கூகுள் அல்லோ தகவல்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கு எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

கூகுள் தனது அல்லோ செயலியை நிறுத்துவதாக எடுத்திருக்கும் முடிவு இந்த செயலியை பயன்படுத்துவோருக்கு கெட்ட செய்தியாகவே இருக்கும்.

|

வாட்ஸ்அப் மற்றும் இதர குறுந்தகவல் செயலிகள் பெற்றிருக்கும் வரவேற்பை பெற கூகுளின் அல்லோ செயலி தவறிவிட்டது என்றே கூறலாம். கூகுள் அல்லோ செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு, கூகுள் இந்த செயலிக்கான சேவையை மார்ச் 2019 முதல் நிறுத்துவதாக கூறும் பாப்-அப் தகவல் அடிக்கடி திரையில் தோன்றி வருகிறது.

கூகுள் அல்லோ தகவல்களை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

கூகுள் தனது அல்லோ செயலியை நிறுத்துவதாக எடுத்திருக்கும் முடிவு இந்த செயலியை பயன்படுத்துவோருக்கு கெட்ட செய்தியாகவே இருக்கும். எனினும், கூகுள் இந்த செயலியை பயன்படுத்துவோர் தங்களது தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யும் வழிமுறைகளை வழங்க துவங்கியுள்ளது. இதன் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டாலும், பயனர்கள் தங்களின் தகவல்களை மட்டும் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

கூகுள் அல்லோ செயலியில் உங்களது தகவல்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு எக்ஸ்போர்ட் செய்வதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்:


எக்ஸ்போர்ட் கூகுள் அல்லோ டேட்டா
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் தகவல்களை எக்ஸ்போர்ட் செய்ய ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாலும், இவற்றில் சில முக்கிய வழிமுறைகளில் மாற்றம் இருக்கும்.

கூகுள் அல்லோ தகவல்களை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

ஐபோனில் கூகுள் அல்லோ தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யும் முறை
கூகுள் அல்லோ பயனர் விவரங்களை எக்ஸ்போர்ட் செய்வது எளிமையான காரியம் தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களின் மெசேஜ்கள் மற்றும் மீடியா விவரங்களை சாட்களில் இருந்து எக்ஸ்போர்ட் செய்துவிட முடியும்.

1 - முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களின் அல்லோ செயலியை லான்ச் செய்து மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் செயலியின் மேல்புறம் இடதுபக்கமாக இருக்கும். இங்கு செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

2 - கீழே “Export messages from chats” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பின் “Export media from chats” ஆப்ஷன்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய ஆப்ஷன் திரையில் தோன்றும், இங்கு நீங்கள் தகவல்களை காப்பி செய்தோ அல்லது உங்களது மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

கூகுள் அல்லோ தகவல்களை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?
கூகுள் அல்லோ விவரங்களை ஆண்ட்ராய்டு தளத்தில் எக்ஸ்போர்ட் செய்வதற்கான வழிமுறைகள்:

கூகுள் அல்லோ செயலியின் விவரங்களை ஆண்ட்ராய்டு தளத்தில் எக்ஸ்போர்ட் செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1 - முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களின் அல்லோ செயலியை லான்ச் செய்து மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் செயலியின் மேல்புறம் இடதுபக்கமாக இருக்கும். இங்கு செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

2 - கீழே “Export messages from chats” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பின் “Export media from chats” ஆப்ஷன்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்ய வேண்டும். முதல் ஆப்ஷனை கிளிக் செய்ததும் உங்களது சாட் விவரங்களும், இரண்டாவது ஆப்ஷனில் உங்களது மீடியா விவரங்களும் எக்ஸ்போர்ட் ஆகும்.

3 - அடுத்து உங்களது சாட் விவரங்கள் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்களின் அனைத்து விவரங்களும் CSV எனும் ஃபைல் வடிவில் சிப் ஃபைலினுள் சேமிக்கப்படும்.

4 - உங்களின் அனைத்து விவரங்களும் CSV எனும் ஃபைல் வடிவில் சிப் ஃபைலினுள் சேமிக்கப்பட்டதும், அவற்றை நீங்கள் உங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் இயக்க முடியும்.

கூகுள் அல்லோ செயலியை பயன்படுத்தி வரும் பட்சத்தில், உங்களது தகவல்களை சேமிப்பது மிகவும் எளிமையான காரியம் தான். இதனால் உங்களின் தகவல்கள் நிரந்தரமாக அழிக்கப்படும் முன் அவற்றை சேமித்து வைப்பது நல்லது. மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்களது தகவல்களை ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பாதுகாப்பாக எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to export Google Allo data on Android and iOS: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X