சிறந்த ஃபிட்னஸ் பேண்டு தேர்ந்தெடுப்பது எப்படி?

|

இப்போது சந்தையில் உள்ள பல வகையான ஃபிட்னஸ் டிராக்கர்களின் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து, ஒரு சிறந்த தயாரிப்பை உங்களுக்காக தேர்ந்தெடுப்பது என்பது சற்று சிரமமான காரியமே. உங்கள் தேவைகள் மற்றும் வாழ்வுமுறை செயல்பாடுகளுக்கு ஏற்ப, தகுந்த ஃபிட்னஸ் டிராக்கர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சிறந்த ஃபிட்னஸ் பேண்டு தேர்ந்தெடுப்பது எப்படி?

பெரும்பாலான ஃபிட்னஸ் டிராக்கர்களின் விலை $50 முதல் $250-க்கு இடைப்பட்டதாக நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, குறைந்த விலையில் கிடைக்கும் ஃபிட்னஸ் டிராக்கர்களில் திரை இருக்காது என்பதால், உங்களுக்கு தேவைப்படும் தகவல்களைப் பெற உங்கள் ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டும். ஆனால் கூடுதல் விலை கொண்ட ஃபிட்னஸ் டிராக்கர்களில் திரை காணப்படும் என்பதோடு, ஜிபிஎஸ் மற்றும் காணக்கூடிய வகையிலான இதய துடிப்பை அறியும் மானிட்டர் ஆகியவை காணப்படுகின்றன.

நடத்தல் போன்ற துவக்க நிலை செயல்பாடுகளுக்காக ஒரு ஃபிட்னஸ் பேண்டு உங்களுக்கு தேவைப்பட்டால், பல அம்சங்களுடன் கூடிய அதிக விலையில் கிடைக்கும் ஃபிட்னஸ் பேண்டு வாங்க தேவையில்லை. எனவே உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து எந்த மாதிரியான ஃபிட்னஸ் டிராக்கர் உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டியது ஒரு முக்கிய காரியம் ஆகும்.

ஃபிட்னஸ் டிராக்கர்களின் வகைகள்

ஃபிட்னஸ் டிராக்கர்களின் வகைகள்

உங்கள் செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அமைந்த ஒரு ஃபிட்னஸ் டிராக்கரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பிரேஸ்லெட்கள் மற்றும் வாட்ச்கள் கழட்டுவதற்கு கடினமாக இருக்கும், ஆனால் கிளிப்-ஆன்-களை எளிதாக கழட்டலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மெல்லியதாகவும் எடைக் குறைந்ததாகவும் இருக்கும் பிரேஸ்லெட்கள் அளவில் சிறிய ஒரு திரை மற்றும் அறிவிப்புகளுக்கான எல்இடி-களைப் பெற்றிருக்கும்.

வாட்ச் ஃபிட்னஸ் டிராக்கர்கள் பெரியதாகவும் ஸ்டைலாகவும் காணப்படுகின்றன. இதில் ஒரு பெரிய டிஸ்ப்ளே இருப்பதோடு, செயல்பாட்டு அறிவிப்புகளைக் காணவும் பயன்படுத்தி கொள்ளலாம். கிளிப்-ஆன்-கள் என்பது மிகவும் திறனுள்ளவை என்பதால், அணிந்து கொள்ளும் ஓடுவதற்கான ஷூவில் கூட அதை பொருத்தி கொள்ளலாம். மேலும் இவை அளவில் சிறியவை என்பதால், அதை விரைவில் இழக்கவும் வாய்ப்புள்ளது.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

அம்சங்களைப் பொறுத்த வரை, திரை, நீர் எதிர்ப்பு தன்மை ஆகியவை ஃபிட்னஸ் பேண்டுகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரியங்கள் ஆகும்.

திரை:

திரை:

வழக்கமாக கிளிப்-ஆன் டிராக்கர்களில் தகவல்களை அறிந்து கொள்ள வகையில் திரை இருக்காது. இதனால் செயல்பாடுகளைக் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் ஃபோனை பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு சிரமமான காரியமாகும்.

பேண்டு: இந்த சாதனங்கள் வழக்கமாக பருமனாக இருக்கும் என்பதால், உங்கள் வெளித் தோற்றத்திற்கு கச்சிதமாக சில நேரங்களில் தோற்றம் அளிக்காது. கிளிப்-ஆன் சாதனங்கள் சிறியவை என்பதோடு, அதிக திறனுள்ளவை.

நீர் எதிர்ப்பு தன்மை: பொதுவாக, நீர் தாக்குதலை சமாளிக்கும் தன்மை கொண்ட ஃபிட்னஸ் டிராக்கர்கள், நீரை தாங்கும் கவசத்தைப் பெற்று இருக்கின்றன. இது தவிர, சில ஃபிட்னஸ் டிராக்கர்களில் நீர் எதிர்ப்பு தன்மை காணப்படுவதால், நீச்சலுக்கு உகந்த வகையில் தண்ணீருக்கு அடியிலும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ: வெறும் ரூ.9,999/- முதல்.!ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ: வெறும் ரூ.9,999/- முதல்.!

பேட்டரி

பேட்டரி

ஒரு ஃபிட்னஸ் டிராக்கரில் பேட்டரி கொள்ளளவு திறன் என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது இவற்றை சார்ஜ் செய்ய முடியாது. எனவே நாம் வாங்கும் சாதனத்தில் நீண்டநேர பேட்டரி கொள்ளளவு திறன் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு

மேற்கண்ட அம்சங்களைத் தவிர, இதயத் துடிப்பு கண்காணிப்பு, செயல்பாடு கண்காணிப்பு, செயல்பாடு அறிக்கைகள், செலவழிந்த கலோரிகளின் அளவு, தூக்கத்தை கண்காணித்தல், நுட்பமான எச்சரிக்கையூட்டி, செயல்பாடு இல்லாததை குறித்த எச்சரிப்புகள், அறிவிப்புகள், இணைப்பு மற்றும் பல்வேறு அம்சங்களையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Choosing the right fitness band is based on your needs and lifestyle activities. Usually, the less expensive trackers will not have a display so you need to look at your smartphone to see the data.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X