ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

By Prakash
|

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் கண்டிப்பாக தேவைப்படுகிறது, ஆதார் அட்டையை மிக எளிமையாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அதற்க்கு சில வழிமுறைகள் உள்ளன.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

பதிவு ஐடி, ஆதார் எண், முழுப் பெயர், அஞ்சல் குறியீடு எண்,பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் போன்றவை ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய
தேவையானவை.

வழிமுறை-2:

வழிமுறை-2:

முதலில் ஆதார் அமைப்பின் UIDAI- வலைதளத்திறக்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் அந்த வலைதளத்தில் உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

ஆதார் அட்டையில் உள்ளபடி பெயர், மொபைல் எண் போன்ற குறிப்புகளை டைப் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

கொடுக்கபட்ட தகவல்கள் சரியாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு ஒடிபி (ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும் அதை உரைபெட்டியில் உள்ளிடவும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

ஒடிபி உள்ளிடப்பட்டதும் ஆதார் அட்டையை மிக எளிமையாக பதிவிறக்கம் செய்யமுடியும்.

Best Mobiles in India

English summary
How to Download a Copy of Your Aadhaar Card ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X