பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லைவ் அறிவிப்புகளைச் செயல்படுத்துவது எப்படி?

Posted By: Jijo Gilbert
    X

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வரும் எந்தொரு லைவ் அறிவிப்புகளையும் எப்போதும் இழக்காதீர்கள்.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லைவ் அறிவிப்புகளைச் செயல்படுத்துவது எ

    நமது கலாச்சாரத்திற்குள் நுழைந்து நிலையான வளர்ச்சி மற்றும் ஐக்கியத்தை பெற்றுள்ள சமூக வலைத்தளங்களால், நாம் இருக்கும் சமுதாயத்தில் இருந்த சந்திப்பு மற்றும் வாழ்த்துதல் ஆகியவற்றில் பெருமளவு மாற்றங்களைச் சந்தித்துள்ளோம்.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள லைவ் அம்சம், ஒன்றுக்கொன்று ஒத்தவை அல்ல என்றாலும், ஒவ்வொன்றும் தனித்திறன்களைப் பெற்று, தனித்தன்மைகளைக் கொண்டவையாக உள்ளன.

    பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் நீங்கள் பின்பற்றும் சுயவிவரங்களின் லைவ் வீடியோக்களைப் பார்ப்பது, ஆன்லைனில் அவ்வப்போது பயனர்களுக்கு ஒரு முறையாவது காணக் கிடைக்கும் அனுபவத்தைப் போன்றதாகும். தங்கள் விருப்பமான பிரபலங்களுடனான நிகழ்நேர தொடர்பை பெறும் வாய்ப்பை இழந்தவராக இருக்க யாராவது விரும்புவார்களா? அல்லது லைவ் பார்வையாளர்களுக்கான அறிவிப்புகள் அல்லது புதுப்பிப்புகளைப் பிரத்யேகமாக தனிப்பட்ட முறையில் கிடைக்கப் பெறும் வாய்ப்பை இழப்பதை ஏற்பார்களா?

    Instagram Simple Tips and Tricks (TAMIL)
    இதை படித்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் பின்பற்றும் சுயவிவரத்தில் லைவ் செய்யப்பட்டிருக்கும் நிகழ்நேர புதுப்பிப்புகளைப் பெறுவது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாங்கள் விளக்கியுள்ளதால், ஒரு வீடியோவை கூட இனி நீங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    பேஸ்புக் லைவ் அறிவிப்புகள்

    1) உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழையவும்.

    2) எப்போதும் தகுந்த உள்ளடக்கத்தை வெளியிடும் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கவும்.

    3) பின்பற்று என்பதைக் குறிக்கும் பொத்தானின் மேலே வட்டமிடுவதன் மூலம் கீழே நோக்கி வரும் ஒரு பட்டியல் அணுகலை நீங்கள் பெறலாம்.

    4) அறிவிப்புகளுக்கு கீழே நோக்கி உருட்டவும்.

    5) அறிவிப்புகளுக்கு அடுத்தப்படியாக உள்ள திருத்தம் என்ற பொத்தானைத் தட்டவும்.

    6) லைவ் வீடியோக்களைக் குறித்த அறிவிப்புகளைப் பெறும் வகையில், 'எல்லா லைவ் இடுகைகள்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

    குறிப்பிட்ட சுயவிவரத்தை மட்டும் நீங்கள் பின்பற்ற விரும்வதோடு, யார் லைவ் செய்தாலும் ஒவ்வொரு முறையும் அறிவிப்புகளின் ஒரு குவியலைப் பெற விரும்பவில்லை எனில், அதற்கு கூட விருப்பத்தேர்வுகள் காணப்படுகின்றன.

    மற்ற விருப்பத்தேர்வுகள்

    லைவ் அறிவிப்புகளின் டேப்-பிற்குள் சென்று, 'எல்லா லைவ் இடுகைகள்' தேர்ந்தெடுப்பதை நீக்குவதன் மூலம் லைவ் அறிவிப்புகளைப் பெறுவதை முடக்கலாம்.

    ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு நாள் ஒன்றும் மூன்று அறிவிப்புகள் மட்டும் என்று கூட வரம்பை நிர்ணயிக்க முடியும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட லைவ் வீடியோக்களுக்கு மட்டும் அறிவிப்புகளைப் பெறுவதையும் முடுக்குவிக்க முடியும்.

    ஐஓஎஸ் வரம்பை விட ஐபோனின் ஒளிர்வை குறைப்பது எப்படி?

    இன்ஸ்டாகிராம் லைவ் அறிவிப்புகள்

    இன்ஸ்டாகிராமின் லைவ் அறிவிப்புகள் பொதுவாகவே இயக்கப்பட்ட நிலையில் தான் இருக்கும். இதில் உள்ள ஒரே ஒரு பின்னடைவு என்னவென்றால், குறிப்பிட்ட காரியங்களின் அடிப்படையில் இதை நிர்ணயிக்க முடியாது.

    லைவ் அறிவிப்புகளை எல்லா கணக்குகளுக்கும் இயக்கப்பட்ட நிலையில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரேயடியாக அந்த அம்சத்தை முடக்கிவிட வேண்டும்.

    1) உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்நுழையவும்.

    2) இன்ஸ்டாகிராமின் உங்கள் சுயவிவரத்திற்குள் நுழையவும்.

    3) அப்ளிகேஷன் அமைப்புகளுக்குச் செல்லவும்.

    4) கீழே உருட்டி, அறிவிப்பு அமைப்புகளை முடுக்கு என்பதை தட்டவும்.

    5) இந்தத் திரையை முழுமையாக கீழ் நோக்கி உருட்டி சென்று, லைவ் வீடியோக்களுக்கு கீழே நம் விருப்பத்திற்கேற்ப "ஆன்" அல்லது "ஆஃப்" என்ற பொத்தான்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    Read more about:
    English summary
    You can follow the live videos by getting live notifications from Facebook and Instagram profiles that you follow on following these steps.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more