Home
How to

ப்ரவுஸர்களில் வரும் அறிவிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்

By Jijo Gilbert

நீங்கள் நுழைந்துள்ள தளத்தில் ப்ளாக் இடுகைகள் மேம்படுத்துதல் அல்லது ஒரு புதிய மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும் போதெல்லாம், ப்ரவுஸர் அறிவிப்புகள் வருகின்றன. ஜிமெயிலை பொறுத்த வரை, இந்த அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது குப்பையாக (டிராஸ்) தான் உள்ளன.

ப்ரவுஸர்களில் வரும் அறிவிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்

தடையற்ற இணையதள இணைப்பை பெறுவதற்கு, மேற்கூறிய ப்ரவுஸர்களின் அறிவிப்புகள் தொல்லையை விட்டு விலகி இருப்பது இன்றியமையாதது ஆகும். இந்த அறிவிப்புகளைத் தவிர்ப்பதற்கு, ப்ரவுஸரில் இருந்து இவற்றை முடக்குவது தான் சிறந்த வழியாகும்.

கிரோம் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

கிரோம் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

கிரோம் அறிவிப்புகளை முடக்குவதற்கு கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்.

படி 1: உங்கள் கிரோம் ப்ரவுஸரை திறந்து, மூன்று புள்ளி மெனுவின் மீது கிளிக் செய்யவும். இப்போது "அமைப்புகள்" மீது கிளிக் செய்யவும்.

படி 2: கீழ் நோக்கி உருட்டி, "மேம்பட்டது" என்பதன் மீது கிளிக் செய்யவும்.

படி 3: "உள்ளடக்க அமைப்புகள்" என்பதன் மீது கிளிக் செய்து, பிறகு "அறிவிப்புகள்" என்பதை கிளிக் செய்யவும்.

படி 4: இப்போது "அனுப்பும் முன் கேள்" என்பதை முடக்கும் வகையில், அந்த தேர்வை இடது பக்கத்திற்கு நகர்த்தவும்.

படி 5: இப்போது உங்கள் திரையில் "முடக்கப்பட்டது" என்ற செய்தி காட்டப்படுகிறது.

இப்போது பல்வேறு இணையதளத்தில் இருந்து வரும் எல்லா விதமான அறிவிப்புகளும் தானாக முடக்கப்படும்.

சஃபாரி அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

சஃபாரி அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

சஃபாரியில் அறிவிப்புகளை முடக்குவது மிகவும் எளிதாகும். சஃபாரியில் அறிவிப்புகளை முடக்குவதற்கான படிகள் இதோ.

படி 1: சஃபாரி ப்ரவுஸரை திறந்து, மெனு பாரில் உள்ள "முன்னுரிமைகள்" என்ற தேர்வின் மீது கிளிக் செய்யவும்.

படி 2: "இணையதளங்கள்" டேப் மீது கிளிக் செய்த பிறகு, "அறிவிப்புகள்" என்பதைத் தேர்வு செய்வும்.

படி 3: "உந்து அறிவிப்புகளை அனுப்புவதற்கு இணையதளங்கள் அனுமதி கேட்க அனுமதிக்கவும்" என்று உள்ள தேர்வை கொண்ட பெட்டியை தேர்வுநீக்கம் செய்யவும்.

மேற்கூறிய மூன்றாவது படியை முடித்த பிறகு, இணையதளங்களிடம் இருந்து அனுப்பப்படும் அறிவிப்புகளின் அனுமதியை நீங்கள் வெற்றிகரமாக முடக்கிவிடலாம்.

சஃபாரியில் அறிவிப்புகளை முடக்குவது மிகவும் எளிதாகும். சஃபாரியில் அறிவிப்புகளை முடக்குவதற்கான படிகள் இதோ.    படி 1: சஃபாரி ப்ரவுஸரை திறந்து, மெனு பாரில் உள்ள

சஃபாரியில் அறிவிப்புகளை முடக்குவது மிகவும் எளிதாகும். சஃபாரியில் அறிவிப்புகளை முடக்குவதற்கான படிகள் இதோ. படி 1: சஃபாரி ப்ரவுஸரை திறந்து, மெனு பாரில் உள்ள "முன்னுரிமைகள்" என்ற தேர்வின் மீது கிளிக் செய்யவும். படி 2: "இணையதளங்கள்" டேப் மீது கிளிக் செய்த பிறகு, "அறிவிப்புகள்" என்பதைத் தேர்வு செய்வும். படி 3: "உந்து அறிவிப்புகளை அனுப்புவதற்கு இணையதளங்கள் அனுமதி கேட்க அனுமதிக்கவும்" என்று உள்ள தேர்வை கொண்ட பெட்டியை தேர்வுநீக்கம் செய்யவும். மேற்கூறிய மூன்றாவது படியை முடித்த பிறகு, இணையதளங்களிடம் இருந்து அனுப்பப்படும் அறிவிப்புகளின் அனுமதியை நீங்கள் வெற்றிகரமாக முடக்கிவிடலாம்.

மொஸில்லாவில் வரும் அறிவிப்புகளை முடக்குவது சற்று கடினமான ஒன்றாகும். ஏனெனில் அறிவிப்புகளை முடக்குவதற்கு பயனர்களுக்கு நேரடியான எந்த தேர்வும், இதில் அளிக்கப்படுவதில்லை. எனவே மொஸில்லா பயர்பாக்ஸில் வரும் அறிவிப்புகளை முடக்குவதற்கு, கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்.

படி 1: முகவரி பாரில், "about:config" என்று தட்டச்சு செய்து, என்டர் பொத்தானை தட்டவும்.

படி 2: அப்போது வரும் ஒரு எச்சரிப்பு செய்தியில், "வரும் அபாயத்தை நான் ஏற்று கொள்கிறேன்" என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: இப்போது தேடல் பாரில் "அறிவிப்புகள்" என்று தட்டச்சு செய்து, அதை கண்டறிந்த பிறகு, "dom.webnotifications.enabled." என்பதன் மீது இரட்டை கிளிக் செய்யவும். இந்த இரட்டை கிளிக் செய்வதன் மூலம் முன்னுரிமை மதிப்பை செயலற்றதாக மாற்றி விடுகிறது.

இங்கே, செயலற்றதாக என்ற வார்த்தையின் மூலம், நீங்கள் இணைய அறிவிப்புகளைப் பெறுவதை வெற்றிகரமாக முடக்கிவிட்டீர்கள் என்பதை குறிக்கிறது.

How to check PF Balance in online (TAMIL)
ஓப்ரா அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

ஓப்ரா அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

ஓப்ராவில் எந்த சிரமும் இல்லாமல், இணையதளங்களில் இருந்து வரும் அறிவிப்புகளை முடக்கி விடலாம். கீழ்க்காணும் படிகளின் மூலம் அறிவிப்புகளை முடக்கிவிடலாம்.

படி 1: ஓப்ரா ப்ரவுஸரை திறந்து, "முன்னுரிமைகள்" என்பதன் மீது கிளிக் செய்யவும்.

படி 2: "இணையதளங்கள்" மீது கிளிக் செய்த பிறகு, கீழ் நோக்கி உருட்டி சென்று "அறிவிப்புகள்" என்பதன் மீது கிளிக் செய்யவும்.

படி 3: "எந்த தளத்தையும் டெஸ்க்டாப் அறிவிப்புகளைக் காட்ட அனுமதிக்காதே" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

ஓப்ராவில் வரும் அறிவிப்புகளை இப்போது நீங்கள் வெற்றிகரமாக முடக்கிவிட்டீர்கள்.

முடிவுரை

பல காரியங்களுக்கும் இணையதளங்கள் அளிக்கும் அறிவிப்புகள் ஒரு வரத்தை போல இருந்தாலும், அதுவே அளவிற்கு அதிகமான தகவல்களை சுமந்து வந்தால் தொல்லையாக மாறி விடுகிறது. எனவே உந்து அறிவிப்புகளைப் பெற்று, உங்களின் சிறப்பான ப்ரவுஸிங் அனுபவத்தை கெடுத்து கொள்வதை தவிர்த்து, நீங்கள் விரும்பும் இணையதளத்தை சோதிப்பதன் மூலம் அதன் சமீபகால புதுப்பிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
For a seamless internet surfing, it is essential to stay away from the clutter created by browsers notification. The best way to avoid these notifications is to disable them from the browser and here are the steps to disable browser notifications on the popular browsers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X