இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை ஸ்டார் குறியிடுவது மற்றும் ஃபில்டர் செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதன் மிகமுக்கிய காலகட்டமான இப்போது, மிகவும் நல்ல மற்றும் மேம்படுத்த அம்சங்களை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அதில் மற்றுமொரு அம்சமாக நம் சேட்டில் உள்ள மெசேஜை ஸ்டார் என மார்க் செய்து அதன் மூலம் தேவையான மெசேஜ்களை ஃபில்டர் செய்யலாம்.

தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த அம்சமானது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வசதி ஆண்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும். இது அறிமுகபடுத்தப்பட்ட பின்பு, படிக்காத மற்றும் ஸ்டார் செய்த மெசேஜ்களை ஃபில்டர் செய்து பார்க்க முடியும். இந்த வசதியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே காணலாம்.
இன்ஸ்டாகிராமில் மெசேஜை ஸ்டார் செய்வது எப்படி?
நமக்கு எப்போதும் பிரத்யோகமான/விசேஷமான மெசேஜ்களை ஸ்டார் குறியிடுவது பிடிக்கும் இல்லையா? அப்படி செய்வதன் மூலம் அந்த மெசேஜ்கள் தனித்துவமானது மற்றும் முக்கியமானது என அடையாளப்படுத்துகிறோம். ஸ்டார் குறியிட்ட மெசேஜ்களை எளிதாக பிறவற்றிலிருந்து பிரித்து பார்க்க முடியும். ஒரு மெசேஜை ஸ்டார் குறியிட்ட பின், புதிய வசதியை பயன்படுத்தி எளிதில் ஃபில்டர் செய்யவும் முடியும். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.

படி #1
இன்ஸ்டாகிராம் செயலியை இயக்கி, அதன் வலபக்க மூலையில் உள்ள DM(direct message) ஐகானை கிளிக் செய்யவும்.
படி #2
ஸ்டார் குறியிட வேண்டிய மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி பிடித்தால் ஒரு பாப்அப் பட்டியல் தோன்றும். அதில் ஸ்டார் ஐகானை கிளிக் செய்யவும்.
உங்கள் உரையாடல் (Chat) உள்ளேயும் மெசேஜை ஸ்டார் குறியிட முடியும். முதலில் உரையாடலை பக்கத்தை திறந்து அதன் மேல்பக்கம் உள்ள ஸ்டார் ஐகானை கிளிக் செய்யலாம். ஸ்டாரை நீக்க அதே வழிமுறையை மீண்டும் செய்து நீக்கி விடலாம். அதற்கான வழிமுறை பின்வருமாறு.
படி #1
இன்ஸ்டாகிராம் செயலியை இயக்கி, அதன் வலபக்க மூலையில் உள்ள DM(direct message) ஐகானை கிளிக் செய்யவும்.
படி #2
ஸ்டார் குறியை நீக்க வேண்டிய மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி பிடித்தால் ஒரு பாப்அப் பட்டியல் தோன்றும். அதில் அன்-ஸ்டார் ஐகானை கிளிக் செய்யவும்.
இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை ஃபில்டர் செய்வது எப்படி?
மெசேஜை ஸ்டார் குறியிட மற்றும் அதை நீக்க நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்போது மெசேஜை ஃபில்டர் செய்வது எப்படி என காணலாம். ஸ்டார் குறியிட்ட மற்றும் படிக்காத மெசேஜை தனித்து பார்க்க இந்த ஃபில்டர் அம்சம் உதவும். அதற்கான வழிமுறை பின்வருமாறு.
படி #1
இன்ஸ்டாகிராம் செயலியை இயக்கி, அதன் வலபக்க மூலையில் உள்ள DM(direct message) ஐகானை கிளிக் செய்யவும்.
படி #2
தேடல் பட்டைக்கு (Search bar) அருகில் புதிய ஃபில்டர் ஐகானை பார்க்க முடியும்.
படி #3
அதில் ஃபில்டர் செய்யவேண்டிய மெசேஜ் வகைகளை தேர்வு செய்யலாம். அதன் 3 வகைகள் இன்பாக்ஸ் மெசேஜ், அன்ரீஃட் மெசேஜ் மற்றும் ஸ்டார் மெசேஜ்
இன்பாக்ஸ் மெசேஜ் வகையில் அனைத்து மெசேஜ்களையும் பார்க்கலாம். ஸ்டார் மெசேஜை பயன்படுத்தி அனைத்து ஸ்டார் குறியிட்ட மெசேஜ்களையும் பார்க்கலாம். அன்ரீஃட் மெசேஜ் வகையில் அனைத்து படிக்காத மெசேஜ்களையும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications