யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய நறுக் டிப்ஸ்.!

டவுன்லோடு செய்யப்படும் வீடியோ பொதுவெளியில் இருப்பின் அது காப்புரிமை மீறல் பிரச்சனையாகி விடும். இவ்வாறான சமயத்தில் வீடியோவுக்கு உரிய நபரிடம் இருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

|

யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது குற்றமா?

யூடியூப் வீடியோக்களை மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு டவுன்லோடு செய்வது மிகப்பெரிய குற்றமாகும். வீடியோக்களை யூடியூப் சர்வர்களில் இருந்து ஸ்டிரீம் செய்யவே அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய நறுக் டிப்ஸ்.!

டவுன்லோடு செய்யப்படும் வீடியோ பொதுவெளியில் இருப்பின் அது காப்புரிமை மீறல் பிரச்சனையாகி விடும். இவ்வாறான சமயத்தில் வீடியோவுக்கு உரிய நபரிடம் இருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய சில ஆப்ஷன்கள் வெப் சேவை மற்றும் சொந்த செயலிகளில் யூடியூப் வழங்குகிறது. இந்த தொகுப்பில் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 கம்ப்யூட்டருக்கு யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

கம்ப்யூட்டருக்கு யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

1. முதலில் 4K வீடியோ டவுன்லோடரை டவுன்லோடு செய்ய வேண்டும்.

விண்டோஸ் கம்ப்யூட்டரில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முதலில் 4K வீடியோ டவுன்லோடரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இலவசமாக கிடைக்கும் இந்த செயலியை கொண்டு பிளே லிஸ்டகள், மற்றும்

360 கோணத்தில் 3D வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும். இவ்வாறு செய்ததும், லான்ச் செய்து ஃபினிஷ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வீடியோ யூஆர்எல்-ஐ காப்பி செய்ததும், வீடியோ டவுன்லோடர் செயலியில் உள்ள பச்சை நிற பெட்டியில் பேஸ்ட்செய்ய வேண்டும்.

2. வீடியோ யூஆர்எல் காப்பி, பேஸ்ட் செய்யவும்

2. வீடியோ யூஆர்எல் காப்பி, பேஸ்ட் செய்யவும்

வெப் பிரவுசரை திறந்து, யூடியூபில் நீங்கள் டவுன்லோடு செய்ய வேண்டிய வீடியோ யூஆர்எல்-ஐ காப்பி செய்து 4K வீடியோ டவுன்லோடரில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

இனி மென்பொருளானாது, வீடியோ மற்றும் அதன் தரம் குறித்த ஆப்ஷன்களை திரையில் காண்பிக்கும். இவற்றில் உண்மையான வீடியோவின் தரத்தை பொருத்து ஆப்ஷன்கள் மாறுபடும். வீடியோ தரம் இருப்பின் 4K வீடியோக்களையும் இந்த செயலி டவுன்லோடு செய்யும்.

3. தரம் மற்றும் ஃபார்மேட்

3. தரம் மற்றும் ஃபார்மேட்

4K வீடியோ டவுன்லோடர் அனைத்து யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஆடியோவையும் டவுன்லோடு செய்ய அனுமதிக்கிறது. இத்துடன் நீங்கள் விரும்பும் ஆப்ஷன்களை டிராப் டவுன் மெனுவில் பார்த்து தேர்வு செய்யவும் முடியும்.

ஃபார்மேட் தேர்வு செய்ததும், தரத்தை உறுதி செய்ய வேண்டும். இது நீங்கள் குறிப்பிட்ட வீடியோவை கம்ப்யூட்டரிலேயோ அல்லது டிவில் இணைத்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து மாறும். எப்போதும் வீடியோக்களை அதிக தரத்தில் டவுன்லோடு செய்வது நல்லது. எனினும் இவ்வாறு செய்யும் போது அதிக நேரம் மற்றும் மெமரி மிக விரைவில் தீர்ந்து விடும்.

மேலும் நீங்கள் டவுன்லோடு செய்த வீடியோ எங்கு சேமிிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம்.

4. வீடியோ டவுன்லோடு

4. வீடியோ டவுன்லோடு

இனி உங்களின் யூடியூப் வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டு இருக்கும். இது நிறைவுற்றதும், நீங்கள் தேர்வு செய்த சேனலில் இருக்கும் மற்ற வீடியோக்களை யூடியூப் டவுன்லோடர் பரிந்துரை செய்யும். ஒரே சமயத்தில் இந்த செயலியால் 24 வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.

வீடியோ டவுன்லோடடு செய்யப்பட்டதும், அதனை அதற்கான டெஸ்டினேஷன் ஃபோல்டரில் வீடியோக்களை பார்க்க முடியும்.

 5. ஸ்மார்ட் மோட்

5. ஸ்மார்ட் மோட்

அடிக்கடி வீடியோக்களை டவுன்லோடு செய்வோர் ஸ்மார்ட் மோட் பயன்படுத்தலாம். இதில் நீங்கள் அதிகம் டவுன்லோடு செய்யும் ஃபைல்களை சரியாக கண்டறிந்து அவற்றை பதிவு செய்து கொள்ளப்படும். அடுத்த முறை வீடியோக்களை டவுன்லோடு செய்ய லைட்பல்பு ஐகானில் யூஆர்எல்-ஐ பேஸ்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் வீடியோ தானாக நீங்கள் அதிகம் பயன்படுத்திய செட்டிங்-களில் வீடியோ டவுன்லோடு செய்ய துவங்கும்.

Best Mobiles in India

English summary
How to download YouTube videos for free :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X