Home
How to

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் லாக் ஸ்கிரீனினை டிசேபிள் செய்வது எப்படி?

எவ்வித பயனின்றி லாக் ஸ்கிரீன் பலருக்கும் இடையூறாகவே இருக்கும். கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போது முதல் தடுப்பானாக லாக் ஸ்கிரீன் இருக்கிறது.

By Meganathan S

கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போது நம்மை வரவேற்பது விண்டோஸ் லாக் ஸ்கிரீன் தான். இது எவ்விதம பாதுகாப்பையும் வழங்காமல் இருப்பது பலரும் அறிந்த விடயம் என்ற வகையில் இதன் பிம்பம் அழிந்து பல காலம் ஆகிவிட்டது.

விண்டோஸ் 10 லாக் ஸ்கிரீனினை டிசேபிள் செய்ய சூப்பர் டிப்ஸ்.!

எவ்வித பயனின்றி லாக் ஸ்கிரீன் பலருக்கும் இடையூறாகவே இருக்கும். கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போது முதல் தடுப்பானாக லாக் ஸ்கிரீன் இருக்கிறது. பலருக்கும் பயனற்று இருப்பதை உணர்ந்து லாக் ஸ்கிரீனினை டிசேபிள் செய்ய விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 அப்டேட் வழி செய்திருக்கிறது.

விண்டோஸ் 10 லாக் ஸ்கிரீனை டிசேபிள் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்..

விண்டோஸ் 10 லாக் ஸ்கிரீனை டிசேபிள் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்..

- முதலில் regedit சர்ச் செய்து கமாண்ட்-ஐ ரன் செய்ய வேண்டும்

- இனி டபுள்-க்ளிக் செய்து இடதுபுறம் காணப்படும் HKEY_LOCAL_MACHINE-ஐ திறக்க வேண்டும்

- அடுத்து மென்பொருள்-ஐ (SOFTWARE) டபுள் க்ளிக் செய்து திறக்க வேண்டும்


- இனி மீண்டும் டபுள் க்ளிக் செய்து பாலிசிக்களை (Policies) திறக்க வேண்டும்

- வி்ண்டோஸ்-இல் ரைட்-க்ளிக் செய்ய வேண்டும்

- இனி நியூ (New) ஆப்ஷனை க்ளிக் செய்து கீ (Key) பட்டனை அழுத்த வேண்டும்

- நீங்கள் உருவாக்கிய பெர்சனலைசேஷனை (Personalization) நியூ கீ (New Key) #1 என பெயர் மாற்றி என்ட்டர் (Enter) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

பெர்சனலைசேஷன்

பெர்சனலைசேஷன்

- பெர்சனலைசேஷன் ஃபோல்டர், ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் (Registry Editor) ரைட்-க்ளிக் செய்து, நியூ க்ளிக் செய்து DWORD (32-bit) ஆக தேர்வு செய்ய வேண்டும்

- ரெஜிஸ்ட்ரி எடிட்டரின் வலது புறத்தில் புதிய பாப்-அப் திறக்கும், இதில் நியூ வேல்யூ #1 (New Value #1) என பெயரிடப்பட்டு இருக்கும். இதனை NoLockScreen என பெயர் மாற்றம் செய்து என்ட்டர் (Enter) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

0 முதல் 1 வரை

0 முதல் 1 வரை

- இனி NoLockScreen-ஐ டபுள் க்ளிக் செய்து அதன் வேல்யூ டேட்டாவை திறக்க வேண்டும். லேல்யூ டேட்டாவின் கீழ் வேல்யூக்களை 0 முதல் 1 வரை மாற்றி ஓகே (OK) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


- அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை விட்டு வெளியேரி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்

 லாக் ஸ்கிரீன்

லாக் ஸ்கிரீன்

- இறுதியில் லாக் ஸ்கிரீன் இன்றி, நேரடியாக லாக்-இன் ஸ்கிரீனுக்கு செல்ல முடியும். இங்கு உங்களின் பாஸ்வேர்டை பதிவு செய்து, கம்ப்யூட்டரை பயன்படுத்த துவங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to disable the Windows 10 lock screen : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X