உடனடியாக ஐஓஎஸ் 12 டவுன்லோடு செய்வது எப்படி?

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஐஓஎஸ் 12 இயங்குதளம் சார்ந்து பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

By GizBot Bureau
|

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஐஓஎஸ் 12 இயங்குதளம் சார்ந்து பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. க்ரூப்டு நோட்டிஃபிகேஷன்கள் முதல், ஐபோன் பயன்பாட்டை டிராக் செய்வது, மேம்படுத்தப்பட்ட சிரி என பல்வேறு புதிய அம்சங்களை சிலருக்கு உடனடியாக பயன்படுத்தி பார்க்க வேண்டிய ஆவல் நிச்சயம் இருக்கும்.

உடனடியாக ஐஓஎஸ் 12 டவுன்லோடு செய்வது எப்படி?

ஐஓஎஸ் 12 அம்சங்களை பற்றி அறிந்து கொண்டோருக்கு, அவற்றை உடனடியாக எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் மீமோஜியை உடனடியாக உபயோகிக்க வேண்டும் என்ற தகவல்களை இங்கு தொகுத்திருக்கிறோம்.

 கட்டணம்

கட்டணம்

எனினும் டெவலப்பர்களை தவிர மற்றவர்கள் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை உடனடியாக பயன்படுத்த முடியாது. உண்மையில் ஐஓஎஸ் 12 பயன்படுத்தி பார்க்காமல் இருக்க முடியாது என்றால், ஆப்பிள் டெவலப்பர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம், இதற்கான கட்டணம் 100 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6735 ஆகும்.

இந்த வழிமுறையை பின்பற்றினால் மேக் ஓஎஸ் மோஜேவ் 10.14 மற்றும் ஐஓஎஸ் 12 டெவலப்பர் பிரீவியூ உள்ளிட்டவற்றை ஆப்பிள் டெவலப்பர் பக்கத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஐஓஎஸ் 12 இயங்குதளம்

ஐஓஎஸ் 12 இயங்குதளம்

ஐஓஎஸ் 12 இயங்குதளம் மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதால், டெவலப்பர்களால் மட்டுமே இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், பிரச்சனைகள் இருப்பின் அவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தெரியும்.

புதிய இயங்குதளத்தை மேலும் மெருகேற்றும் பணியை ஆப்பிள் செய்து வருகிறது, தற்போதைய ஓஎஸ் டெவலப்பர்கள் பயன்பாட்டுக்கானது. இவர்கள் புதிய இயங்குதளத்தில் எவ்வாறு தங்களது செயலிகளை தயார்படுத்த வேண்டும் என்ற பணிகளில் ஈடுபடுவர்.


ஐஓஎஸ் 12 பொது வெளியீடு இந்த ஆண்டின் பிற்பாதியில் நடைபெறும், அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் எதிர்பார்க்கலாம். இதற்கு முன் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 12 பீட்டா பதிப்பை ஜூன் மாத இறுதியில் வெளியிடலாம்.

ஆப்பிள் டெவலப்பர் திட்டத்தில் இணைவது எப்படி?

ஆப்பிள் டெவலப்பர் திட்டத்தில் இணைவது எப்படி?

எதுவானாலும் பரவாயில்லை, புதிய இயங்குதளத்தை பயன்படுத்துவேன் என்ற மனநிலைக்கு வந்தபின், ஆப்பிள் டெவலப்பர் திட்டத்தில் இணையவில்லை எனில்..,

முதலில் ஆப்பிள் டெவலப்பர் திட்டத்துக்கான வலைத்தள பக்கத்திற்கு சென்று, வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இனி உங்களிடம் ஆப்பிள் ஐடி இருக்க வேண்டும். மேலும் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டியிருக்கும். 'Start Your Enrollment' பட்டனை க்ளிக் செய்து ஒவ்வொரு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இந்த நிலையில் ஆன்லைனில் பணம் செலுத்த போதுமான ஏற்பாடுகளை செய்து கொள்வது பயன்தரும்.

ஐஓஎஸ் 12 டெவலப்பர் பிரீவியூ டவுன்லோடு செய்வது எப்படி?

ஐஓஎஸ் 12 டெவலப்பர் பிரீவியூ டவுன்லோடு செய்வது எப்படி?

இதற்கு ஆப்பிள் டெவலப்பர் டவுன்லோடு சென்ட்டர் வலைத்தளம் சென்று, மென்பொருளை டவுன்லோடு செய்யக்கோரும் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின் ஐபோன், ஐபேட் அல்லது ஐபாட்களில் அவற்றை போர்ட் செய்து கொள்ள முடியும்.

டவுன்லோடு செய்யும் முன் உங்களது சாதனத்தில் போதுமான அளவு மெமரி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஐஓஎஸ் 12 டெவலப்பர் பிரீவியூ டவுன்லோடு செய்ததும், முற்றிலும் புதிய விண்டோ திறக்கும், இதில் ஆப்பிள் விதிமுறைகளை உறுதி செயய்க்கோரும் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

இனி இன்ஸ்டால் செய்வதற்கான கான்ஃபிகரேஷன் தெரியும் -- இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்து பாஸ்கோடை பதிவிட வேண்டும். பின் இன்ஸ்டால் செய்யும் வழிமுறை தொடர்ந்தால், இன்ஸ்டால் ஆனதும் சாதனம் ரீஸ்டார்ட் ஆகும்.

இவ்வாறு செய்த பின், செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று அப்டேட் செய்ய வேண்டும்.

குறிப்பு - டெவலப்பர் பிரீவியூ இயங்குதளத்தில் அதிகப்படியான பிழைகள் இருக்கும் என்பதால், சாதனத்தை பேக்கப் செய்து கொள்வது உங்களின் தகவல்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
How to download iOS 12 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X