Home
How to

விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வாங்க போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சிகோங்க.!

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை நிச்சயம் சொல்லலாம்.

By Meganathan S

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை நிச்சயம் சொல்லலாம். மனித கற்பனையை கம்ப்யூட்டரில் புகுத்தி, தலையில் அணிந்து கொள்ளக்கூடிய ஹெட்செட் மூலம் அவற்றை அனுபவிக்கச் செய்யும் அற்புத வேலையை விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் செய்து வருகின்றன.

சரியான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ தேர்வு செய்ய சூப்பர் டிப்ஸ்.!

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் வீடியோக்களில் துவங்கி, கேமிங் பல்வேறு பல்வேறு இதர துறைகளில் நம்மை மகிழ்வித்தும், நமக்கு தெரியாதவற்றை கற்பித்தும் வருகிறது.
நம் அன்றாட இயந்திர வாழ்வில் இருந்து நமக்கு விடுமுறையளிக்கும் விதமாக இருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிலநுட்பத்தை சாத்தியமாக்கும் ஹெட்செட்-ஐ நீங்களும் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா?

உங்களுக்கு தேவையான சரியான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ தேர்வு செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஸ்டான்ட் அலோன் (எ) டெதர்டு

ஸ்டான்ட் அலோன் (எ) டெதர்டு

இரண்டு வித விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளக்கூடியவை என்றாலும், இவற்றை பயன்படுத்தும் அனுபவம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். ஸ்டான்ட் அலோன் ஹெட்செட் பெயருக்கு ஏற்றார்போல் உங்களை சுதந்திரமாக நடமாட செய்யும். இது மற்றொரு சாதனத்துடன் இணைக்கப்படவில்லை என்பதால் அதிக பரப்பளவில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும்.

எனினும் டெதர் செய்யப்படவில்லை என்பதால் சீரான சேவையை தொடர்ந்து அனுபவிக்க முடியாது. குறிப்பிட்ட சாதனத்தில் இருந்து ஹெட்செட்-க்கு அனுப்பப்படும் சிக்னல்களால் தலைசிறந்த அனுபவத்தை பெற முடியாது. மேலும் இதுபோன்ற ஹெட்செட்கள் எடை அதிகமாகவும், சவுகரியமற்றதாகவும் இருக்கும்.

சிக்னல்களில் தாமதம் ஏற்படும் போது விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை முழுமையாக பெற முடியாது. மேலும் இவை அதிக மின்சக்தியையம், கணினி திறனையும் பயன்படுத்தும். திரைப்படங்களை பார்க்க மட்டும் பயன்படுத்தினால் பரப்பளவு பெரிய பிரச்சனையாக இருக்காது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஹெட்செட்களின் வடிவமைப்பு முற்றிலும் தனிநபர் சார்ந்த விஷயம் என்பதால், இவை எந்தளவு சவுகரியமாக இருக்கும் என்பதை பார்ப்போம். விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை அதிக நேரம் பயன்படுத்துவோம் என்பதால், இவை சரியான தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மோசமான வடிவமைப்பு கொண்ட விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் விஆர் அனுபவத்தை மட்டுமின்றி உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மற்றொரு உலகத்தை அனுபவிக்கும் போது பிளர் அல்லது தூசிகள் அதிகம் இருப்பின், உண்மையான விஆர் அனுபவத்தை பெற்றுவிட்டதாக ஏமாற்றி கொள்ள முடியாது. அந்த வகையில் சிறப்பான டிஸ்ப்ளே இருந்தால் மட்டுமே தலைசிறந்த விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை பெற முடியும். இன்டகிரேட்டெட் டிஸ்ப்ளே கொண்ட ஹெட்செட்களும் கிடைக்கும் நிலையில் சில வகையான ஹெட்செட்களில் நீங்கள் ஸ்மார்ட்போனை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

காட்சி திறன்

காட்சி திறன்

மனித கண்களுக்கு சராசரியாக பார்வையின் கோணம் 180 முதல் 240 கோணங்களில் பார்க்கக்கூடிய பார்வை திறன் இருக்கும். ஹெட்செட்களின் காட்சி திறன் என்பது மற்றொரு உலகத்தை நம் கண்களில் மிக தெளிவாக பிரதிபலிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

மாற்றக்கூடிய லென்ஸ்கள்

மாற்றக்கூடிய லென்ஸ்கள்

உங்களுக்கு சரியான லென்ஸ்களை கண்டறியும் போது மூன்று அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

அ) ஃபோகஸ்

ஆ) இன்டர்பியூப்பல்ரி டிஸ்டன்ஸ் (IPD)

இ) லென்ஸ் முதல் கண் வரையிலான தூரம்

டிராக்கிங் மற்றும் கன்ட்ரோலர்கள்

டிராக்கிங் மற்றும் கன்ட்ரோலர்கள்

டிராக்கிங் மற்றும் கன்ட்ரோலர்களை சரியாக தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

அ) டிராக்கிங் பகுதி - சிமுலேஷனுக்கு பயன்படுத்தக்கூடிய கோணங்களையே டிராக்கிங் பகுதி என அழைக்கப்படுகிறது.

ஆ) பொசிஷனல் டிராக்கிங் - தலைசிறந்த விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்கு டிராக்கர்கள் நிர்ணயிக்கும் குறிப்பிட்ட பொருள் அல்லது மனிதர் இருக்கும் இடம் முக்கியமானதாகும். சீரற்ற முறையில் பொருத்தப்பட்டால், விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை சீர்குலைத்து விடும்.

Best Mobiles in India

English summary
How to choose the right VR headset ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X