விண்டோஸ் 10 இயங்குதளத்தின் கூகுள் க்ரோமில் டார்க் மோட் எனேபிள் செய்வது எப்படி?
எனினும், இது கூகுள் க்ரோமின் கனெரி திட்டத்தில் கிடைக்கிறது. கூகுள் க்ரோம் கனெரி திட்டத்தில் க்ரோம் பிரவுசருக்கான புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படும்.
விண்டோஸ் 10 இயங்குதளத்தின் லைட் மற்றும் டார்க் தீம் போன்றே அம்சம் கூகுள் க்ரோம் சேவையிலும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் க்ரோமின் டார்க் மோட் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. எனினும், இது கூகுள் க்ரோமின் கனெரி திட்டத்தில் கிடைக்கிறது. கூகுள் க்ரோம் கனெரி திட்டத்தில் க்ரோம் பிரவுசருக்கான புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படும்.

டார்க் மோட் பயன்படுத்தும் போது குறைவான வெளிச்சமுள்ள சூழல்களிலும் கண் சோர்வு ஏற்படாது மேலும் இதை பயன்படுத்தும் போது சில AMOLED டிஸ்ப்ளேவில் குறைந்தளவு பேட்டரி பயன்படுத்தப்படும்.
க்ரோமின் டார்க் தீம் பயனரின் யு.ஐ. தீமிற்கு ஏற்ப தானாக டார்க்/லைட் மோடிற்கு மாற்றிக் கொள்ளும். கூடுதலாக டார்க் அல்லது லைட் தீம்களை பயனர் தேர்வு செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. கூகுள் க்ரோமில் டார்க் மோட் பயன்படுத்த விரும்புவோர் தொடர்ந்து வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

முதலில் செய்ய வேண்டியவை:
ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று டார்க் மோட் அம்சம் கூகுள் க்ரோம் கனெரி திட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தனி பிரவுசரை டவுன்லோடு செய்ய வேண்டும்.
மேலும் டெஸ்ட் பிரவுசரை டீஃபால்ட் பிரவுசராக செட் செய்ய வேண்டும்.
- கணினியில் கூகுள் க்ரோம் கனெரி பிரவுசரை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- க்ரோம் கனெரி டவுன்லோடு செய்ததும், ரைட் க்ளிக் செய்து ப்ராபர்டீஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி ஷார்ட்கட் ஆப்ஷனில் டார்கெட் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி சின்டாக்ஸ் பகுதியை 'chrome.exe' --force-dark-mode’ மாற்ற வேண்டும்.
- இனி அப்ளை பட்டனை க்ளிக் செய்து ஆப்ஷனை உறுதப்படுத்த வேண்டும்.

இனி கூகுள் க்ரோம் கனெரி டார்க் மோடில் செட் இயங்க துவங்கும்.
டார்க் மோட் ஆப்ஷனை செயலிழக்கச் செய்ய டார்கெட் ஃபீல்டு பகுதியில் இருந்து டார்க் மோட் வார்த்தை எடுத்துவிட வேண்டும்.


Click it and Unblock the Notifications