ஆப்லைனில் யூடியூப் வீடியோக்களை பார்க்க பதிவிறக்கம் செய்வது எப்படி?

இணையவசதி இல்லாத இடங்களுக்கு பயணிக்கும் போது, யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது என்பது கடினமான ஒன்று. யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்று.

|

இணையவசதி இல்லாத இடங்களுக்கு பயணிக்கும் போது, யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது என்பது கடினமான ஒன்று. யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்று. ஒரு முறை பதிவிறக்கம் செய்து விட்டால், உங்களுக்கு சௌகரியமான நேரத்தில், இணையவசதி இல்லையென்றாலும் வீடியோக்களை பார்க்க முடியும். வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி எனக் கூறும் அதே வேளையில், அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது.

ஆப்லைனில் யூடியூப் வீடியோக்களை பார்க்க பதிவிறக்கம் செய்வது எப்படி?


இதன் நோக்கம் அனைவரும் ஆப்லைனில் வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்பதே தவிர, பதிப்புரிமையை மீறுவதற்காக அல்ல. பதிப்பாளரின் முன்அனுமதி இன்றி பதிவிறக்கம் செய்யவேணடாம். வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதை பதிப்பாளர் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என எண்ணிணால் பின்வரும் வழிமுறையின் மூலம் பதிவிறக்கம் செய்யுங்கள்.

யூடியூப் ஆப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆண்ராய்டு மற்றும் ஐ.ஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய யூடியூப் அனுமதிக்கிறது. வழிமுறைகள் இதோ..

1) உங்கள் ஸ்மார்ட்போனில் யூடியுப் செயலியை இயக்குங்கள்

2) எதாவது ஒரு வீடியோவை திறங்கள்

3) டைட்டிலுக்கு கீழே 'Share' மற்றும் 'Add on' இடையே 'Download' பட்டன் இருக்கும். இதன் மூலம் பதிப்பாளர் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறாரா என அறியலாம்.

4) அந்த Download கிளிக் செய்தவுடன், நமக்கு தேவையான நேரத்தில் ஆப்லைனில் பார்க்கும் வகையில் வீடியோக்கள் பதிவிறக்கம் ஆகும்.

இப்போதைக்கு இம்முறை தான் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய சிறந்தது. அனைத்து வீடியோக்களுக்கும் இந்த வசதி கிடைக்காது மற்றும் மொபைல் போனில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். வீடியோக்களை உங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்ய மேலும் கீழே படியுங்கள். இதன்மூலம் யூடியூப் விதிகளை மீறுகிறீர்கள் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

ஆப்லைனில் யூடியூப் வீடியோக்களை பார்க்க பதிவிறக்கம் செய்வது எப்படி?


விண்டோஸ், மேக், லினெக்ஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
விண்டோஸ், மேக், லினெக்ஸ் இயங்குதளங்களில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 4K video downloader என்னும் இலவச செயலி கிடைக்கிறது. இதில் பதிவிறக்கம் செய்யும் போது வீடியோ ரெசல்யூசனை நாமே தேர்வு செய்யலாம்.

1) 4K video downloader செயலியை பதிவிறக்கம் செய்யவும்

2) பதிவிறக்கம செய்ய வேண்டிய யூடியூப் வீடியோவின் URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

3) 4K video downloader செயலியை திறந்து, Paste link எனும் பச்சை நிற பட்டனை அழுத்தவும்

4) பின்னர் வீடியோவை பார்ஸ் செய்து, பதிவிறக்கம் செய்ய தேவையான ரிசல்யூசன்கள் காட்டப்படும். அதில் ஒன்றை தேர்வு செய்து, Browse பட்டனை கிளிக் செய்து எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். பின்னர் Download பட்டனை கிளிக் செய்யவும்.

ஆப்லைனில் யூடியூப் வீடியோக்களை பார்க்க பதிவிறக்கம் செய்வது எப்படி?

உடனே உங்கள் தேர்வுக்கு ஏற்ப வீடியோ பதிவிறக்கம் ஆக ஆரம்பிக்கும். இம்முறையை விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ்-ல் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இன்றி செயல்பட்டது. அதிகப்படியாக 720p ரிசல்யூசன் கிடைக்கும் இது யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய சிறந்த முறை தான்.

இணையதளங்களை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்வது எப்படி?

செயலிகளை பயன்படுத்தி யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இயலவில்லையா? கவலை வேண்டாம். இணைய உலாவி(Web browser) மூலம் எளிதாக பதிவிறக்கலாம்.

1) https://www.vdyoutube.com தளத்திற்கு செல்லவும்

2) யூடியூப் வீடியோவின் URL ஐ காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

3) GO வை கிளிக் செய்யவும்

4)பின்னர் சிவப்பு நிற Download பட்டனை கிளிக் செய்யவும்.

5) பின்னர் MP4, 3GB போன்று தேவையான பார்மேட்டை தேர்வு செய்து வீடியோவை பதிவிறக்கம் செய்யலாம்.


இம்முறையில் 720P வீடியோக்களை எந்த சிரமமும் இன்றி பதிவிறக்கலாம். மேலும் அதிக ரெசல்யூசன் தேவைப்பட்டால், ஆடியோ இல்லாமல் வீடியோ பதிவிறக்கம் ஆகும்.இம்முறை ஆண்ராய்டு மற்றும் ஐ ஓ.எஸ்ல் பயன்படாது.

ஆப்லைனில் யூடியூப் வீடியோக்களை பார்க்க பதிவிறக்கம் செய்வது எப்படி?


ஆண்ராய்டு போனில், www.savefrom.net தளத்திற்கு சென்று, Desktop Site என மாற்றி (க்ரோமில் 3 புள்ளிகளை கிளிக் செய்து desktop site தேர்வு செய்யலாம்) மேற்கூறிய அதே வழிமுறையில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to Download YouTube Videos for Offline Viewing: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X