ஆண்ட்ராய்டு சாதனத்தில் புகைப்படங்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் எடுப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருக்கும் எவ்வித புகைப்படங்களில் இருந்தும் எழுத்துக்களை மட்டும் எடுப்பது எளிமையான காரியமே.

|

ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருக்கும் எவ்வித புகைப்படங்களில் இருந்தும் எழுத்துக்களை மட்டும் எடுப்பது எளிமையான காரியமே. புகைப்படங்களில் இருக்கும் எழுத்துக்களை எடுத்து அவற்றை சரியான இடத்தில் வைக்க நினைத்தால், இதனை ஆண்ட்ராய்டு போனில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் புகைப்படங்களில் இருக்கும் எழுத்துக்களை எடுப்பது எப்படி?

சில செயலிகளை பயன்படுத்தினால், புகைப்படம் அல்லது டாக்யூமென்ட்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளலாம். இந்த செயலி புகைப்படங்களில் இருக்கும் வார்த்தைகளை ஸ்கேன் செய்வதோடு மட்டுமின்றி அவற்றுடன் ஒற்றுப்போகும் வார்த்தைகளையும் பரிந்துரைக்கும். இவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு சாதனத்தில் புகைப்படங்களில் இருக்கும் எழுத்துக்களை காப்பி செய்வது எப்படி?

வழிமுறை 1:
முதலில் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். Text Fairy எனும் செயலியை டவுன்லோடு செய்து புகைப்படங்களில் இருக்கும் எழுத்துக்களை ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.

வழிமுறை 2:
டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்து முடித்ததும், செயலியை ஸ்மார்ட்போனில் லான்ச் செய்யவும். இதற்கு ஸ்மார்ட்போனில் இருக்கும் மீடியா, போட்டோஸ் மற்றும் ஃபைல்ஸ் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

வழிமுறை 3:
இங்கு இரு ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். ஒன்று புகைப்படத்தை கேலரியில் இருந்து தேர்வு செய்வது, மற்றொன்று ஸ்கேன் செய்வது. இரண்டில் நீங்கள் விரும்பும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

வழிமுறை 4:
இனி நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 5:
எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் உங்களிடம் இருக்கும். அடுத்து செயலியில் காணப்படும் start text recognition எனும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி செயலி புகைப்படத்தை முழுமையாக ஸ்கேன் செய்யும். சில நிமிடங்கள் காத்திருந்தால், எழுத்துக்கள் ஸ்கேன் ஆகியிருப்பதை பார்க்க முடியும். ஸ்கேன் ஆகியிருக்கும் எழுத்துக்களை அழுத்திப்பிடித்து அவற்றை காப்பி செய்து கொள்ளலாம்.

வழிமுறை 6:
மொத்த எழுத்துக்களையும் வாசித்தபின் செயலியில் 'that went well’ எனும் வாக்கியம் தெரியும். இதைத் தொடர்ந்து காப்பி, ஷேர் அல்லது பிடிஎஃப் வடிவில் சேவ் செய்வது போன்ற ஆப்ஷன்களை பார்க்க முடியும்.

செயலியை பயன்படுத்தி நீங்கள் புகைப்படத்தில் இருக்கும் எழுத்துக்களை முழுமையாக எடுத்துவிட்டீர்கள்.

புகைப்படங்களில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் ஸ்கேன் செய்து எடுக்க பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. இவற்றில் கேம் ஸ்கேனர், கூகுள் கீப், டெக்ஸ்ட் ஸ்கேனர், ஓ.சி.ஆர். டெக்ஸ்ட் ஸ்கேனர், ஆஃபிஸ் லென்ஸ், டாகுஃபை ஸ்கேனர், டர்போஸ்கேன் உள்ளிட்டவை பிரபலமாக அறியப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
How to copy text from images on your Android device: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X