வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்வது எப்படி?

இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதையும் மிக எளிதாக பரிசோதிக்க முடியும்.

|

ஜனநாயக செயல்பாடு மற்றும் வாக்களிப்பில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும் என்பதோடு, இது ஒரு நேர்மையான செயல்பாடு ஆகும். எல்லா மனிதர்களுக்கும் ஒரு வாக்காளர் அட்டை அவசியம் என்பதோடு, வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும். ஒரு வாக்காளர் அடையாள அட்டையைப் பெற ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பத்தின் நிலையை பரிசோதிக்கலாம், இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதையும் மிக எளிதாக பரிசோதிக்க முடியும். இப்படி இதற்கான முழு செயல்முறையும் முடிவடைந்த பிறகு, உங்கள் வாக்காளர் அட்டையை கைகளில் பெற்று கொள்ள முடிகிறது.

இந்நிலையில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள சில தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், இதை திருத்துவதற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும். சிலரது வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் தப்பாக இருக்கும், சிலருக்கு முகவரிகள் தவறாக இருக்கும் என்று நாங்கள் அறிவோம். வாக்காளர் அடையாள அட்டையில் செய்ய வேண்டிய இப்படிப்பட்ட எல்லா திருத்தங்களையும் ஆன்லைனில் செய்ய முடியும்.

 வாக்காளர் அடையாள அட்டை:

வாக்காளர் அடையாள அட்டை:

வாக்காளர் அடையாள அட்டையில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆன்லைனில் மேற்கொண்டு, அதை புதுப்பிக்க எப்படி விண்ணப்பிப்பது என்பதை கீழே காண்போம். ஆன்லைனில் ஒரு வாக்காளர் அடையாள அட்டையை புதுப்பிக்க நீங்கள் விண்ணப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில்
உள்ளது என்பதையும் ஆன்லைனிலேயே பரிசோதித்து பார்க்கலாம்.

  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல் இணையதளத்திற்கு சென்று, கீழ் நோக்கி உருட்டி வாக்காளர் வரிசையில் உள்ள உள்ளீடுகளில் திருத்தம் என்பதில் உள்ள இங்கே கிளிக் செய்யவும் என்பதன் மீது கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். இல்லாவிட்டால், நேரடியாக என்விஎஸ்பி விண்ணப்பம் 8-க்கு செல்லலாம்.

மேற்பகுதியில் உள்ள கீழ்நோக்கிய விழும் மெனுவில் இருந்து மொழியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தொகுதிகள் போன்ற அடிப்படை தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்போது கீழ்நோக்கி உருட்டி சென்று அடுத்த பிரிவில் உள்ள திருத்தம் செய்வதற்கான உள்ளீடு மீது டிக் செய்யவும். எந்தெந்த விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டுமோ, அவற்றை இங்கு டிக் செய்ய வேண்டும். பல்வேறு விவரங்களை கூட நீங்கள் டிக் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வுகளை டிக் செய்த பிறகு, தொடர்புடைய பிரிவுகள் அனைத்தும் சாம்பல் நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறும். அதில் விவரங்களை பூர்த்தி செய்யலாம் அல்லது தொடர்புடைய தகவல்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

இப்போது குறிப்பிட்டது போல, அந்த விண்ணப்பத்தில் உள்ள மீதமுள்ள காரியங்களையும் பூர்த்தி செய்து, உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பர் போன்ற தகவல்களை மறக்காமல் சேர்க்கவும்.

இதையெல்லாம் செய்த பிறகு, அந்த பக்கத்தின் கீழே உள்ள சமர்ப்பி என்ற பொத்தான் மீது கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல்:

மின்னஞ்சல்:

இப்போது இந்த விண்ணப்பத்தின் தகவல்களை கொண்ட ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு கிடைக்கப் பெறும். இந்த விவரங்களை வைத்து கொண்டு,
உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் திருத்தம் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பது அவ்வப்போது பரிசோதித்து அறியலாம்.
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனில் திருத்தம் செய்யும் போது, பொதுவாக கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்களை கீழே அளித்துள்ளோம்.

 வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய, நான் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய, நான் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

இது குறித்து மேலே குறிப்பிட்டுள்ளோம். என்விஎஸ்பி இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் 8-யை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும். இந்த விண்ணப்பத்தை ஒரு நகலெடுத்து, நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அங்கேயும் சமர்ப்பிக்கலாம்.

 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்

ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டிய விவரத்தை பொறுத்து, ஆவணங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் புகைப்படம் தவறாக இருக்கும் பட்சத்தில், சரியான புகைப்படத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பெயரில் எழுத்துப் பிழை இருக்கும் பட்சத்தில்,
உங்கள் பிறப்பு சான்றிதழ், பேன் கார்டு, பாஸ்போர்ட் அல்லது இதர தகுதியான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டைக்கான
தகுதியான ஆவணங்களின் முழு பட்டியலை இங்கு காணலாம்.

எவ்வளவு நாட்கள் ஆகும்?

எவ்வளவு நாட்கள் ஆகும்?

புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற, சுமார் 30 நாட்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இந்த கால அளவு மாறுபடுகிறது. திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்த என்னுடைய பழைய வாக்காளர் அடையாள அட்டையை, நான் ஒப்படைக்க வேண்டுமா? இல்லை. உங்கள் பழைய வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்க தேவையில்லை. சரியான தகவல்களுடன் கூடிய புதிய அடையாள அட்டை உங்களுக்கு கிடைத்த உடன், அதை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Correct or Update Voter ID Card Details Online ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X