ஐபோன் பேட்டரியை நாமே மாற்ற முடியுமா?

|

கவனம் சிதறாமல் பொறுமையை கடைபிடித்தாலே, உங்கள் ஆப்பிள் ஐபோனின் பேட்டரியை மாற்றுவது என்பது ஒரு எளிய காரியமாக தான் இருக்கும்.

ஐபோன் பேட்டரியை நாமே மாற்ற முடியுமா?

ஐபோன்கள் தொடர்ந்து பழைய பேட்டரிகளில் இயக்கப்பட்டால், அவற்றின் செயல்பாட்டு வேகம் படிபடியாக குறையும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், தங்கள் ஃபோனில் உள்ள பேட்டரிகளை மாற்றுவதற்காக, நாடெங்கிலும் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன் பயனர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது.

இதற்காக காத்திருப்போரின் வரிசை மிக நீண்டதாக உள்ளது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இந்த நீண்ட வரிசையை தவிர்க்க விரும்பினால், உங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியை நீங்களே மாற்றும் முயற்சியில் களமிறங்குவது நல்லது.

கவனம் சிதறாமல் பொறுமையை கடைபிடித்தாலே, உங்கள் ஆப்பிள் ஐபோனின் பேட்டரியை மாற்றுவது என்பது ஒரு எளிய காரியமாக தான் இருக்கும். பழையதற்கு பதிலாக நீங்கள் ஒரு புதிய பேட்டரி மாற்றியுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

புதிய பேட்டரி மற்றும் கருவிகளைப் பெறுங்கள்

புதிய பேட்டரி மற்றும் கருவிகளைப் பெறுங்கள்

உங்கள் ஐபோனின் பேட்டரி மாற்றியமைக்க, தகுந்த கருவிகள் மற்றும் ஒரு புதிய பேட்டரி தேவைப்படுகிறது. உங்கள் ஐபோனுக்கு தகுந்த முழுமையான பேட்டரி மாற்று கிட் வாங்கி கொள்ளுங்கள். இந்த மாற்று செய்ய தகுந்த கருவிகள் மற்றும் புதிய பேட்டரியை, இந்த கிட் பெற்றிருக்கும்.

ஐஃபிக்ஸிட்-டில் உள்ள ஒரு சிறந்த காரியம் என்னவென்றால், பேட்டரி எப்படி மாற்றுவது என்பதை விளக்கும் வழிகாட்டியை வழங்குகிறது. இது போன்ற பணியில் உங்களுக்கு அனுபவம் இல்லாத புதிய நபராக இருந்தாலும், இந்த பேட்டரி மாற்றும் செயல்பாட்டை முழுமையாக செய்ய, மேற்கூறிய வழிகாட்டி உதவும்.

இது அவ்வளவு எளிய காரியம் அல்ல...

இது அவ்வளவு எளிய காரியம் அல்ல...

உங்கள் ஐபோனில் உள்ள சர்க்கியூட்கள் சிக்கலாக உள்ளவை என்பதில் எந்தச் சந்தேகமில்லை. எனவே அதை பழுது பார்ப்பது என்பது ஒரு விளையாட்டான காரியம் அல்ல. ஆனால் அதில் எதையும் நீங்கள் பொருத்த வேண்டிய தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது. பேட்டரியை மட்டும் மாற்றியமைத்து விட்டு, இணைப்புகளையும் ஸ்க்ரூக்களையும் பொருத்துவது தான் நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.

உங்கள் ஃபோனின் பேட்டரி, 3எம் கமெண்ட் ஸ்ட்ரீப் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை கழட்டுவதில் அதிக கவனமாக செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை நீங்கள் கழட்டிய பிறகு, ஸ்க்ரூக்கள் மற்றும் இணைப்புகளை மட்டும் கழட்டினால் போதுமானது.

கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளியானது.!கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளியானது.!

தந்திரமான சில படிகள்

தந்திரமான சில படிகள்

ஸ்க்ரூக்களையும் இணைப்புகளையும் அவிழ்த்து திரும்ப பொறுத்துவது எளிய பணியாக இருந்தாலும், ஒட்டக்கூடிய பிசினை அவிழ்ப்பது சற்று கடினமான காரியமாக உள்ளது. உங்களிடம் இருப்பது ஐபோன் 7 அல்லது ஏதாவது புதிய வகை ஃபோனாக இருக்கும் பட்சத்தில், ஐபோனின் முனையை சற்று சுடுபடுத்த வேண்டும்.

அப்போது உங்கள் ஐபோனின் மற்ற பகுதிகளுடன் திரையை ஓட்ட வைத்துள்ள பசைப் போன்ற பிசின் மிருதுவாக மாறி விடுகிறது. அதில் பயப்பட எதுவும் இல்லை. ஐஃபிக்ஸிட் வழிமுறையின் மூலம் பேட்டரியை மாற்றியமைக்க தேவையான மற்ற உதவிகளைப் பெறலாம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
உங்கள் ஐபோனின் பேட்டரியை எப்படி மாற்றுவது?

உங்கள் ஐபோனின் பேட்டரியை எப்படி மாற்றுவது?

உங்கள் ஐபோனின் பேட்டரியை அவசரகதியில் மாற்றாதீர்கள். அதற்காக சிறிது நேரத்தை செலவழித்து, தகுந்த முறையில் ஆராய்ந்து செயல்பட வேண்டும். பேட்டரிகளை மாற்றியமைப்பது என்பது அவ்வளவு எளிய பணி அல்ல என்றாலும், அது முடியாத ஒரு வேலை என்று கூற முடியாது. இந்த பேட்டரி மாற்றியமைக்கும் போது தெரிந்திருக்க வேண்டிய பொதுவான காரியங்களைக் குறித்து அறிந்து கொள்ள ஐஃபிக்ஸிட்-டின் இணையதளத்தைப் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
After Apple has announced that the iPhones will gradually slow down if it keeps on operating on old batteries, the iPhone users have crowded the Apple stores around the country to get the batteries of their phone replaced.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X