உங்களது ஆப்பிள் ஐடியை டெலீட் அல்லது டி-ஆக்டிவேட் செய்வது எப்படி?

இந்த வலைதளம் கொண்டு பயனர்கள் தங்களது தகவல்களை சிறப்பாக இயக்கவும் அவற்றை விரும்பும் நேரத்தில் டவுன்லோடு செய்யவும் முடியும்.

|

டேட்டா மற்றும் பிரைவசியை பயனர்கள் விரும்பும் படி இயக்க வசதியாக ஆப்பிள் வலைதளம் ஒன்றை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த வலைதளம் கொண்டு பயனர்கள் தங்களது தகவல்களை சிறப்பாக இயக்கவும் அவற்றை விரும்பும் நேரத்தில் டவுன்லோடு செய்யவும் முடியும்.

உங்களது ஆப்பிள் ஐடியை டெலீட் அல்லது டி-ஆக்டிவேட் செய்வது எப்படி?

இந்த வலைதளத்திலேயே ஆப்பிள் ஐடி-யை டெலீட் அல்லது டி-ஆக்டிவேட் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்களது அக்கவுன்ட்-ஐ நிரந்தரமாக டெலீட் செய்யவோ அல்லது அதனை குறுகிய காலக்கட்டத்திற்கு டிசேபிள் செய்யவோ முடியும்.

ஒருவேளை ஆப்பிள் அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக பயன்படுத்த வேண்டாம் அல்லது ஆப்பிள் ஐடி-யை டெலீட் அல்லது டி-ஆக்டிவேட் செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:

இவ்வாறு செய்யும் முன் நீங்கள் கவனிக்க வேண்டியவை:

இவ்வாறு செய்யும் முன் நீங்கள் கவனிக்க வேண்டியவை:

- அக்கவுண்ட்-ஐ அழிப்பதன் மூலம் மீண்டும் அதனை திரும்ப பெற முடியாது. டேட்டா அல்லது அக்கவுண்ட் ஒருமுறை அழிக்கப்பட்டால் அதனை எதிர்காலத்தில் மீட்கவே முடியாது.

- புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர தரவுகள் என அனைத்தும் நிரந்தரமாக அழிக்கப்பட்டு விடும்.

- ஐகிளவுட், ஃபேஸ்டைம் மற்றும் ஐமெசேஜ் போன்று அக்கவுண்ட்-இல் சேர்க்கப்பட்டு இருக்கும் அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும்.

- ஐமியூசிக் சேவையில் நீங்கள் வாங்கியவை தொடர்ந்து வேலை செய்யும், எனினும் ஐகிளவுட் மியூசிக் லைப்ரரியில் இருக்கும் DRM-free தரவுகள் அழிக்கப்பட்டு விடும்.

பரிந்துரைகள்:

பரிந்துரைகள்:

- ஆப்பிள் ஐடி-யை டி-ஆக்டிவேட் செய்யும் முன், ஐகிளவுடில் சேமிக்கப்பட்டிருக்கும் உங்களது தகவல்களை டவுன்லோடு செய்ய வேண்டும்.

- ஆப்பிள் ஐடி-யை பின்னாளில் பயன்படுத்துவீர்கள் எனில், அதனை டெலீட் செய்யாமல், டி-ஆக்டிவேட் செய்வது நல்லது.


- பேக்கப் எடுத்து முடித்ததும், நீங்கள் சின்க் செய்திருக்கும் சாதனங்களில் இருந்து ஆப்பிள் அக்கவுண்ட்-ஐ சைன்-அவுட் செய்யவும்.

ஆப்பிள் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

ஆப்பிள் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1 - முதலில் ‘privacy.apple.com' வலைதளத்திற்கு கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தில் இருந்து செல்ல வேண்டும்.

2 - உங்களது லாக்-இன் விவரங்களை கொண்டு லாக்-இன் செய்து பாதுகாப்பு கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ அல்லது டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷனை (Two-Factor Authentication) பூர்த்தி செய்யவும்.

3 - ஆப்பிள் ஐடி மற்றும் பிரைவசி பக்கத்தில் தொடர Continue பட்டனை க்ளிக் செய்யவும்.

4 - இனி அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யக்கோரும் 'Delete' ஆப்ஷனை க்ளிக் செய்து 'Get started' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

5 - அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்து கீழே காணப்படும் Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

6 - இனி உங்களது சந்தா விவரங்களை (subscriptions) சரிபார்த்து பின் Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


7 - டெலீட் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தணைகளை படித்து பார்த்து, பின் அதற்குரிய ஆப்ஷனை தேர்வு செய்து Continue பட்டனை க்ளிக் செய்யவும்.

8 - ஆப்பிள் ஐடி உருவாக்க நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி, வேறு மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் நம்பர் உள்ளிட்டவற்றில் எதையேனும் பதிவு செய்து உங்களின் அக்கவுண்ட் ஸ்டேட்டஸ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

9 - முந்தைய வழிமுறையில் உள்ளதை போன்ற ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ததும் Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

10 - எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால் உங்களது அக்சஸ் கோடினை குறித்து வைத்துக் கொள்ளவோ அல்லது டவுன்லோடு செய்து கொள்வது நல்லது.

11 - இனி Continue பட்டனை க்ளிக் செய்து அக்சஸ் கோடினை பதிவிட்டு உறுதி செய்ய வேண்டும்.


12 - இறுதியில் அனைத்து முக்கியமான விவரங்களையும் படித்து முடித்து பின் டெலீட் அக்கவுண்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

குறிப்பு:

குறிப்பு:

இந்த வழிமுறையை நிறைவு செய்ததும் ஆப்பிள் உங்களது முடிவினை உறுதி செய்யும் வகையில் "We are working on deleting your account" என்ற தகவலை வழங்கும். இந்த வழிமுறை நிறைவடைய அதிகபட்சம் ஏழு நாட்கள் ஆகும்.

ஆப்பிள் அக்கவுண்ட்-ஐ டி-ஆக்டிவேட் செய்ய:

ஆப்பிள் அக்கவுண்ட்-ஐ டி-ஆக்டிவேட் செய்ய:

1 - முதலில் ‘privacy.apple.com' வலைதளத்திற்கு கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தில் இருந்து செல்ல வேண்டும்.

2 - உங்களது லாக்-இன் விவரங்களை கொண்டு லாக்-இன் செய்து பாதுகாப்பு கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ அல்லது டு-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷனை (Two-Factor Authentication) பூர்த்தி செய்யவும்.


3 - ஆப்பிள் ஐடி மற்றும் பிரைவசி பக்கத்தில் தொடர Continue பட்டனை க்ளிக் செய்யவும்.

4 - இனி அக்கவுண்ட்-ஐ டி-ஆக்டிவேட் செய்யக்கோரும் 'Deactivate' ஆப்ஷனை க்ளிக் செய்து 'Get started' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

5 - அக்கவுண்ட்-ஐ டி-ஆக்டிவேட் செய்வதற்கான காரணத்தை தேர்வு செய்து கீழே காணப்படும் Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

6 - டி-ஆக்டிவேஷன் விதிமுறைகள் மற்றும் நிபந்தணைகளை படித்து பார்த்து பின் தேவையான ஆப்ஷனை க்ளிக் செய்து அதன் பின் Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

7 - உங்களது அக்கவுண்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் எவ்வாறு தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

8 - எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால் உங்களது அக்சஸ் கோடினை குறித்து வைத்துக் கொள்ளவோ அல்லது டவுன்லோடு செய்து கொள்வது நல்லது.

9 - இனி அக்சஸ் கோடினை பதிவிட்டு Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

10 - இறுதியில் அனைத்து முக்கியமான விவரங்களையும் படித்து முடித்து பின் டெலீட் அக்கவுண்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


குறிப்பு: இந்த வழிமுறையை நிறைவு செய்ததும் ஆப்பிள் உங்களது முடிவினை உறுதி செய்யும் வகையில் "We are working on deactivating your account" என்ற தகவலை வழங்கும். இந்த வழிமுறை நிறைவடைய அதிகபட்சம் ஏழு நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
How to delete or deactivate your Apple ID : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X