நிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் கணக்கை நேரடியாக அழிப்பது அவ்வளவு எளிதில் நிறைவுறும் காரியம் கிடையாது.

|

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்தும் பலரும் முழுமையாக தங்களதை தளத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு தங்களது கணக்கை அழிக்க முடிவு செய்ய துவங்கியுள்ளனர்.

நிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி?

ஃபேஸ்புக் கணக்கை நேரடியாக அழிப்பது அவ்வளவு எளிதில் நிறைவுறும் காரியம் கிடையாது. ஃபேஸ்புக் அக்கவுன்ட் செட்டிங்ஸ் அம்சங்களை உற்று நோக்கியிருந்தால் இந்த விஷயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்களின் தனிப்பட்ட தகவல்களை பேக்கப் செய்து, உங்களை முழுமையாக தளத்தில் இருந்து அழித்துக் கொள்வது சற்றே சவாலான காரியம் தான்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும், எனினும் உங்களின் தகவல்கள் மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டாம் என்றால், உங்களின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்-ஐ மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து மட்டும் நீக்கிக் கொள்ளலாம். ஒருவேளை நிரந்தரமாக கணக்கை அழிக்க வேண்டும் எனில் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..

 ஃபேஸ்புக் டேட்டா டவுன்லோடு

ஃபேஸ்புக் டேட்டா டவுன்லோடு

ஃபேஸ்புக் பயன்படுத்தியிருப்பின், நிச்சயம் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதன் சர்வர்களில் சேமித்து வைத்திருப்பீர்கள். இதே விஷயம் போஸ்ட் மற்றும் கமென்ட்களுக்கும் பொருந்தும்.

ஃபேஸ்புக் தரப்பிலும் நீங்கள் லாக்-இன் செய்த விவரங்கள், விளம்பரங்களில் நீங்கள் செய்த க்ளிக்களின் நேரம், தேதி மற்றும் உங்களது அக்கவுன்ட் ஸ்டேட்டஸ் வரலாறு உள்ளிட்டவை சேமித்து வைக்கப்படும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

உங்களது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக அழிக்கும் முன், இவை அனைத்தையும் சேமித்து கொள்வது சிறந்தது. இதை செய்ய ஃபேஸ்புக் செட்டிங்ஸ் -- Download a copy of your Facebook data ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். உங்களது அக்கவுன்ட் அழிக்கப்பட்டால் இதனை மீண்டும் பெற முடியாது.

போட்டோ மற்றும் போஸ்ட்களை அழிக்கவும்

போட்டோ மற்றும் போஸ்ட்களை அழிக்கவும்

உங்களது ஃபேஸ்புக் அக்கவுன்ட் அழிக்கப்பட்டதும், உங்களின் போஸ்ட்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க 90 நாட்கள் வரை ஆகலாம். உங்களது தகவல்கள் தளத்தில் உலவ வேண்டாம் எனில், அவற்றை உடனடியாக அழித்து விடவும்.

கூகுள் க்ரோமில் உள்ள Social Book Post Manager ப்ளக்-இன் கொண்டு பல்வேறு ஃபேஸ்புக் போஸ்ட்களை ஒரே க்ளிக் மூலம் அழிக்க வழி செய்யும். உங்களது தகவல்களை முதலில் பேக்கப் எடுத்துக் கொண்டு, அதன் பின் இந்த ப்ளக்-இன் இன்ஸ்டால் செய்யவும். இனி ஃபேஸ்புக் ஆக்டிவிட்டி லாக் சென்று நீங்கள் அழிக்க வேண்டியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து Social Book Post Manager ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட தேதி அல்லது கால அளவை குறிப்பிட வேண்டும். உங்களை குறிப்பிடும் போஸ்ட்கள் மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்படும், இனி டெலீட் பட்டனை க்ளிக் செய்தால் அவை அழிந்து விடும். இவ்வாறு செய்த பின் அழித்த தகவல்களை மீட்கவே முடியாது.

ஃபேஸ்புக் டெலீட்

ஃபேஸ்புக் டெலீட்

நிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்ய தயாராகிவிட்டீர்களா?

உங்களின் போஸ்ட்கள், புகைப்படங்கள் அனைத்தையும் பேக்கப் செய்ததும், வேண்டாதவற்றை அழித்ததும், ஃபேஸ்புக் அக்கவுன்ட் டெலீட் செய்யும் பக்கத்திற்கு சென்று ‘Delete my account' பட்டனை தட்டினால் அக்கவுன்ட் அழிக்கப்பட்டு விடும்.


ஃபேஸ்புக் சர்வர்களில் இருந்து உங்களின் தகவல்கள் முழுமையாக அழிக்க 90 நாட்கள் ஆகும், எனினும் இவை பயன்படுத்தக் கூடியதாக இருக்காது.

Best Mobiles in India

English summary
How to delete Facebook: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X