டிவிட்டர் வரலாற்றை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நீக்கும் வழிமுறைகள்

|

இங்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டியின் மூலம் உங்கள் டிவிட்டர் கணக்கின் வரலாற்றை நீக்க எளிதாக இருக்கும்.

டிவிட்டர் வரலாற்றை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நீக்கும் வழிமுறைகள்

நம் வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள், ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. உங்கள் நண்பர்கள், குடும்பம், உடன் பணியாற்றுபவர்கள், முதலாளி என்று ஏறக்குறைய எல்லாருமே, உங்களை இந்தத் தளங்களின் மூலம் பின்தொடர்ந்து நீங்கள் யார் என்பதை அறிய முயற்சிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த வகையில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களின் வரிசையில் டிவிட்டரும் ஒன்று.

நீங்கள் டிவிட்டர் பக்கத்தில் அதிக ஈடுபாடுடன் செயல்படும் நபராக இருக்கும் பட்சத்தில், வெளிப்படையான பல்வேறு காரணங்களுக்காக உங்கள் டிவிட்டர் கணக்கின் வரலாற்றைக் குறித்து நீங்கள் சிந்திக்க நேரிடலாம். இந்நிலையில் உங்கள் டிவிட்டர் கணக்கின் வரலாற்றில் நீக்கும் செயல்பாட்டைக் குறித்து இந்தக் கட்டுரையில் வழிகாட்டுதலை அளிக்க உள்ளோம்.

டிவிட்டரில் உள்ள எல்லா மெசேஜ்களையும் எப்படி நீக்குவது?

டிவிட்டரில் உள்ள எல்லா மெசேஜ்களையும் எப்படி நீக்குவது?

டிவிட்டரில் உள்ள நேரடியான மெசேஜ்களை, டிஎம் வெக்கரை பயன்படுத்தி நீக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. மெசேஜ்களை நீக்குவதற்கான இந்தக் கருவியைப் பயன்படுத்த பழைய டிவிட்டர் இடைமுகத்தை நாட வேண்டியுள்ளது. இருப்பினும், பின்வரும் படிகளை நீங்கள் பின்பற்றினால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது.

படி 1: ஏதாவது ஒரு டிவிட்டர் பக்கத்தை திறந்து, மேலே வலது முனையில் காணக் கிடைக்கும் உங்கள் பெயர் மீது கிளிக் செய்யவும். "ஸ்விட்ச் டு ஓல்டு டிவிட்டர்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படி 2: டிஎம் வெக்கரின் அதிகாரபூர்வமான பக்கத்தைத் திறந்து, உங்கள் இணைய பிரவுஸரின் புக்மார்க்கில் உள்ள கருவியின் புக்மார்க் இணைப்பை, அதற்குள் இழுத்து போடவும்.

படி 3: டிவிட்டரின் "நேரடி மெசேஜ்" பக்கத்திற்குச் சென்று, டிஎம் வெக்கர் புக்மார்க் மீது கிளிக் செய்து நேரடி மெசேஜ்களின் வரலாறுகளை நீக்கவும்.

டிவிட்டரில் உள்ள தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் டிவிட்களை எப்படி நீக்குவது?

டிவிட்டரில் உள்ள தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் டிவிட்களை எப்படி நீக்குவது?

டிவிட்டரில் உள்ள ஒருசில தனிப்பட்ட மெசேஜ்களை நீக்க வேண்டுமானால், கீழே அளிக்கப்பட்டுள்ள படிகளைக் கைமுறையாக பின்பற்றலாம்.

படி 1: டிவிட்டரில் உள்நுழைவும்

படி 2: உங்கள் சுயவிவரத்தின் மீது கிளிக் செய்து, நீங்கள் நீக்க விரும்பும் டிவிட்டின் மேலே சுற்றவும்.

படி 3: தனிப்பட்ட முறையில் அந்த இடுகைகளை அகற்றுவதற்கு, இப்போது நீங்கள் காணும் "நீக்கு" இணைப்பின் மீது கிளிக் செய்யவும்.

உங்கள் டிவிட்டரில் இருந்து தனிப்பட்ட முறையில் மெசேஜ்களை நீக்க வேண்டும் என்று விரும்பினால், "மெசேஜ்ஸ்" மீது கிளிக் செய்து, நீங்கள் நீக்க விரும்பும் மெசேஜ் மேலே சுற்றவும். அப்போது "நீக்கு" இணைப்பைக் காணலாம், தனிப்பட்ட முறையில் மெசேஜ்களை நீக்குவதற்கு, அதன்மீது கிளிக் செய்யவும்.

எல்லா கடந்த கால டிவிட்டுகளையும் எப்படி நீக்குவது?

எல்லா கடந்த கால டிவிட்டுகளையும் எப்படி நீக்குவது?

உங்கள் முழு டிவிட் வரலாற்றையும் நீக்குவதற்கு, டிவிட்வைப்-பை பயன்படுத்தலாம். இந்தக் கருவியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்த படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படி 1: உங்கள் இணைய பிரவுஸரில் இருந்து twitwipe.com-க்குச் செல்லவும்.

படி 2: "டிவிட்டர் உடன் உள்நுழை" என்பது மீது கிளிக் செய்யவும். உங்கள் கணக்கை இயக்க செய்ய தேவைகளைத் தகவல்களை அளிக்கவும்.

படி 3: "இந்தக் கணக்கை டிவிட்வைப் செய்" டேப்பை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் எல்லா கடந்த கால டிவிட்களும் தானாக நீக்கப்பட்டது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
முடிவுரை

முடிவுரை

உங்கள் டிவிட்டர் கணக்கின் சமீபகால மற்றும் பழைய வரலாறுகளை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நீக்குவது குறித்து இப்போது அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஏனெனில் பழையவைகளைக் களைந்து விடுவதற்கான நேரம் வந்துவிட்டது!

ஃபேஸ்புக் வசதியுடன் வெளிவரும் அசத்தலான ஜியோபோன்.!ஃபேஸ்புக் வசதியுடன் வெளிவரும் அசத்தலான ஜியோபோன்.!

Best Mobiles in India

English summary
If you are hyperactive on Twitter, you might consider your Twitter history for obvious reasons. In this post, we will guide you through the deletion process of your Twitter history.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X