வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி.?

இந்த அம்சம் சமூக வலைத்தள வாசிகளிடம் அமோக வரவேற்பை பெற்றது. பலரும் அதிகளவு ஸ்டோரிக்களை பதிவிட துவங்கினர்.

|

2017-ம் ஆண்டு பல்வேறு அம்சங்களில் ஸ்டோரீக்களாக இருந்தது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை தங்களது சேவைகளில் ஸ்டோரி எனும் அம்சத்தை சேர்க்க முடிவு செய்திருந்தன. ஸ்டோரிக்களில் ஒருவர் தான் விரும்பும் புகைப்படம், வீடியோ போன்றவற்றை பதிவு செய்தால், அது ஒரு நாள் கழித்து தானாக அழிந்து போகும்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்ய டிப்ஸ்.!

இந்த அம்சம் சமூக வலைத்தள வாசிகளிடம் அமோக வரவேற்பை பெற்றது. பலரும் அதிகளவு ஸ்டோரிக்களை பதிவிட துவங்கினர். ஸ்டோரி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் கழிந்த நிலையிலும் இதற்கான வரவேற்பு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் மட்டும் தினமும் பத்து லட்சத்துக்கும் அதிகமான வீடியோ ஸ்டோரீக்கள் பதிவிடப்படுகின்றன. சிலர் இவற்றை பார்த்து விட்டு செல்வர், பலர் இவற்றை டவுன்லோடு செய்து பின்னர் பார்க்கவோ அல்லது அதையே ஸ்டோரியாக வைக்க விரும்புவர்.

அவ்வாறானவர்களுக்கு ஸ்டோரிக்களில் இருக்கும் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்..

மறைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஃபோல்டர்

மறைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஃபோல்டர்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஃபோல்டர் உங்களது மொபைலில் தான் இருக்கிறது. உங்களது நண்பரின் வாட்ஸ்அப் ஸ்டோரியை க்ளிக் செய்தால், அது தானாகவே உங்களின் போனில் டவுன்லோடு செய்யப்பட்டு விடும். இவை .statuses என்ற பெயரில் சேமிக்கப்படுகின்றன. இந்த .statuses ஃபோல்டர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களை உங்களின் கேலரியில் சேமிக்கப்படாமல் இருக்கும் நோக்கில் மறைத்து வைக்கப்படுகிறது.

 அன்-ஹைடு

அன்-ஹைடு

இதனால் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்க முடியும். மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அல்லது வீடியோக்களை காப்பி செய்ய நீங்கள் அந்த ஃபோல்டரை அன்-ஹைடு (UnHide) செய்ய வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேலரியில் மிக எளிமையாக டவுன்லோடு செய்யலாம். இதற்கென உங்களின் ஆன்ட்ராய்டு மார்ஷ்மல்லோ/நௌக்கட் சாதனத்தை ரூட் செய்யவோ அல்லது ஐஓஎஸ் சாதனத்தை ஜெயில்பிரேக் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

செயலிகள்

செயலிகள்

வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களின் ஸ்டேட்டஸ்-ஐ டவுன்லோடு செய்வதற்கு என்றே பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. இது போன்ற செயலிகள் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை, ஆனால் இவற்றை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது தான். இவ்வாறு செய்ய பிரபல செயலியாக இருப்பது ‘Story Saver for Whatsapp' ஏ.பி.கே. (apk) செயலி.

பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்

பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்

கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி உங்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தால், செயலி தானாக உங்களின் வாட்ஸ்அப்-இல் இணைந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும். ரீசென்ட்ஸ் ஸ்டோரிஸ் அம்சத்தை க்ளிக் செய்து உங்களுக்கு டவுன்லோடு செய்யப்பட வேண்டிய ஸ்டோரியை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்தாலே வேலை முடிந்தது.

குறிப்பு: வீடியோவை டவுன்லோடு செய்யும் முன் அதன் உரிமையாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் எழலாம்.

Best Mobiles in India

English summary
How to download video from Whatsapp status: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X