வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி.?

Written By:

எப்போடா ஆன்லைன்க்கு வருவாய்ங்க.. எப்போடா மெஸேஜ் ஒன்னு தட்டி விடலாம்னு காத்துக்கிடக்கும் வாட்ஸ்ஆப் இம்சைகளிடம் சிக்கித்தவிக்கும் பெரும்பாலானவர்களுள் நீங்களும் ஒருவரா.? "அட போதும்டா சாமி.. என்னை விடுங்கடா" என்று சலித்துப்போன நிலைக்கு வந்துவிட்டீர்கள் என்றால் 100% இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். அதாவது வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி என்பதை விளக்கும் டூட்டோரியல்.

வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது எப்படி.?

உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.!

1. முதலில் வாட்ஸ்ஆப்பை திறந்து செட்டிங்ஸ் நுழையவும்.
ஐஓஎஸ் என்றால் கீழ் வலது திரையில் காணப்படும்.
ஆண்ட்ராய்டு என்றால் மெயின் திரையில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை டாப் செய்ய செட்டிங்ஸ் நுழையலாம்.
விண்டோஸ் தொலைபேசி என்றால் மூன்று மோர் என்பதை (மூன்று கிடைமட்ட புள்ளிகளை) டாப் செய்து செட்டிங்ஸ் நுழையலாம்.

2. செட்டிங்ஸ் நுழைந்ததும் அக்கவுண்ட் டாப் செய்யவும்.
3. பின்னர் டெலிட் மை அக்கவுண்ட் டாப் செய்யவும்.
4. உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு உங்களது கணக்கை டெலிட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் தொலைபேசி அல்லது பிற எந்த சாதனங்களில் இதை நிகழ்த்தினாலும் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் நிரந்தரமாக டெலிட் செய்யப்படும் உங்கள் வாட்ஸ்ஆப்பின் அனைத்து தரவுகளும் உங்கள் தொலைபேசியில் இருந்து நீக்கப்படும் மற்றும் நீங்கள் கூட நீக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே தொலைபேசி எண் கொண்டு ஒரு புதிய வாட்ஸ்ஆப் கணக்கை உருவாக்கினாலும் கூட உங்களின் பழைய தரவு எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல எளிமையான டூட்டோரியல்களுக்கு தமிழ் கிஸ்பாட் ஹொவ் டூ.!

Read more about:
English summary
How to Delete WhatsApp Account. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot