ஜியோபோனில் யூடியூப் ஆப் டவுன்லோடு செய்வது எப்படி?
கைஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து ஜியோபோனில் யூடியூப் செயலி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜியோபோன் 2 மற்றும் ஜியோ 1 மாடல்களை பயன்படுத்துவோர் இனி யூடியூப் செயலியை பயன்படுத்தலாம்.

கைஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஜியோபோன்களில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் யூடியூப் செயலிக்கான அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் ஆப் உள்ளிட்டவை ஜியோபோன்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வழங்கப்பட்டு விட்டது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் தெரிவித்தார்.
ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கான யூடியூப் ஆப் ஜியோ ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. செயலியை டவுன்லோடு செய்து வீடியோக்களை சீராக பார்த்து ரசிக்கலாம். கைஓ.எஸ். தளம் என்றாலும், ஆன்ட்ராய்டில் உள்ளதை போன்றே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோனில் யூடியூப் ஆப் எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
1. முதலில் ஜியோபோன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
2. செட்டிங்ஸ் ஆப்ஷனில் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3. உங்களின் ஜியோபோன் புதிய கைஓ.எஸ். அப்டேட் கொண்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
4. செட்டிங்ஸ் ஆப்ஷனை விட்டு வெளியேறி, ஜியோ ஆப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
5. ஜியோ ஆப்ஸ் ஸ்டோரில் உள்ள யூடியூப் செயலியை தேட வேண்டும்
6. செயலியை திறந்து, இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
7. ஆப் டவுன்லோடு ஆனதும், செயலியை அதே பக்கத்தில் திறக்க வேண்டும். மற்றொரு விதமாக முயற்சிக்க ஆப் டிராயர் சென்று யூடியூப் செயலியை அங்கிருந்து தேர்வு செய்ய வேண்டும்
8. செயலியை திறந்ததும், செயலியின் முகப்பு பக்கம் திறக்கும்
9. மொபைல் பிரவுசரில் உள்ளதை போன்ற ஆப்ஷன்களுடன் செயலி காட்சியளிக்கும்

10. யூடியூப் செயலியில் உள்ள சர்ச் ஆப்ஷனும் காணப்படும்
11. நீங்கள் விரும்பும் வீடியோவை தேர்வு செய்தது, வீடியோ மீது கிளிக் செய்ததும் மூன்று ஆப்ஷன்கள் திரையில் தோன்றும்
12. இவற்றில் ஃபுல் ஸ்கிரீன், பாஸ் மற்றும் மியூட் போன்றவை இடம்பெற்றிருக்கும்


Click it and Unblock the Notifications