பிடிஎஃப் ஃபைல்களை ஒருங்கிணைப்பது எப்படி?

பிடிஎஃப் ஃபைல்கள் அலுவல் ரீதியிலாக அதிகம் பயன்படுத்தப்படும் ஃபார்மேட் ஆக இருக்கிறது.

By GizBot Bureau
|

பிடிஎஃப் ஃபைல்கள் அலுவல் ரீதியிலாக அதிகம் பயன்படுத்தப்படும் ஃபார்மேட் ஆக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஃபார்மேட் இல் இருந்தும், மற்ற ஃபார்மேட்களில் இருந்து பிடிஎஃப் ஃபார்மேட்களுக்கு கன்வெர்ட் செய்ய தெரிந்து கொள்வது பல வழிகளில் பயன் தரலாம். இதே போன்று பிடிஎஃப் ஃபைல்களை ஒரே டாக்குமென்ட் ஆக மாற்ற தெரிந்து கொள்வதும் முக்கியமானதாகும்.

பிடிஎஃப் ஃபைல்களை இணைக்க டிப்ஸ்.!

விண்டோஸ் மற்றும் மேக் ஓஎஸ் என எவ்வித இயங்குதளங்களை பயன்படுத்தினாலும், பிடிஎஃப் ஃபைல்களை எவ்வாறு ஒற்றை டாக்குமென்ட் ஆக மாற்ற வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 விண்டோஸ் வழிமுறை

விண்டோஸ் வழிமுறை

பிடிஎஃப் ரீடர்களில் மிகவும் பிரபலமானதாகவும், தலைசிறந்ததாகவும் இருக்கும் அடோப் அக்ரோபாட் சேவையில் பல்வேறு பிடிஎஃப்களை ஒன்றாக இணைப்பது எப்படி என அறிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த சேவையின் ஒற்றை பின்னடைவே இது பிரீமியம் மென்பொருள் என்பது மட்டுமே ஆகும், அந்த வகையில் இந்த சேவையை பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

எனினும் இந்த சேவையை இலவசமாக கொஞ்ச காலத்துக்கு பயன்படுத்த முடியும். இந்த காலக்கட்டத்தில் ஒரே முறை பல்வேறு பிடிஎஃப்களை ஒன்றிணைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழிமுறை 1:
முதலில் Adobe Acrobat DC free trial பதிப்பு மென்பொருளை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 2:

வழிமுறை 2:

இன்ஸ்டால் செய்ததும், மென்பொருளை ஓபன் செய்து திரையின் இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் "Tools" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:

வழிமுறை 3:

அடுத்து "Combine Files" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4:

வழிமுறை 4:

இனி "Add Files" பட்டனை க்ளிக் செய்து ஒன்றிணைக்கப்பட வேண்டிய பிடிஎஃப் டாக்குமென்ட்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த வழிமுறையை கொண்டு அனைத்து வித ஃபைல் ஃபார்மேட்களையும் ஒன்றிணைக்க முடியும்.

 வழிமுறை 5:

வழிமுறை 5:

நீங்கள் தேர்வு செய்த பிடிஎஃப்களில், "Combine" பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த பட்டனை வலது புற மேல்பக்கம் காண முடியும்.

வழிமுறை 6:

வழிமுறை 6:

இனி உங்களது பிடிஎஃப்கள் ஒரே டாக்குமென்ட் ஆக இணைக்கப்பட்டு இருக்கும். இனி இவற்றை புதிய லொகேஷனில் சேவ் செய்தால் வேலை முடிந்தது. இதற்கு "File" மற்றும் "Save As" ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

அடோப் அக்ரோபட் பிடிக்கவில்லை என்றாலோ, இதன் இலவச ட்ரையல் நிறைவடைந்தாலோ விண்டோஸ் இயங்குதளங்களுக்கென உருவாக்கப்பட்ட பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. இவற்றில் விலை குறைவான மற்றும் சிறப்பான சேவையாக Perfect PDF Combine இருக்கிறது.

மேக் ஓஎஸ் இயங்குதள வழிமுறைகள்

மேக் ஓஎஸ் இயங்குதள வழிமுறைகள்

முந்தைய பதிப்புகளும், சமீபத்திய ஹை சியர்ரா இயங்குதளங்கள் பிடிஎஃப் ஒன்றிணைக்கப்பட்டதும், அவற்றை பிரீவியூ பார்க்க வழி செய்கின்றன, இதன் மூலம நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை பார்த்து கொண்டே இருக்க முடியும்.

மிகவும் எளிமையாக பிடிஎஃப்களை ஒன்றிணைக்க கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றலாம். இந்த வழிமுறைகளை மேலும் வேகமாக செய்து முடிக்க கீபோர்டு ஷாட்கட்களை பயன்படுத்தலாம்.

பிடிஎஃப் ஃபைல் பிரீவியூ செய்வது எப்படி?

பிடிஎஃப் ஃபைல் பிரீவியூ செய்வது எப்படி?

வழிமுறை 1:
முதலில் "Finder" ஓபன் செய்து நீங்கள் ஒன்றிணைக்க வேண்டிய பிடிஎஃப் ஃபைல்களை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 2:
ஃபைல்களை ஓபன் செய்ததும், மிக எளிமையான பிரீவியூ மோட் காணப்படும். ஒருவேளை நீங்கள் பெரிய திரை கொண்டிருந்தால் அனைத்து தரவுகளையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும். ஒரே சமயத்தில் அதிகபட்சம் இரண்டு பிரீவியூ மோட்களையாவது பார்க்க வேண்டியிருக்கும்.

வழிமுறை 3:
ஒவ்வொரு விண்டோவிலும், "View" மெனு சென்று "Thumbnails" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், ஒவ்வொரு பக்கத்திற்குமான சைடுபார் ஓபன் செய்யப்படும்.

வழிமுறை 4:
டிராக் மற்றும் டிராப் அம்சத்தை பயன்படுத்தி, உங்களுக்கு வேண்டிய பிடிஎஃப்களை ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட வரிசையிலோ டிராக் செய்து ஒன்றிணைக்கலாம்.

நீங்கள் க்ளிக் செய்து அவற்றை டிராப் செய்யும் போது உங்களது திரையில் விஷுவல் கியூக்களை பார்க்க முடியும். இந்த குறியீடுகளை பார்த்து, மாஸ்டர் டாக்குமென்ட்-ஐ சரியாக செய்து முடிக்கலாம். பக்கங்களின் வரிசையை மாற்றியமைத்தோ அல்லது வெவ்வேறு கோணங்களில் திருப்பவோ முடியும்.

வழிமுறை 5:
வழிமுறை நிறைவுற்றதும், புதிய டாக்குமென்ட் பெயரை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

வலைத்தள வழிமுறை -

வலைத்தள வழிமுறை -

ஆன்லைனில் பிடிஎஃப்களை ஒன்றிணைக்க பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன. இவற்றை கொண்டு பிடிஎஃப் ஃபைல்களை மிக வேகமாக ஒன்றிணைக்க முடியும். பெரும்பாலும் இந்த சேவைகள் உங்களின் பிடிஎஃப்கள் எங்கிருந்து வருகின்றன என்பது பற்றி கவலை கொள்ளாது என்பதால், இவற்றை இயக்க கூடுதலாக எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. எனினும் இவை மிக கடுமையான ஃபைல் அளவுகளை கொண்டுள்ளன.

மெர்ஜ் பிடிஎஃப் (Merge PDF)
முதலில் பிடிஎஃப் மெர்ஜ் சேவையை ஓபன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பல்வேறு பிடிஎஃப் ஃபைல்களை டிராக் மற்றும் டிராப் செய்ய மிக எளிமையான விண்டோ திறக்கும். இவற்றில் பல்வேறு பிடிஎஃப் ஃபைல்களை முதலில் தேர்வு செய்து கொண்டு உங்களுக்கு தேவையான அளவு ஃபைல்களை சேர்க்க முடியும்.

இனி கம்பைன் ஆப்ஷன் மூலம் தேர்வு செய்த பிடிஎஃப் ஃபைல்களை ஒன்றிணைக்க முடியும். இந்த சேவையின் இலவச பதிப்பு அதிகபட்சம் 15 எம் வரை மட்டுமே வழங்குகிறது. இதைத்தொடர்ந்து அதிகளவு உள்ள ஃபைல்களை கன்வெர்ட் செய்ய கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

பிடிஎஃப் ஜாய்னர் (PDF Joiner)
பிடிஎஃப் ஜாய்னர் சேவை அனைத்து வித பயனர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது. அனைத்து வித ஃபைல் ஃபார்மேட்களுக்கும் ஏற்றதாக இருப்பதோடு மாற்றங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். இந்த மெனேபொருள் கொண்டு ஒரே சமயத்தில் 20 ஃபைல்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஸ்மால் பிடிஎஃப் (Smallpdf)
இந்த சேவையை மிக எளிமையாக டவுன்லோடு செய்ய முடியும் என்பதோடு டிராப் பாக்ஸ் அல்லது கூகுள் டிரைவ் மூலம் ஃபைல்களை நேரடியாக இந்த சேவையில் இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். அனைத்து வித பயன்பாடுகளையும் வழங்கும் இந்த சேவை மிகவும் சிறப்பான மற்றும் சீரான அனுபவத்தை வழங்கும்.

இந்த மென்பொருள் பாதுகாப்புக்கு அதிக முககியத்தும் வழங்குகிறது. இத்துடன் நீங்கள் உருவாக்கிய செயலிகளை பார்க்க முடியும்,

ஆக்ஸியுடில் மெர்ஜ் பிடிஎஃப (oxyutil's Merge PDF): இந்த சேவை மிக எளிமையாகவும், பன்படுத்த சிறப்பானதாகவும் இருக்கிறது. பிடிஎஃப் ஃபைல்களை ஒன்றிணைத்தால், மரம் நிடுவிழா திட்டங்களில் உங்களது பங்களிப்பு அதிதமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
How to combine PDF files : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X