யூடியூபில் இருந்து மியூசிக் டவுன்லோடு செய்வது எப்படி?

யூடியூப் தளத்தில் இருந்து இவ்வாறு டவுன்லோடு செய்வது யூடியூப் விதிமுறைகளுக்கு மாறானது ஆகும்.

By GizBot Bureau
|

யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோ அல்லாமல் ஆடியோ மற்றும் டவுன்லோடு செய்ய வேண்டுமா? இதை செய்ய இணையத்தில் பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன, இவற்றில் பெரும்பாலான சேவைகள் பணியை சிறப்பாக செய்து முடித்தாலும், மிகவும் எளிமையாகவும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும் சேவைகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

யூடியூப் மியூசிக் டவுன்லோடு செய்ய டிப்ஸ்.!

குறிப்பு: யூடியூப் தளத்தில் இருந்து இவ்வாறு டவுன்லோடு செய்வது யூடியூப் விதிமுறைகளுக்கு மாறானது ஆகும். அந்த வகையில் கூகுள் உங்களது செயலை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் உங்களின் அக்கவுன்ட் முடக்கப்படலாம்.

யூடியூப் தளத்தின் மியூசிக் சேவையை மட்டும் பயன்படுத்த பல்வேறு வழிமுறைகள் உள்ளன, அவ்வாறான சேவையாக கூகுளின் யூடியூப் ரெட் இருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற பயன்பாடுகளுக்கு யூடியூப் ரெட் சேவையை முதலில் பரிந்துரைப்பது நல்லது. இதைத் தொடர்ந்தும் வேறு சேவைகளை பயன்படுத்த நினைப்போர், கூகுளுடன் மல்லுக்கட்ட தயார் நிலையில் தொடரலாம்.

வலைத்தள வழிமுறைகள்

வலைத்தள வழிமுறைகள்

யூடியூப் வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் உறுவ பல்வேறு ஆன்லைன் டூல்கள் இருந்தாலும், Y2Mate சிறப்பானதாக இருக்கும். இதன் இன்டியூட்டிவ் இன்டர்ஃபேஸ் மற்றும் வேகமான கன்வெர்ஷன் உங்களது பணியை அதிக சுலபமானதாக மாற்றும். இத்துடன் பல்வேறு ஃபார்மேட்களில் உங்களுக்கு விருப்பமான ஆடியோவை பயன்படுத்தலாம்.

இதன் ஒரே பின்னடைவாக இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான வீடியோக்களை M4A ஃபார்மேட் ஆடியோவாக மட்டுமே கன்வெர்ட் செய்ய முடியும்.

வழிமுறை 1:

வழிமுறை 1:

கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ யூஆர்எல்-ஐ அட்ரெஸ் பாரில் இருந்து காப்பி செய்ய வேண்டும்.

வழிமுறை 2:

வழிமுறை 2:

இனி புதிய டேப் ஓபன் செய்து Y2Mate இணையத்தளம் செல்ல வேண்டும். இங்கு "Search or paste link here..." என்ற ஆப்ஷனில் முந்தைய வழிமுறையில் காப்பி செய்யப்பட்ட யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்யவும். இனி உங்களுக்கு டவுன்லோடு செய்யப்பட வேண்டிய ஆடியோ அல்லது வீடியோ ஃபார்மேட்-ஐ தேர்வு செய்து பச்சை நிற டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:

வழிமுறை 3:

முந்தைய வழிமுறையில் டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்ததும், மற்றொரு டவுன்லோடு பட்டன் திரையில் தோன்றும், அதனை க்ளிக் செய்ததும் நீங்கள் தேர்வு செய்த வீடியோ டவுன்லோடு ஆகிவிடும்.

டெஸ்க்டாப் செயலி

டெஸ்க்டாப் செயலி

யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு மற்றும் கன்வெர்ட் செய்ய சிறப்பானதாக இருக்கும் என்றாலும், யூடியூப் விதிமுறைகளை அவை மீறுவதால் எந்நேரத்திலும் இவை காணாமல் போகலாம். டெஸ்க்டாப் செயலிகளில் இந்த பிரச்சனை இருக்காது. இந்த பணியை செய்வதில் சிறப்பான சேவைகளில் ஒன்றாக 4K Video Downloader இருக்கிறது.

பெயருக்கு ஏற்றார்போல் இந்த சேவையை கொண்டு உயர்-ரக வீடியோக்களை மட்டும் தான் டவுன்லோடு செயய் முடியும் என்று எண்ண வேண்டாம், இதனை கொண்டு யூடியூப் வீடியோக்களின் ஆடியோவை மட்டும் டவுன்லோடு செய்ய முடியும்.

இந்த செயலி யூடியூபின் நேரலை ஆப்ஷனில் வேலை செய்யாது. டெஸ்க்டாப் சேவையை கொண்டு யூடியூப் மியூசிக் டவுன்லோடு செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்..

வழிமுறை 1:

வழிமுறை 1:

முதலில் 4K Video Downloader செயலியை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதில் பிரீமியம் சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என அஞ்ச வேண்டாம், இதன் இலவச பதிப்பே போதுமான சேவையை சிறப்பாக வேலை செய்யும்.

வழிமுறை 2:

டவுன்லோடு செயய்ப்பட வேண்டிய வீடியோ யூஆர்எல்-ஐ காப்பி செய்து செயலியில் உள்ள "Paste Link" பட்டன் மற்றும் 4K Video Downloader விண்டோவின் இடது புறம் மேல்பக்கமாக இருக்கும் "+" ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:

இனி உங்களது திரையில் இருக்கும் ஆப்ஷன்களில் "Download Video" ஆப்ஷனை க்ளிக் செய்து, டிராப்-டவுன் மெனுவில் உள்ள "Extract Audio" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி இதில் உள்ளதில் உங்களுக்கு வேண்டிய ஃபார்மேட்-ஐ க்ளிக் செய்து டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு டவுன்லோடு ஆகும் ஃபைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.

வழிமுறை 4:

இனி "Extract" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 5:

செயலியின் ப்ராகிரஸ் பாரில் டவுன்லோடு வேகம், தோராயமான நேரம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். டவுன்லோடு முடிந்ததும் ரைட் க்ளிக் அல்லது வலதுபுறமாக இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து டவுன்லோடு ஆன ஃபைலை திறக்கவோ அல்லது சரியான சேவையை கொண்டு அதனை பிளே செய்யவோ முடியும்.

Best Mobiles in India

English summary
How to download music from YouTube : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X