இன்ஸ்டாகிராமில் உள்ள உங்களுடைய தகவல்களை ஈஸியா பதிவிறக்கம் செய்திடலாம்: வாங்க.!

தனிநபர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சில சட்ட திருத்தங்களை கொண்டுவர இருக்கிறது.

|

போட்டோக்கைளையும் வீடியோக்களையும் எளிதாகப் பகிர்ந்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தற்போது 800 மில்லியன் மக்கள் தொடர்பு கொள்ளும் இணைய தளமாக வளர்ந்துள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவருடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர்? என்ன விசயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் ? என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக இணையம் புது அவதாரம் எடுத்துள்ளது. தனிநபர்களின் தகவல்களையும் அவருடைய அந்தரங்கமான விசயங்களையம் மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.


ஐரோப்பிய யூனியனின் புதுச் சட்டம்

தனிநபர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சில சட்ட திருத்தங்களை கொண்டுவர இருக்கிறது. பொதுத் தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் (The General Data Protection Regulations – GDPR) எனப் பெயரிடப்பட்ட இச்சட்டம் ஏறக்குறைய நான்கு ஆண்டுகால விவாதத்திற்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று ஐரேப்பி யூனியன் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் உள்ள தகவல்களை ஈஸியா பதிவிறக்கம் செய்திடலாம்: வாங்க.!

புதுச் சட்டமும் புதிய வசதிகளும்


ஐரோப்பிய யூனியனின் இப்புதிய சட்டம் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் ஆகியவை காரணமாக, ஃபேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாகச் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது. அதன் ஒருபகுதியாக,. ஃபேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் தகவல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுதியுள்ளது. இதே வசதியைத் தற்போது இன்ஸ்டாகிராமும் பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ள தகவல்களை ஈஸியா பதிவிறக்கம் செய்திடலாம்: வாங்க.!


இன்ஸ்டாகிராம் பயனாளா்களுக்கு வழங்கும் பதிவிறக்க வசதி
பெருகி வரும் ஆதரவு மற்றும் வருமானத்தையும் கருத்தில் கொண்டு இன்ஸ்டாகிராம், தன்னுடைய பயனாளர்களுக்கு இத்தகைய வசதியை வழங்க முன்வந்துள்ளது. தற்போதைக்கு இந்த வசதி, மேஜை மற்றும் மடிக்கணினிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஐ போன் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளுக்கு இந்த வசதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

இன்ஸ்டாகிராமில் உள்ள உங்களுடைய தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய பின்ரும் வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

1) முதலில் இன்ஸ்டாகிராமில் நுழைய வேண்டும்

2) இன்ஸ்டாகிராம் தளத்தின் மேலே வலது மூலையில் ஒரு மனிதனின் உருவத்தோடு உள்ள பட்டன் வழியாக உங்களுடைய தனிப்பட்ட தகவல் பக்கத்திற்குச் செல்லவும்.

3) இப்பொழுது உங்களுடைய புரஃபைல் பக்கத்தில் உள்ள பற்சக்கர வடிவ கியர் ஐகானை கிளிக் செய்தால் நீங்கள் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்றுவிடலாம்

4) இப்பொழுது, “Privacy and Security” என்னும் பகுதியின் மீது கிளிக் செய்யவும்.

5) இந்த இடத்தில் உள்ள, Data Download பகுதிக்குச் சென்று

“Request Download” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

6) இப்பொழுது, உங்களுடைய பதிவிறக்க வேண்டுகோளை அங்கீகரிப்பதற்காகக் கடவுச் சொல்லைப் பதிவிட வேண்டும்.

7) இவற்றையெல்லாம் முறையாகச் செய்துவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் உள்ள உங்களுடைய தகவல்கள் அனைத்தும் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும்.

இன்ஸ்டாகிராமில் உள்ள தகவல்களை ஈஸியா பதிவிறக்கம் செய்திடலாம்: வாங்க.!


எவற்றையெல்லாம் பதிவிறக்கம் செய்ய முடியும் ?
இன்ஸ்டாகிராமில் நீங்கள் பதிவேற்றம் செய்திருந்த “போட்டோக்கள்”, நீங்கள் பரிமாற்றம் செய்திருந்த “வீடியோக்கள்”, நீங்கள் பதிவிட்டிருந்த அனைத்து வகையான “கருத்துக்கள்”, நீங்கள் பதிவேற்றம் செய்திருந்த உங்களுடைய “சுயவிபரக் குறிப்புகள்” என உங்களோடு தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் மின்னஞ்சல் வழியாக வந்து சேரும்.

தனிநபர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஐரோப்பிய யூனியன் அமல்படுத்தவிருக்கிற புதிய சட்டத்திற்கான உடனடி எதிர்விளைவாக, இன்ஸ்டாகிராம் இந்தகைய தகவல் பதிவிறக்க வசதியை அறிமுகம் செய்திருக்கிறது என்றாலும் இணையப் பயன்பாட்டாளர்களுக்கு இது நன்மை தரக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. எப்படியோ, யாரோ எடுக்கிற முடிவுகள் சமூகத்துக்குச் சாதகமா அமைஞ்சா சரி.!.

Best Mobiles in India

English summary
How to download all your Instagram data easily ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X