விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில் சவுன்ட் கஸ்டமைஸ் செய்வது எப்படி?
புதிய சவுன்ட்களை பயன்படுத்த ஏராளமான ஆப்ஷன்கள் விண்டோஸ் தளத்தில் வழங்கப்படுகிறது. இவற்றில் புதிய தீம்கள், ஸ்கீம் போன்றவற்றை செயல்படுத்த முடியும்.
விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்த மிகவும் எளிமையான தளம் ஆகும். இதன் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு நமக்கு தேவையானவற்றை மிக சுலபமாக செய்து முடிக்கவும் ஆப்ஷன்களை வழங்குகிறது. இத்துடன் விண்டோஸ் தோற்றத்தை முழுமையாக மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. திரையின் வால்பேப்பர் முதல் பிரைட்னஸ், கான்ட்ராஸ்ட் உள்ளிட்டவற்றை மாற்ற முடியும்.

இதேபோன்று விண்டோஸ் சவுன்ட் அம்சங்களை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இவற்றை கொண்டு நோட்டிஃபிகேஷன், பிழை, டவுன்லோடு நிறைவுறும் போது மற்றும் பல்வேறு அம்சங்களுக்கான சவுன்ட்-ஐ மாற்றியமைக்க முடியும். ஆனால் மக்கள் சவுன்ட் ஆப்ஷனை மாற்ற அதிகம் நினைப்பதில்லை. இதனால் விண்டோஸ் வழங்கும் டீஃபால்ட் ஆடியோ அப்படியே இயங்குகிறது.
புதிய சவுன்ட்களை பயன்படுத்த ஏராளமான ஆப்ஷன்கள் விண்டோஸ் தளத்தில் வழங்கப்படுகிறது. இவற்றில் புதிய தீம்கள், ஸ்கீம் போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

விண்டோஸ் 10 சவுன்ட் செட்டிங் கஸ்டமைஸ் செய்வது:
செட்டிங் மெனுவை இருவிதங்களில் இயக்க முடியும்:
1) செட்டிங்ஸ்>சிஸ்டம்>சவுன்ட்>ரிலேட்டெட் செட்டிங்ஸ்>சவுன்ட் கன்ட்ரோல் பேனல்
2) கன்ட்ரோல் பேனல் சென்று சவுன்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்
இரண்டு ஆப்ஷன்களை பயன்படுத்தினாலும் ஒரே விண்டோ தான் திறக்கும், அங்கு சென்றதும் சவுன்ட் டேபை க்ளிக் செய்யவும்.
விண்டோஸ் 10 தளத்தில் ஏற்கனவே இருவித சவுன்டு ஸ்கீம்களை வழங்குகிறுது: விண்டோஸ் டீஃபால்ட் அல்லது நோ சவுன்ட். நீங்கள் அதிகளவு ஸ்கீம்கள் மற்றும் தீம்களை டவுன்லோடு செய்யும் போது அவை சவுன்ட் ஸ்கீம் மெனுவில் தோன்ற ஆரம்பிக்கும். ஒவ்வொரு அம்சத்திற்குமான சத்தத்தை மாற்றும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த அம்சங்களை இரண்டாவது டிராப்-டவுன் மெனுவில் பார்க்க முடியும். அங்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடியோக்களில் ஒன்றை தேர்வு செய்தோ அல்லது பிரவுஸ் ஆப்ஷன் மூலம் கம்ப்யூட்டரில் உள்ள ஃபைல்களையும் தேர்வு செய்ய முடியும்.
நீங்கள் விரும்பும் மாற்றங்களை செய்ததும் சேவ் ஏஸ் பட்டனை க்ளிக் செய்யலாம்.
விண்டோஸ் 10 சவுன்ட், தீம்களை டவுன்லோடு செய்வது:
விண்டோஸ் 10 சவுன்ட் ஸ்கீம்களை முழுமையாக மாற்றியமைக்க, நீங்கள் ஒவ்வொரு சவுன்டையும் தனித்தனியே மாற்ற வேண்டும்.
விண்டோஸ் 10-இல் சவுன்ட் கஸ்டமைசேஷன் செய்ய சிறப்பான வழிமுறை தீம் பயன்படுத்துவது தான். தனித்தனி சவுன்ட்களை கொண்ட பல்வேறு தீம்கள் கிடைக்கின்றன. பிரத்யேக சவுன்ட் கொண்டிருக்கும் தீம்களை கண்டறிய சிறப்பான இடம் மைக்ரோசாஃப்ட் இன் அதிகாரப்பூர்வ தளம் தான். நீங்கள் விரும்பியவற்றை தேர்வு செய்யும் போது இடது புறம் காணப்படும் ஆப்ஷன்களில் வித் கஸ்டம் சவுன்ட்ஸ் "With custom sounds" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிரபல கேம்களில் துவங்கி, பல்வேறு சூழல்கள் வரை உங்களது தேவையை பூர்த்தி செய்யும் ஏதாவாதை இங்கு கண்டறிய முடியும். இதற்கு குறிப்பிட்ட ஃபைலை டவுன்லோடு செய்து, இருமுறை க்ளிக் செய்து அன்லாக் செய்ய வேண்டும். தீம் இன்ஸ்டால் செய்தால், அதனுடன் வழங்கப்படும் சவுன்டு டிராப்-டவுன் மெனுவில் தெரியும. இவற்றை செட்டிங்ஸ் -- பெர்சனலைசேஷன் -- தீம்ஸ் ஆப்ஷன்களில் பார்க்க முடியும்.

விண்டோஸ் சவுன்ட் தரத்தை மேம்படுத்துவது:
விண்டோஸ் தளத்தில் சவுன்ட் தரத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்:
டாஸ்க்பாரில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை ரைட் க்ளிக் செய்யவும். இதில் பிளேபேக் டேபை க்ளிக் செய்து ஸ்பீக்கர்களை கண்டறிந்து, அவற்றில் ஒன்றை ரைட் க்ளிக் செய்து ப்ராப்பர்டீஸ் ஆப்ஷன் செலல வேண்டும்.
ப்ராப்பர்டீஸ் விண்டோவில் ரைட்-க்ளிக் செய்து என்ஹான்ஸ்மென்ட் ஆப்ஷனில் உள்ள ஈக்வலைசரை க்ளிக் செய்ய வேண்டும். சவுன்ட் எஃபெக்ட் ப்ராப்பர்ஸீட் பகுதியில் ஈக்வலைசர் ஆப்ஷன் இருக்கும்.


Click it and Unblock the Notifications








