விஎல்சி மீடியா பிளேயர் இருக்கா.. அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க.!

Written By:

விஎல்சி மீடியா பிளேயர் தான் உலகம் முழுவதும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் விண்டோஸ் மீடியா பிளேயர் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். விண்டோஸ் பயனர்கள் திரைப்படங்கள் பார்க்க மற்றும் இசை கேட்க இந்த மீடியா பிளேயரை பதிவிறக்கம் செய்து தங்களின் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்கின்றனர்.

மல்டிமீடியா கோப்புகளை அனுபவிக்க முடியும் என்ற இதன் அம்சம் தான், இதை அதிக அளவிலான மக்கள் பயன்படுத்த முக்கிய காரணமாகும்.

விஎல்சி மீடியா பிளேயர் மூலம் வீடியோக்களை கன்வெர்ட் செய்வது என்பது மிகவும் வேகமான ஒரு முறையாகும் மற்றும் தரத்தில் கூட பல பண பெறும் மென்பொருட்களால் கூட அதை நிகழ்த்த இயலாது. அப்படியாக விஎல்சி மீடியா பிளேயர் உதவியுடன் பெரிய வீடியோக்களை எளிமையான வழிமுறைகள் கொண்டு கம்ப்ரஸ் செய்வது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

முதல் படியாக, விஎல்சி மீடியா பிளேயரை பதிவிறக்கம் செய்து அதை நிறுவவும் அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டது என்றால் அதை திறந்து உள்நுழையவும். பின்னர் மெனு பிரிவில் உள்ள 'மீடியா' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

பின்னர் கீழே வரை ஸ்க்ரோல் டவுன் செய்து கீழே 'கன்வெர்ட்/சேவ்' பட்டனை கிளிக் செய்யவும் உங்களுக்கு ஒரு விண்டோஸ் பாப் அப் திரையில் திறக்கும். அல்லது நீங்கள் மீடியா ஆப்ஷன்களை அடைய கண்ட்ரோல்+ஆர் (Ctrl + R) அழுத்தலாம்.

வழிமுறை #03

வழிமுறை #03

மூன்றாவது படியாக நீங்கள் கம்ப்ரஸ் செய்ய விரும்பும் வீடியோ கோப்பை தேர்வு செய்ய 'ஆட்' பொத்தானை கிளிக் செய்யவும்

வழிமுறை #04

வழிமுறை #04

உங்கள் கணினியில் இருந்து எந்தவொரு வீடியோ கோப்பையும் நீங்கள் தேர்வு செய்து மற்றும் அதை கம்ப்ரஸ் செய்ய கன்வெர்ட்' என்ற ஆப்ஷன் மீது கிளிக் செய்யவும்.

வழிமுறை #05

வழிமுறை #05

விஎல்சி இப்போது வீடியோ கோப்பை கன்வெர்ட் செய்யும். வீடியோ மாற்றமானது வீடியோவின் வடிவம் மற்றும் அளவை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை வீடியோ கம்ப்ரஸ் செய்யப்பட்ட பின்னர் அதை டெஸ்க்டாப்பில் சேமித்து வைத்துக் கொள்ளவும், கம்ப்ரஸிங் வேலை இனிதே முடிவடையும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
How To Compress a Large Video Files using VLC Media Player. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot