Just In
- 41 min ago
அமேசானில் சலுகை மழை: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!
- 54 min ago
Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!
- 1 hr ago
SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!
- 2 hrs ago
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
Don't Miss
- Sports
ஆசியக்கோப்பை: ஓ இதுதான் விஷயமா??. இந்திய ப்ளேயிங் 11ல் வரும் தீபக் சஹார்.. பிசிசிஐ சைலண்ட்டாக திட்டம்!
- Movies
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீடு..ரஜினி -கமல் பங்கேற்பு? -சூப்பரா களைகட்டுமே!
- News
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.. நடமாடும் உடைமாற்றும் அறை
- Lifestyle
Langya Virus: சீனாவில் புதிதாக பரவும் லாங்யா வைரஸ்.. இது கொரோனாவை விட கொடியதாம்...
- Automobiles
பூட்டப்பட்ட காரை டென்னிஸ் பந்தை வைத்து திறக்க முடியுமா? உண்மை என்ன?
- Finance
மீண்டும் 59,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
உங்களது பேடிஎம் அக்கவுன்ட்டில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வது எப்படி?
ஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருந்தவர்களுக்கு தீர்வளிக்கும் விதமாக சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பில் வங்கி கணக்குகள், மொபைல் நம்பர்கள் மற்றும் பள்ளி மாணவர் சேர்க்கை போன்றவற்றிற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய அவசியம் தேவையில்லை என உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கி கண்க்கு திறக்கும் போது, புதிய மொபைல் இணைப்பு பெறும் போது, அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சேவைகளை தொடர்வதற்கு ஆதார் நம்பரை வழங்க வேண்டிய கட்டாயம் நீங்கியிருக்கிறது. ஆதார் தீர்ப்பை தொடர்ந்து பலரும் தங்களது ஆதார் நம்பரை அவரவர் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலெட் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து டீலின்க் செய்ய ஆர்வம் செலுத்துகின்றனர்.

பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள்:
வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதார் நம்பரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகள் அறியப்படாத நிலையில், பேடிஎம்மில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். எனினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் இணைப்புகளில் இருந்து ஆதாரை டீலின்க் செய்ய நினைப்போர் அருகாமையில் உள்ள அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

வழிமுறை 1:
வழிமுறை 1: பேடிஎம் வாடிக்கையாளர் சேவை மைய எண் @ 01204456456 அழைக்க வேண்டும்
வழிமுறை 2: ஆதாரை அன்-லின்க் செய்வதற்கான கோரிக்கையை விடுக்க வேண்டும்.

வழிமுறை 3:
வழிமுறை 3: இனி உங்களது ஆதார் கார்டின் தெளிவான புகைப்படத்தை இணைக்கக் கோரும் மின்னஞ்சல் உங்களுக்கு வரும். இந்த மின்னஞ்சலில், "Dear Customer, in order to process your request, we need you to send us a clear picture of your updated Aadhaar card for validation purpose. Request you to share the same with us." என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
வழிமுறை 4: மின்னஞ்சலுக்கு பதில் எழுதி, உங்களின் ஆதார் கார்டு தெளிவான புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

வழிமுறை 5:
வழிமுறை 5: பேடிஎம்மில் இருந்து உங்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் வரும், இதில் உங்களது ஆதார் விவரங்கள் 72 மணி நேரத்திற்குள் டீலின்க் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
வழிமுறை 6: தெரிவிக்கப்பட்ட கால அளவு நிறைவுற்றதும், உங்களது ஆதார் டீலின்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இது கவலை அளிக்கிறது!
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை கொண்டு எளிமையாக செய்துவிட முடியும் என்றாலும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பொது மக்கள் தங்களது ஆதார் விவரங்களை அவரவர் வங்கி கணக்குகள், டிஜிட்டல் வாலெட்கள் மற்றும் இதர சேவைகளில் இருந்து டீலின்க் செய்ய விரும்புகின்றனர்.
மேலும் டீலின்க் செய்ய, பேடிஎம் பயனர்களின் ஆதார் கார்டு புகைப்படத்தை அனுப்பக் கோருகிறது. இதனால் பயனருக்கு சங்கடமான சூழல் ஏற்படுகிறது. எனினும் பேடிஎம் கணக்கில் இருந்து ஆதார் கார்டு விவரங்களை டீலின்க் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086