மூடப்படும் கூகுள் பிளஸ்: தகவல்களை டவுன்லோடு செய்வது எப்படி?

எனவே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கூகுள் பிளஸ் பயனாளிகள் தங்கள் டேட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறும், அதன்பின் அனைத்து டேட்டாக்களும் நீக்கப்பட்டுவிடும் என்றும் கடந்த வாரம் கூகுள் அறிவித்துள்ளது.

|

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் என்ற சமூக வலைத்தளம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இயங்காது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

மூடப்படும் கூகுள் பிளஸ்: தகவல்களை டவுன்லோடு செய்வது எப்படி?

எனவே வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கூகுள் பிளஸ் பயனாளிகள் தங்கள் டேட்டாக்களை டவுன்லோடு செய்து கொள்ளுமாறும், அதன்பின் அனைத்து டேட்டாக்களும் நீக்கப்பட்டுவிடும் என்றும் கடந்த வாரம் கூகுள் அறிவித்துள்ளது.

 கூகுள் நிறுவனம் தகவல்:

கூகுள் நிறுவனம் தகவல்:

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் உங்களது கூகுள் பிளஸ் கணக்கும் உங்களை சார்ந்த அனைத்து கூகுள் பிளஸ் கணக்கும் நீக்கப்பட்டுவிடும் என்று கூகுள் நிறுவனம் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது.

 கணக்குள் சேர்ப்பது நிறுத்தப்படும்:

கணக்குள் சேர்ப்பது நிறுத்தப்படும்:

இருப்பினும் கூகுள் பிளஸ் கணக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே கூகுள் போட்டோவுக்கு மாறிவிடும் என்பதால் அதுகுறித்து கவலை இல்லை என்றும், அதேபோல் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கூகுள் பிளஸ் தளத்தில் புதிய கணக்குகள் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

டேட்டாவை  டவுன்லோடு எப்படி:

டேட்டாவை டவுன்லோடு எப்படி:

முதலில் நீங்கள் உங்களது கூகுள் பிளஸ் அக்கவுண்டில் லாகின் செய்து அதன் பின் டவுன்லோடு டேட்டா என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன்பின் நெக்ஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்து அதன்பின் பைல் டைப்பை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் அந்த டேட்டாவை எதில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் கிரியேட்டிவ் ஆர்ச்சிவ் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்

டவுன்லோடு செய்யும் முறை:

டவுன்லோடு செய்யும் முறை:


*கூகுள் பிளஸ் அக்கவுண்டை லாகின் செய்ய வேண்டும்

*டவுன்லோடு டேட்டா என்ற ஆப்சனுக்கு செல்ல வேண்டும்

*அதில் கிழ்புறம் உள்ள அம்புக்குறியை தேர்வு செய்து அதன்பின் எந்த வகை டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

*அதன்பின் செலக்ட் ஸ்பெசிபிக் டேட்டா என்பதை கிளிக் செய்ய வேண்டும்

*எதனை டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

*ஓகே பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

*நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

* பைல் டைப்பை தேர்வு செய்ய வேண்டும்

* எந்த அக்கவுண்டுக்கு டேட்டா செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்

* கிரியேட்டிவ் ஆர்ச்சீவ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்

வீடியோ மற்றும் புகைப்படம்:

வீடியோ மற்றும் புகைப்படம்:

ஒருவேளை டேட்டாவை டவுன்லோடு செய்யும் முன்னரே உங்கள் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுவிட்டால் அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே ஆல்பம் ஆர்ச்சிவுக்கு சென்றுவிடும். எனவே நீங்கள் இப்போது கூட மேற்கண்ட வழிமுறைகளின் மூலம் டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டும் கூகுள் பிளஸ் இணையதளம் அல்லது செயலி மூலம் தற்போது சைன் இன் ஆப்சன் உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த சைன் இன் ஆப்சன் மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதே நேரம் கிடைக்கும்போதோ அல்லது எப்போது மீண்டும் சைன் இன் ஆப்சன் வருகிறதோ அப்போது சைன் இன் செய்து உங்கள் டேட்டாக்களை பாதுகாத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to download Google Plus data before it shuts down : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X