உங்கள் பேஸ்புக், கூகுள் & ட்விட்டர் ப்ரொபைலை டவுண்லோடு செய்வது எப்படி?

பேஸ்புக் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அங்கு கொடுக்கப்பட்ட மொழியின் கீழ் " டவுண்லோடு பேஸ்புக் டேட்டா" என்ற பகுதியை கிளிக் செய்யவும்.

By Prakash
|

உலகின் மிகவும் பிரபலமான சமூக நெட்வொர்க் பேஸ்புக், கூகுள் & ட்விட்டர் .சமூக தளங்களின் வளர்ச்சியை பார்க்கையில் அபாரமாக உள்ளது. நாளுக்கு நாள் புதிய நண்பர்கள், சேட்டிங், வீடியோ காலிங் இப்படி பல வசதிகள் இருப்பதால் சமூக தளங்கள் மிக வேகமாக வளர்ந்து உள்ளது.

இவற்றில் பல தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இவற்றில் கல்வி,வேலைவாய்ப்பு, தொழில் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன, தற்போது மனிதர்களுக்கு அதிகமாக பயன்படும் வகையில் இந்த சமூக வலைதளங்கள் உள்ளன.

பேஸ்புக்:

பேஸ்புக்:

மிகவும் பிரபலமான சமூக நெட்வொர்க் பேஸ்புக், இவை உங்கள் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ள உதவியாக உள்ளது. மேலும் பல்வேறு உரையாடல்கள், செய்திகள் பேன்றவற்றை இதில் மிக எளிமையாக பார்க்க முடியும்.

1. முதலில் பேஸ்புக் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.
2. பேஸ்புக் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அங்கு கொடுக்கப்பட்ட மொழியின் கீழ் " டவுண்லோடு பேஸ்புக் டேட்டா" என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
3. மேலும் அந்தப்பக்கத்தில் உங்களுடைய கடவுசொல்லை சமர்ப்பிக்க வேண்டும்.
4.அதன்பின் பேஸ்புக் உங்களுக்கு ஒரு ஜிப் கோப்பிற்கான மின்னஞ்சலை அனுப்பும், பின்பு அதில் அனைத்து டேட்டாவையும் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

கூகுள்:

கூகுள்:

கூகுள் பொதுவாக உபயோகப்படுத்துவதற்க்கு மிக எளிமையாக இருக்கும். ஜி-மெயில், கூகுள் பிளஸ், யூடியூப் போன்ற அனைத்து தயாரிப்புகளையும் ஆதரிக்கிறது. இதில் ப்ரொபைலை டவுண்லோடு செய்வது மிக எளிது.

1.முதலில் கூகுள்டேக் அவுட் என்ற பகுதிக்கு சென்று கிளிக் செய்யவும்.
2.இது உங்கள் டேட்டாவை பதிவிறக்க விரும்பும் சேவைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு பக்கத்தைத் திறக்கும்
3. நீங்கள் விகார்ட் அல்லது எச்டிஎம்எல் வடிவமைப்பில் தொடர்பு கொள்ள வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
4.தேர்வு செய்தவுடன், மேலே சிவப்பு வண்ண காப்பக பொத்தானை கிளிக் செய்யவும்.
5.அதன்பின் கூகுள் உங்களுக்கு தேவையான அனைத்து டேட்டாவையும் கொடுக்கும். இதற்க்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பபடும். இந்த செயல் முறைக்கு பல மணிநேரம் ஆகலாம்.

 ட்விட்டர்:

ட்விட்டர்:

ட்விட்டர் தரவைப் பதிவிறக்குவது ஒரு எளிய வழிமுறையாகும். இந்த செயல் முறைக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்.

1.முதலில் ட்விட்டர் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.
2.ட்விட்டர் உங்களுடைய அனைத்து கோப்புகளையும் எச்டிஎம்எல், ஜேஎஸ்ஒஎன் மற்றும் சிஎஸ்வி போன்ற மூன்று வடிவங்களில் கிடைக்கும்படி செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
How to Download and Save Your Facebook, Google and Twitter Profiles : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X