தொலைந்து போன ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள தரவுகளை அழிப்பது எப்படி?

|

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.

தொலைந்து போன ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள தரவுகளை அழிப்பது எப்படி?

உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம்.

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும்.

வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:
இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் -- Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

வாட்ஸ்ஆப் : புதிய 'லைவ் லொகேஷன்வாட்ஸ்ஆப் : புதிய 'லைவ் லொகேஷன்" தொழில்நுட்பம் அறிமுகம்.!

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

Best Mobiles in India

English summary
Unfortunately, at times, we lose our smartphone/tablet or it might get stolen as well without our knowledge. Today, we guide you on how to erase the content, lock the device and with little luck retrieve the phone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X