இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி?

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் இருந்து சிலகாம் ஒதுங்கியிருக்கலாம் என நினைக்கின்றீர்களா, இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

|

ஃபேஸ்புக்கின் புகைப்படம் பகிர்ந்து கொள்ளும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஸ்னாப்சாட் போன்ற தளங்களுக்கு கடுமையான போட்டியாக இருந்து வருகிறது. உலகம் முழுக்க பல கோடி பயனர்களை பெற்று இருக்கும் இன்ஸ்டாகிராமில், பலர் தங்களது மகிழ்ச்சியான நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ மற்றும் ஸ்டோரிக்களாக இதில் பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி?

எனினும் சில சமயங்களில் விர்ச்சுவல் வாழ்க்கை நம் நேரத்தை அதிகளவு அபகரித்து கொள்ளும். தொடர்ச்சியான பயன்பாடு, நமக்கு விர்ச்சுவல் அடிக்ஷன் எனப்படும் ஒருவித அடிமை உணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன.


அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் இருந்து சிலகாம் ஒதுங்கியிருக்கலாம் என நினைக்கின்றீர்களா, இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் அறிந்து கொள்ள வேண்டியவை:
- பயனர்கள் தங்களது அக்கவுண்ட்-ஐ சிறிது காலத்திற்கு பயன்படுத்த வேண்டாமெனில் அதனை டிசேபிள் (Disable) செய்யலாம், எனினும் அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக பயன்படுத்த வேண்டாம் எனில், கணக்கை டெலீட் (Delete) செய்யலாம்.

- கணக்கை நிரந்தமாக டெலீட் செய்து விட்டால், பின் திரும்ப முடியாது, ஒரு முறை டெலீட் செய்யும் பட்சத்தில் அக்கவுண்ட் விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். இதனால் கணக்கை நிரந்தரமாக அழிக்கும் முன் தகவல்களை பேக்கப் செய்வது நல்லது.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி?

1 - உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்-இல் Instagram.com செல்ல வேண்டும்.

2 - இன்ஸ்டாகிராம் லாக்-இன் செய்ய வேண்டும்.

3 - வலதுபுறத்தில் உள்ள ப்ரோஃபைல் (Profile) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - இனி எடிட் ப்ரோஃபைல் 'Edit Profile’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

5 - அடுத்து நிரந்தரமாக அக்கவுண்ட்-ஐ அழிக்க கோரும் 'Temporarily disable my account’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

6 - இன்ஸ்டா அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக அழிப்பதற்கான காரணத்தை பதிவிட்டு, பின் உங்களது பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக அழிப்பது எப்படி?

1 - உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்-இல் Instagram.com சென்று லாக்-இன் செய்ய வேண்டும்.


2 - இந்த லின்க்-ஐ க்ளிக் செய்து அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யக் கோரும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

3 - அடுத்து திறக்கும் டிராப்-டவுன் மெனுவில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பதற்கான காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.

4 - கேட்கப்படும் போது பாஸ்வேர்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

5 - இறுதியில் நிரந்தரமாக இன்ஸ்டா அக்கவுண்ட்-ஐ அழிக்க கோரும் 'Permanently delete my account’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to delete your Instagram account: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X