கூகுள் ஃபைல்ஸ் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து அதிகபட்சம் ரூ.1,000 பெறுவது எப்படி?

குறிப்பாக, கூகுள் நிறுவனம் தனது ஃபைல்ஸ் கோ செயலியை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்து, அதன் பெயரை கூகுள் ஃபைல்ஸ் என ரீபிரான்டு செய்தது.

|

கூகுள் டுயோ மற்றும் கூகுள் பே மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற வாக்கில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலாவி வந்தது. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் கூகுள் ஃபைல்ஸ் ஆப் மூலம் பயனர்களுக்கு பணம் வழங்குவதாக தெரிகிறது.

கூகுள் ஃபைல்ஸ் மூலம் அதிகபட்சம் ரூ.1,000 பெறுவது எப்படி?

குறிப்பாக, கூகுள் நிறுவனம் தனது ஃபைல்ஸ் கோ செயலியை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்து, அதன் பெயரை கூகுள் ஃபைல்ஸ் என ரீபிரான்டு செய்தது. இந்த செயலி ஸ்டோர் மேனேஜர் மற்றும் ஸ்பேஸ் கிளீனர் போன்று செயல்படுகிறது. இதைக் கொண்டு ஸ்மார்ட்போனின் மெமரியை ஒற்றை கிளிக் மூலம் காலி செய்து விட முடியும்.

கூகுள்

கூகுள்

தற்சமயம் கூகுள் ஃபைல்ஸ் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்யும் பயனர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. கூகுள் டுயோ ரிவார்டு திட்டம், போன்றே பயனர்கள் கூகுல் பே செயலியை பயனர்கள் தங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

கூகுள் ஃபைல்ஸ் ரிவார்ட்ஸ் திட்டம்:

கூகுள் ஃபைல்ஸ் ரிவார்ட்ஸ் திட்டம்:

கூகுள் ஃபைல்ஸ் செயலியை ஏற்கனவே பயன்படுத்துவோர் மற்றும் புதிதாக இன்ஸ்டால் செய்வோரும் ரிவார்ட்ஸ் திட்டத்தில் பங்கு பெற முடியும். கூகுள் அக்கவுன்ட்டில் சைன் செய்து முதல் முறை ஆஃப்லைன் வழியில் தரவுகளை பகிர்ந்து கொள்ளும் போது உங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். பரிசுத் தொகையை பெற கூகுள் பே அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும்.


இதுவரை ரிவார்ட் பெறாத பயனர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் போது அதிகபட்சம் ஒன்பது முறை வரை கூடுதல் பரிசுத் தொகையை பெற முடியும். எனினும் கூகுள் ரிவார்ட்ஸ் திட்டம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம்.

பரிசுத் தொகை பெற தேவையான தகுதி:

பரிசுத் தொகை பெற தேவையான தகுதி:

கூகுள் ஃபைல்ஸ் ஆப் மூலம் பரிசுத் தொகை பெற நீங்கள் ஆன்ட்ராய்டு பயனராக இருக்க வேண்டும். மேலும், நீங்கள் கூகுள் பே செயலியை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். கிஸ்பாட்டில் ரிவார்ட் திட்டத்தின் கீழ் சிலமுறை பரிசுத் தொகையை பெற்று இருக்கிறோம்.

 ஃபைல்ஸ் கோ மூலம் ரிவார்ட்ஸ் பெறுவது எப்படி?

ஃபைல்ஸ் கோ மூலம் ரிவார்ட்ஸ் பெறுவது எப்படி?

முதலில், கூகுள் ஃபைல்ஸ் செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் செயலியின் கீழ் வலதுபுறத்தில் காணப்படும் ஷேர் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி, உங்களது கூகுள் அக்கவுன்ட்டை கூகுள் பே அக்கவுன்ட்டுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பரிசுத் தொகையை பெற முடியும்.

இனி செயலியின் செட்டிங்ஸ் சென்று, தகவல்களை பரிமாற்றம் செய்யலாம். தகவல் பரிமாற்றம் செய்து முடித்த பின் மெனுவிற்கு சென்று பரிசுத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். இனி Claim with GPay ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது தகவல் பரிமாற்றத்திற்கு நீங்கள் பெற்று இருக்கும் பரிசுத் தொகையை அறிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to earn up to Rs. 1,000 cash reward by sharing files using Google Files: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X