வாட்ஸ்ஆப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்வது எப்படி.?

Written By:

வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாயமற்ற அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்வது எப்படி.?

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் படி, பயனர் ஒருமுறை இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்து விட்டால் வாட்ஸ்ஆப்பில் எந்தவொரு தொலைபேசி எண்ணை சரிபார்க்க முயற்சித்தாலும்ஏற்கனவே பயனரால் உருவாக்கப்பட்ட ஆறு இலக்க கடவுக்குறியீடு தேவைப்படும்.

உங்கள் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அமைக்க விரும்பினால் பின்வரும் நடவடிக்கைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.

1. உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறக்கவும்.
2. செட்டிங்ஸ் செல்லவும்
3. அக்கவுண்ட் செல்லவும்
4. டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அணுகவும்
5. 'எனேபிள்' ஆப்ஷனை டாப் செய்யவும்
6. அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்
7. மீண்டும் ஒருமுறை ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்.
8. (விருப்பமிருந்தால்) அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் இமெயில் விலாசத்தை பதிவிடவும்.

கடைசிப்படியில் உங்களுக்கு விருப்பமென்றால் என்று குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உடன் இணைக்க காரணம் என்னவென்றால் ஒருவேளை பயனர் அளித்த ஆறு இலக்க கடவுக்குறியீடை மறந்துவிட்டால் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக ஒரு இணைப்பை அனுப்பி டூ-ஸ்டெப்னை 'டிஸ்சேபிள்' செய்துக்கொள்ள தான் என்பதை பயனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் பல வகையான டூடோரியல்களுக்கு எங்களின் 'டெக் டிப்ஸ்' தொகுப்புகளுக்கு வருகை புரியவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Read more about:
English summary
How to Enable Two-Step Verification on WhatsApp. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot