புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை க்ரியேட், எடிட், டெலிட் செய்வது எப்படி.?

ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டோம். எளிமையான வழிமுறைகளுடன் இதோ உங்களுடனும் பகிர்கிறோம்.!

|

நீ வேற ஏன்யா.. வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி அதையே மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்க..?? நாங்களே பழைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்னு ஒரு முறை இருந்ததையே அடியோடு மறந்துட்டு, வாட்ஸ்அப் யூஸ் பண்ண பழகிட்டு இருக்கோம். இப்போ வந்து புதுசு, அப்டேட்டுனு ஏன்யா டென்சன் பண்ணுற.? - என்ற மைண்ட் வாய்ஸ் எனக்கு புரியுது நண்பர்களே, இருந்தாலும் என் கடமைனு ஒன்னு இருக்கு இல்லயா.?

அந்த கடமைக்கு கட்டுப்பட்டு, புதிய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை எப்படி க்ரியேட், எடிட் மற்றும் டெலிட் செய்வது என்பதை பற்றிய டூடோரியலை உங்களுக்கு "டக்டக்"னு சொல்லிட்டு போயிடுறேன்.!

ஸ்டேட்டஸ் ஆப்ஷன் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் க்ரியேட் செய்வது எப்படி.?

ஸ்டேட்டஸ் ஆப்ஷன் பயன்படுத்தி ஸ்டேட்டஸ் க்ரியேட் செய்வது எப்படி.?

வாட்ஸ்ஆப்பை திறக்கவும். ஸ்டேட்டஸ் ஆப்ஷனை டாப் செய்யவும். மை ஸ்டேட்டஸ் என்பதை டாப் செய்யவும். நீங்கள் ஏற்கனவே ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருந்தால் மேல்வலது மூலையில் உள்ள + என்ற சிறிய வட்டத்தை டாப் செய்யவும்.

கேமரா ரோல்

கேமரா ரோல்

ஷட்டர் பொத்தானை அழுத்தி ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளவும், அல்லது அதை தொடர்ந்து அழுத்த வீடியோ பதிவாகும் அல்லது திரைக்கு கீழே கேமரா ரோல் சென்று உங்களது தேர்வை நிகழ்த்திக்கொள்ளலாம்.

சென்ட்

சென்ட்

கேப்ஷன் என்பதை டாப் செய்வதின் மூலம் உங்கள் ஸ்டேட்டஸ் புகைப்படம் அல்லது விடீயோவிற்கு ஒரு தலைப்பை நீங்கள் டைப் செய்ய முடியும். பின்னர் கீழ் வலது பக்கத்தில் உள்ள சென்ட் ஐகானை டாப் செய்வதின் மூலம் உங்கள் ஸ்டேட்டஸை நீங்கள் பகிரலாம்.

சரிபார்க்கலாம்

சரிபார்க்கலாம்

நீங்கள் பார்வையிட அதை டாப் செய்யவும் அல்லது வலது பக்கத்தில் உள்ள மெனு பொத்தானை அழுத்தி எதனை மக்கள் உங்கள் ஸ்டேட்டஸை பார்த்துள்ளார் என்பதையும் சரிபார்க்கலாம் உடன் கீழ் காணும் கண் போன்ற ஐகானை டாப் செய்ய அதை பார்த்தவர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் கிரியேட் செய்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்திற்கு பின்பு தானாகவே மறைந்து விடும்.

ஸ்டேட்டஸில் தவறுள்ளது என்றால், அதை டெலிட் செய்வது எப்படி.?

ஸ்டேட்டஸில் தவறுள்ளது என்றால், அதை டெலிட் செய்வது எப்படி.?

ஸ்டேட்டஸ் டாப் செல்லவும். ஸ்க்ரோல் செய்து நீங்கள் நீக்க விரும்பும் ஸ்டேட்டஸை கண்டுபிடிக்கவும் பினட் ட்ராஷ் ஐகானை டாப் செய்து டெலிட் டாப் செய்ய குறிப்பிட்ட ஸ்டேட்டஸ் டெலிட் ஆகிவிடும்.

ஸ்டேட்டஸ் சார்ந்த ப்ரைவஸி செட்டிங்ஸ் அமைப்பது எப்படி.?

ஸ்டேட்டஸ் சார்ந்த ப்ரைவஸி செட்டிங்ஸ் அமைப்பது எப்படி.?

ஸ்டேட்டஸ் டாப் சென்று மேல் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் மெனு சின்னத்தை டாப் செய்து ஸ்டேட்டஸ் ப்ரைவஸி டாப் செய்யவும். மாற்றாக, மெயின் சாட்டில் செட்டிங்ஸ் > அக்கவுண்ட் > ப்ரைவஸி > ஸ்டேட்டஸ் என்று உள்நுழைவதின் மூலமாகவும் அணுகலாம்.

மூன்று விருப்பங்கள்

மூன்று விருப்பங்கள்

அங்கு மூன்று விருப்பங்களை காண முடியும். மை காண்டாட்க்ஸ் - இது உங்கள் தொடர்புகளுக்கு மட்டுமே ஸ்டேடஸை காட்சிப்படுத்தும். மை காண்டாட்க்ஸ் எக்ஸப்ட் - இது குறிப்பிட்ட தொடர்புகளை தவிர்க்க உங்களுக்கு உதவும் மற்றும் ஒன்லி ஷேர் வித் - இது குறிப்பிட்ட தொடர்புகளுடன் மட்டும் ஸ்டேட்டஸ் பகிர உதவும்.

ஹொவ் டூ..?

ஹொவ் டூ..?

உங்கள் தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேல பல எளிமையான டூடோரியல்களுக்கு தமிழ் கிஸ்பாட் ஹொவ் டூ பிரிவிற்கு வருகை தரவும்.!

Best Mobiles in India

Read more about:
English summary
How to Create, Edit, Delete WhatsApp Status Updates. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X