அப்ளிகேஷன்களை நகலெடுத்து ஒரே ஃபோனில் பல கணக்குகளை பயன்படுத்துவது எப்படி?

ஆனால் குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களுக்கு, பல்வேறு கணக்குகளைக் கொண்டிருக்க கூடும்.

|

ஒரே ஃபோனில் பல கணக்குகளைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்ளிகேஷன்களை நகலெடுத்து போனில் பல கணக்குகளை பயன்படுத்துவது எப்படி?


அப்ளிகேஷன்கள் பயன்பாட்டில் வந்த துவக்க காலத்தில், அழைப்புகளுக்கும் மெசேஜ் அனுப்புவதற்கும் என்று தயாரிக்கப்பட்ட ஆதிகால ஃபோன்களில், ஒரு பெரிய சம்பவமாக தெரிந்தது. ஆனால் இன்று ஒரு ஸ்மார்ட்போனின் இயக்குவதற்கு அப்ளிகேஷன்கள் தான் மையப் பொருளாக மாறியுள்ளன. எந்தொரு ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அது ஒரு பயனரின் கைகளுக்கு வந்துவிட்டால், அவருக்கு பிடித்தமான சில அப்ளிகேஷன்களின் கூட்டத்தை நிறுவுவதில் ஒரு சில மணிநேரங்களை கூட எடுத்து கொள்கிறார்கள். இருப்பினும், உங்கள் ஃபோனில் ஒரே அப்ளிகேஷனின் பல நகல்களை வைத்து கொள்ள முடியாது என்பது ஒரு தவிர்க்க முடியாத காரியமாக உள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களுக்கு, பல்வேறு கணக்குகளைக் கொண்டிருக்க கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில், ப்ளே ஸ்டோரில் பராலல் ஸ்பேஸ் என்று அழைக்கப்படும் அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, உங்களுக்கான அப்ளிகேஷன்களை நகலெடுத்து கொள்ள முடியும். மேலும் ஒரு அப்ளிகேஷனின் நகலில் உள்நுழைய முடியும். முதலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை கீழே அளித்துள்ளோம்.


1) உங்களுக்கு பல்வேறு கணக்குகள் தேவைப்படும் தளங்கள்
பராலல் ஸ்பேஸ் மூலம் எந்தொரு அப்ளிகேஷனையும் நகலெடுக்க முடியும். ஆனால் எல்லா அப்ளிகேஷன்களுக்கும் நகலெடுக்க வேண்டிய தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக, கால்குலேட்டர். கீழ்க்கண்ட சிலவற்றை தான் பெரும்பாலும் நகலெடுக்க வேண்டிய ஏற்படுகிறது:

a) சமூக இணையதள அப்ளிகேஷன்கள்
ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற அப்ளிகேஷன்கள், வணிக ரீதியாக, இணையதளங்கள் மற்றும் சேவைகள் என்று பல்வேறு வழிகளில், ஒரு சமூக இணையதளமாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே தனிப்பட்ட கணக்கில் இருந்து மற்ற பிராண்டு கணக்குகளை தனிமைப்படுத்த கையாள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இன்ஸ்டாகிராம் போன்ற அப்ளிகேஷன்கள் பல்வேறு கணக்குகளை இணைக்க ஆரம்பித்து இருந்தாலும், உங்கள் கணக்கை தனிப்பட்ட முறையில் கையாளுவதற்கு, பராலல் ஸ்பேஸை பயன்படுத்துவது தான் சிறந்த வழியாக உள்ளது.

b) கேம்ஸ்
ஆன்லைனில் கேம்கள் ஆடும் பெருவாரியான மக்கள், அதிலும் குறிப்பாக க்ளேஷ் ஆஃப் க்லேன்ஸ் போன்ற கேம்களை ஆடுபவர்கள், இது போன்ற ஒரு அப்ளிகேஷனுக்காக வெகுநாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.

c) பல்வேறு கணக்குகளில் பல்வேறு அப்ளிகேஷன்கள் நிறுவப்பட்டிருப்பது
பல்வேறு கணக்குகளை உருவாக்க, ஏராளமான அப்ளிகேஷன்கள் அனுமதிக்கின்றன என்றாலும், உங்கள் வணிகத்தையும் தனிப்பட்ட தன்மையையும் வெவ்வேறாக வைக்க நீங்கள் விரும்பலாம். ஏற்கனவே உங்களுக்கு இது போன்ற தனித்தனி கணக்குகள் இருக்கும் பட்சத்தில், ஒரு அப்ளிகேஷனின் தனித்தனி நகல்களை உருவாக்கி, உங்கள் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

2) பராலல் ஸ்பேஸஸ்
நீங்கள் அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, முகப்பு திரையில் மூன்று பட்டன்கள் இருப்பதை காணலாம். அவையாவன:

a) கண்களுக்கு புலப்படாமல் நிறுவப்பட்டவை
b) கன்ட்ரோல் சென்டர்
c) + குறியீடு

மேற்கூறிய இந்த கீ-களின் செயல்பாடுகளைக் குறித்து மேலும் விரிவாக கீழ் விளக்குகிறோம்:


a) கண்களுக்கு புலப்படாமல் நிறுவப்பட்டவை
இந்த அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அப்ளிகேஷன்களை நிறுவ முடியும் என்பதோடு, உங்கள் முகப்பு திரையில் அவை பராலல் ஸ்பேஸஸ் ஷாட்கட்டாக தெரியாது. பராலல் ஸ்பேஸஸிற்குள் மட்டுமே அவை கிடைக்கப் பெறும்.

பராலல் ஸ்பேஸில் ஒரு உண்மையான ஆண்ட்ராய்டு சூழ்நிலையில் இயக்கப்படுவதால், உள்நுழை (லாக்இன்) மற்றும் அப்ளிகேஷன்களை, சாதனத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி வைத்து கொள்கிறது.

b) கன்ட்ரோல் சென்டர்
இந்த தேர்வு மூலம் அமைப்புகள், டாஸ்க் மேனேஜர் மற்றும் FAQ போன்ற பிற தேர்வுகள் ஆகியவற்றிற்கு அணுகல் அளிக்கப்படுகிறது

இந்த அமைப்புகளில் நீங்கள் பெரும்பாலும் கவனிக்க வேண்டியவை எவை என்றால்:
1) ஷாட்கட் உருவாக்கு

2) பராலல் ஸ்பேஸ்க்கு ஸ்வைப் செய்

3) அப்ளிகேஷன்களுக்கான ஷாட்கட்டை தானாக உருவாக்கு

c) + குறியீடு
இந்த செயல்பாட்டின் மூலம் அப்ளிகேஷன்களை நீங்கள் நகலெடுக்க முடிகிறது. அதன் மீது கிளிக் செய்வதன் மூலம் ஒரு பட்டியல் திறக்கப்படுகிறது. அதில் உங்கள் அப்ளிகேஷன்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்களை உருட்டி பார்க்கலாம். அதன்மீது தட்டுவதன் மூலம் ப்ளே ஸ்டோருக்கு அழைத்து செல்லப்பட்டு, குறிப்பிட்ட அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு, பராலல் ஸ்பேஸ்ஸிற்கு திரும்ப வந்து, அவற்றை நகலெடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
How to create copies of apps to use multiple accounts: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X