மலிவு விலை விமான டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் டிப்ஸ்.!

விமான பயணச்சீட்டுக்களை குறைந்த விலையில் வாங்க நினைப்போர் பயண தேதி மற்றும் பயணிக்கும் இடங்களில் சமரசம் செய்தாக வேண்டும்.

|

சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் போது விமான டிக்கெட்களுக்கு அதிக தொகையை செலுத்த வேண்டியிருக்கும். ஒருவர் பயணிக்கும் நாடுகளை பொருத்தும் சில சமயங்களில் டிக்கெட் கட்டணம் மாறுபடும், சில சமயங்களில் பயணத்தின் பாதி தொகையை பயணச்சீட்டுகளுக்கு செலவிட நேரிடும்.

மலிவு விலை விமான டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் டிப்ஸ்.!

அந்த வகையில் விமான பயணங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்களை முன்பதிவு செய்வது சிக்கலான காரியமாகும். சர்வதேச பயணங்களுக்கான விமான டிக்கெட்களை குறைந்த விலையில் கண்டறிவது சிக்கலாக இருந்தாலும், கடினமான காரியமாக இருக்காது. அந்த வகையில் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

சில பரிந்துரைகள்

சில பரிந்துரைகள்

குறைந்த விலையில் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்ய துவங்கும் முன் சிலவற்றை அவசியம் கவனிக்க வேண்டும். பயணங்களை திட்டமிடும் போது பீக் டைமிங்-ஐ தவிர்க்க வேண்டும். ஒருவேளை ஐரோப்பாவிற்கு ஆகஸ்டு மாதம் பயணிக்க வேண்டியிருப்பின், விமான கட்டணங்கள் அதிகமாக இருக்கும், இதில் குறைந்த விலையில் டிக்கெட் பெறுவதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

விமான பயணச்சீட்டுக்களை குறைந்த விலையில் வாங்க நினைப்போர் பயண தேதி மற்றும் பயணிக்கும் இடங்களில் சமரசம் செய்தாக வேண்டும். சில சமயங்களில் பயண தேதிகளை முன், பின் மாற்றியமைக்கும் போது உங்களது பட்ஜெட்டில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு சென்று திரும்பவும் தயாராக இருக்க வேண்டும். எனினும் இது இந்தியாவில் ஒத்துவராது. சில நாடுகளுக்கு செல்லும் போது டெல்லிக்கு அவசியம் செல்ல வேண்டியிருக்கும்.

விமான நிலையம் அதிக நெரிசலாக இருக்கும் போது விமான கட்டணம் குறைவாகும். விலை குறைந்தாலும், சிலருக்கு இது சங்கடமாக இருக்கலாம். விமான கட்டணமா அல்லது சவுகரியமா என்பது ஒவ்வொருத்தர் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

விபிஎன்

விபிஎன்

மற்றொரு சிறப்பான திட்டங்களில் ஒன்றாக விமான நிறுவனங்களின் சிறப்பு சலுகைகளுக்கு சந்தாதாரர் ஆவது தான். இவ்வாறு சந்தாதாரர் ஆகும் பட்சத்தில் ரவுன்டுட்ரிப்களில் அதிக சேமிப்புகளையும், இலவச விமான சீட்டு, டிக்கெட் அப்கிரேடுகள், ப்ரியாரிட்டி போர்டிங், அதிக லக்கேஜ் லிமிட்கள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை பெற முடியும். இவை விமான பயணச்சீட்டு கிடைக்காத சோகத்தை சிறிதளவேனும் சரிசெய்யலாம்.

விமானத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முன் பிரவுசர் குக்கீக்களை அழித்தோ அல்லது பிரைவேட் பிரவுசிங் வழிமுறைகளை பின்பற்றலாம். இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் விமான பயணச்சீட்டை பெற முடியும் என பல்வேறு வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருக்கின்றன. சில சமயங்களில் விபிஎன் போன்ற சேவைகளை பயன்படுத்தியும் குறைந்த கட்டணத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம்.

பரிந்துரைகளை தான்டி சர்வதேச விமான பயணங்களுக்கு சிறந்த சலுகை பெறுவது எப்படி?

பரிந்துரைகளை தான்டி சர்வதேச விமான பயணங்களுக்கு சிறந்த சலுகை பெறுவது எப்படி?

தேடுப்பொறி (Search engines)
சிறப்பான சலுகைகளை பெற விமான தேடுப்பொறி சேவைகள் உங்களுக்கு உற்ற நண்பராக அமையலாம். இங்கு நீங்கள் முயற்சிக்க சில தேடுப்பொறி சேவைகளை பட்டியலிட்டுள்ளோம்.

கூகுள் ஃப்ளைட்ஸ் (Google Flights):
உலகம் முழுக்க விமான பயணச்சீட்டுக்களை தெரிந்து கொள்ள கூகுள் ஃப்ளைட்ஸ் சிறப்பான சேவையை வழங்குகிறது. இதன் இன்டர்ஃபேஸ் சிறப்பாக இருப்பதோடு வேகமாகவும் பதில்களை வழங்குகிறது.

ஐடிஏ மேட்ரிக்ஸ் (ITA Matrix):

ஐடிஏ மேட்ரிக்ஸ் (ITA Matrix):

கூகுள் ஃப்ளைட்ஸ் மூலம் இயங்கும் மற்றொரு சேவை தான் ஐடிஏ மேட்ரிக்ஸ். எனினும், கூடுதல் சர்ச் ஆப்ஷன்களை இயக்க ஐடிஏ மேட்ரிக்ஸ் சிறப்பானதாக இருக்கிறது.

ஸ்கை ஸ்கேனர் (Skyscanner):

ஸ்கை ஸ்கேனர் (Skyscanner):

பல்வேறு விமான நிறுவனங்களின் பயணச்சீட்டு விலையை ஒப்பிட்டு பார்க்க ஸ்கை ஸ்கேனர் சிறப்பான மற்றும் பிரபல சேவையாகவும் இருக்கிறது. மிக எளிமைான இன்டர்ஃபேஸ் சீரான வேகத்தில் இயங்குவதால் விலையை மிக சுலபமாக அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி குறைந்த விலை வழங்கும் நிறுவனங்களை நீங்கள் தவறவிடாமல் பார்த்துக் கொள்ளும். இந்த சேவை ஸ்மார்ட்போன் செயலி வடிவிலும் வழங்கப்படுகிறது.

மொமோன்டோ (Momondo):

மொமோன்டோ (Momondo):

மிக குறைந்த விலை விமான பயணச்சீட்டுக்களை அறிந்து கொள்ள மொமோன்டோவும் சிறப்பான சேவையை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் புள்ளிகளின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதிக புள்ளிகளை பெற்றிருக்கும் நிறுவனத்தை தேர்வு செய்து பயண கட்டணம் மட்டுமின்றி நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

பிரைஸ்லைன் (Priceline):

பிரைஸ்லைன் (Priceline):

சிறப்பான வடிவமைப்பு கொண்டு விமான பயணத்தை குறைந்த செலவில் மேற்கொள்ள பிரைஸ்லைன் சிறந்த சேவையை வழங்குகிறது. இந்த சேவையானது குறைந்த கட்டணம் கொண்ட விமான நிறுவனத்தை வேகமாக காட்டுகிறது.

 கிவி (Kiwi):

கிவி (Kiwi):

மற்ற தேடுப்பொறிகளை விட கிவி.காம் மிக குறைந்த கட்டணங்களை சில சமயங்களில் காண்பிக்கும். அந்த வகையில் விமான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்யும் முன், இந்த தளத்தை ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.

இந்த வழிமுறைகள் பெரும்பாலும் வேலை செய்யும், எனினும் இவை வேண்டாமெனில், கீழே தொகுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கொண்டும் மலிவு விலை விமான பயணச்சீட்டுக்களை கண்டறிய முடியும்.

சிறப்பான விமான அனுபவத்தை வழங்கும் சேவைகள்

சிறப்பான விமான அனுபவத்தை வழங்கும் சேவைகள்

விமான பயணங்களுக்கு சிறப்பான சலுகைகளை உங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பும் பல்வேறு சலுகைகள் உள்ளன. இவற்றில் சில சேவைகள் சந்தா கட்டணம் செலுத்தக்கோரும், அதை வைத்தே வியாபாரத்தை இயக்கி வருகின்றன. அந்த வகையில் இந்த சேவைகள் தொடர்ந்து சிறப்பான சலுகைகளை தேடிப்பிடித்து உங்களுக்கு தெரிவிக்கும்.

இவை அதிக சலுகை வழங்கும் நிறுவனங்களை மட்டுமே உங்களுக்கு காண்பிக்கும், அந்த வகையில் இவற்றுக்கு அதிக தொகை வழங்கும் விமான நிறுவனங்களை இவை உங்களுக்கு தெரிவிக்காது. இதுபோன்ற சேவைகளுக்கு சந்தா செலுத்தும் முன் உங்களது பகுதி குறித்த விவரத்தை குறிப்பிட வேண்டும்.

ஸ்காட் குறைந்த கட்டண விமானங்கள்: உங்களது பகுதியில் கிடைக்கும் சிறப்பான விமான சலுகைகளை இந்நிறுவனம் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும். இந்நிறுவனம் அனுப்பும் சலுகைகளுடன் சில விளம்பரங்களும் அனுப்பப்படும், இது ஒரு இலவச சேவை என்பதால் விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன.

பிரீமியம் சந்தாதாரர் ஆக விரும்புவோர் 39 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,500) ஆண்டு சந்தாவாக செலுத்த வேண்டும். இந்த சேவை மற்ற பகுதிகளை விட ஆசிய பகுதிக்கான சலுகைகளை அதிகளவு வழங்கியது..

ஃப்ளைஸ்டெயின் (Flystein):

ஃப்ளைஸ்டெயின் (Flystein):

இதுவரை தொகுக்கப்பட்டதிலேயே மிகவும் தனிப்பட்ட சேவையை வழங்கும் சேவையை எதிர்பார்க்கிறீர்களா?

உங்களுக்கு ஏற்ற சேவையாக ஃப்ளைஸ்டெயின் இருக்கும். நீங்கள் வழங்கும் பயண தேதிகளில் கிடைக்கும் விலை குறைந்த சேவைகளை பரிந்துரைக்கும். செல்ல வேண்டிய இடம் மற்றும் தேதியை குறிப்பிட்டால் வேலை முடிந்தது. எனினும் இந்த சேவையை பயன்படுத்த ஆண்டுக்கு 49 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,150) என நிர்ணயம் செயய்பபடுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
 மறைக்கப்பட்ட கட்டண முறை:

மறைக்கப்பட்ட கட்டண முறை:

இந்த வழிமுறை அதிக ரிஸ்க் கொண்டிருக்கும் அதே சூழலில் குறைந்த கட்டணத்தையும் பெற முடியும். அந்த வகையில் மும்பையில் இருந்து டெல்லி செல்ல வேண்டுமெனில் டெல்லியில் திரையிறங்கு அங்கிருந்து லக்னோ செல்லும் விமானத்தை தேர்வு செய்யலாம்.

இது சரியாக வேலை செய்ய கேபினி பேக்கேஜ் அவசியமான ஒன்றாகும். இந்த வழிமுறையை முயற்சிக்கும் முன் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்யவும். இவ்வாறு செய்யும் போது உங்களுக்கான சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படவோ அல்லது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் விமானங்களை பயன்படுத்துவதில் தடங்கல்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற ரிஸ்க் எடுக்க தயார் எனில் தைரியமாக இதனை பின்பற்றலாம்.

Best Mobiles in India

English summary
How to Find Cheapest Flight Tickets for International Travel : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X