-ஸ்டோர் நமக்கு திருப்பி அளிக்கும்.

அதே நேரத்தில் இந்த ரீ-ஸ்டோரில் தேவையில்லாத ஃபைல்கள் சேமிக்கப்பட்டு இருந்தால் அவற்றை நீக்குவதால் கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட உதவும். இதை க்ளியர் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

System Protection -> select drive -> Configure சென்றால் அங்கு தேவையில்லாத ஃபைல்கள் இருக்கும். அதை செலக்ட் செய்து டெலிட் செய்துவிடுங்கள்

வெப் பிரெளசர் கேச்சியை க்ளியர் செய்ய வேண்டுமா?

வெப் பிரெளசர் கேச்சியை க்ளியர் செய்ய வேண்டுமா?

பிரெளசரில் உள்ள கேச்சியை அவ்வப்போது க்ளியர் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இந்த க்ளினிங் புராசஸ் உங்களுடைய பிரெளசரை பொருத்து மாறுபடும்.

நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துபவராக இருந்தால் Settings -> Advanced settings சென்று அங்குள்ள Privacy Settings என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள கேச்சி இமேஜ் மற்றும் ஃபைல்களை க்ளியர் செய்யலாம். c

நீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பிரெளசர் பயன்படுத்துபவராக இருந்தால் Settings ->Advanced section ->Network tab ->Clear Now க்ளிக் செய்தால் கேச்சிகள் மறைந்துவிடும

தம்ப்நெயில் கேச்சி (Thumbnail Cache)

தம்ப்நெயில் கேச்சி க்ளியர் செய்ய Start menu -> Disk Cleanup app செல்ல வேண்டும். பின்னர் அதில் உள்ள தம்ப்நெயில் ஆப்சனை தேடி அதை ஓகே செய்தா போதும்

Best Mobiles in India

Read more about:
English summary
General clearing up the cache on your computer is one of the easiest ways to speed up your system.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X