சியாமி ஃபோன்களில் ரூட்டிங் செய்யாமல் அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி?

|

பயனர்களுக்கும் மேன்மையான அனுபவத்தை அளிக்கும் வகையில், தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன்களுடன் ஓஇஎஸ்-களும் அளிக்கப்படுகின்றன. ஆனால் இப்படி ஸ்மார்ட்போனில் ஏற்கனவே அளிக்கப்படும் எல்லா அப்ளிகேஷன்களும் அம்சங்களும், எல்லா பயனர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதில்லை.

சியாமி ஃபோன்களில் ரூட்டிங் செய்யாமல் அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி?

சில பயனர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய தங்களுக்கே உரிய சில அப்ளிகேஷன்கள் பயன்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, ஓஇஎம்-கள் மூலம் நிறுவப்படும் ஜிமெயில் மூலம் கூகுள் அளிக்கும் இன்பாக்ஸ் மற்றும் கஸ்டம் காலெண்டர் வழியாக அளிக்கப்படும் கூகுள் காலெண்டர் ஆகியவற்றை பெரும்பாலான பயனர்கள் விரும்புகிறார்கள்.

தங்கள் ஸ்மார்ட்போனில் பயனில்லாத அப்ளிகேஷன்களை வைத்திருப்பது பயனர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதோடு, நினைவகத்தின் இடத்தை ஆக்கிரமித்து கொண்டு, பேட்டரி சார்ஜ்ஜை கரைய பண்ணுகின்றன. இந்த அப்ளிகேஷன்களை நிறுவப்பட்ட நிலையில் இருந்து அகற்றுவதற்கு, ஃபோனை ரூட்டிங் செய்து அவற்றை நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்கி விடுவது தான் ஒரு எளிய வழியாகும். ஆனால் பெரும்பாலான பயனர்கள், ஃபோனை ரூட்டிங் செய்ய விரும்பவதில்லை. ஏனெனில் அது ஒரு சிக்கலான, அபாயகரமான செயல்பாடு ஆகும்.

ஆனால் பயனர்களின் ஃபோன் ரூட்டிங் செய்யப்படாத பட்சத்தில், மேற்கண்ட பெரும்பாலான அப்ளிகேஷன்களை நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்கவோ, அதை செயல்படாமல் வைக்கவோ முடியாது. எம்ஐயூஐ மூலம் இயங்கும் சியோமி ஃபோனை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், அதில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஜிஆப்ஸ் மற்றும் எம்ஐயூஐ அப்ளிகேஷன்களை நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்க முடியும்.

ஆனால் நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களின் அமைப்புகளில் இருந்து இந்த அப்ளிகேஷன்களை செயல்படாமல் வைப்பதற்கு எதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் உங்களால் செயல்படாமல் வைக்க முடியாது என்று எந்த அப்ளிகேஷனை நினைக்கிறீர்களோ, அதை கீழ்க்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி செயல்படாமல் வைக்க முடியும்.

படி 1: ப்ளே ஸ்டோருக்கு சென்று, மெனுவை திறக்கும் வகையில் வலதுபுறத்திற்கு நகர்த்தி செல்லவும். உதவி மற்றும் கருத்துக்கள் பகுதியை தேர்ந்தெடுக்கவும்.

படி 2: ஆன்ட்ராய்டில் உள்ள அகற்று அல்லது செயல்படாமல் செய் என்பதை தேர்ந்தெடுக்கவும். எல்லா ஃபோன்களிலும் இந்த தேர்வு மேலேயே காட்டப்படும் என்று உறுதியாக கூற முடியாது. சில ஃபோன்களில் இதை கண்டுபிடிக்க, நீங்கள் கீழ் நோக்கி உருட்ட வேண்டிய தேவை ஏற்படலாம்.

படி 3: அப்ளிகேஷன் அமைப்புகளுக்கு செல்ல டேப்பை தேர்ந்தெடுக்கவும். அதை செய்யும் போது, நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களின் பட்டியலுக்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள்.

படி 4: ஜிமெயில், கூகுள் ப்ளே மியூஸிக் அல்லது கூகுள் ப்ளே மூவீஸ் மற்றும் டிவி போன்ற ஏதாவது ஜிஆப்ஸை தேர்ந்தெடுத்தால், அதை செயல்படாமல் வைக்கும் ஒரு தேர்வு உங்களுக்கு கிடைக்கும். தொடர்புகள் மற்றும் காலெண்டர் போன்ற எம்ஐயூஐ அப்ளிகேஷன்களைக் கூட செயல்படாமல் செய்ய முடியும்.

மேற்கண்ட படிகளின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட எல்லா அப்ளிகேஷன்களையும் செயல்படாமல் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஃபோனில் உள்ள சில அப்ளிகேஷன்களை மட்டுமே இந்த வழிகளில் செயல்படாமல் செய்ய முடியும். நீங்கள் ஒரு எம்ஐயூஐ ஃபோனை பயன்படுத்தும் பட்சத்தில், மேலே அளிக்கப்பட்ட சில அப்ளிகேஷன்களின் செயல்பாட்டை நிறுத்த விரும்பினால், உங்கள் ஃபோனில் மேற்கண்ட வழிமுறைகளை முயற்சித்து பார்க்கலாம்.

இந்த முறையை பின்பற்றி, எந்தெந்த அப்ளிகேஷன்களின் செயல்பாட்டை நிறுத்தினீர்கள் என்ற உங்கள் அனுபவத்தை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் குறிப்பிட்டால், இது போன்ற ஃபோன்களை பயன்படுத்தும் மற்ற பலருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் களமிறங்கும் ஹூவாய் வ்யை5 லைட்.!ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் களமிறங்கும் ஹூவாய் வ்யை5 லைட்.!

Best Mobiles in India

Read more about:
English summary
OEMs will preload their smartphones with apps in order to improve the user experience. But not all the apps and features those are preloaded are important to all the users. Some users will have their own apps to execute a specific task. For instance, most users prefer Inbox by Google over Gmail and Google Calendar over Custom Calendar that is installed by OEMs.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X