Home
How to

முடிகிறது ஜியோ இலவசங்களுக்கான கெடு : அடுத்த நாம் செய்ய வேண்டியது என்ன.?

அடுத்த சில வாரங்களில் காலாவதியாகும் இந்த தருணத்தில் அடுத்தது என்ன செய்யலாம்.? - என்பது தான் நமக்குள் எழும் ஒரு பொதுவான கேள்வியாகும்.

ஏப்ரல் மாதம் முதல் கட்டண திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள், இன்னும் நம்பமுடியாத குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கிகின்றன என்பதே நிதர்சனம். முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது நாள் ஒன்றிற்கு ரூ.10/- முதல் திட்டங்களை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறது.

முடிகிறது ஜியோ இலவசங்களுக்கான கெடு : அடுத்த நாம் செய்ய வேண்டியது என்ன?

ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு அதாவது ஜியோ பிரதம உறுப்பினர்களுக்கு 90 நாட்களுக்கு முன்பாக ரூ.303/- க்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் இலவச சலுகையை வழங்கியது. அந்த சலுகை அடுத்த சில வாரங்களில் காலாவதியாகும் இந்த தருணத்தில் அடுத்தது என்ன செய்யலாம்.? - என்பது தான் நமக்குள் எழும் ஒரு பொதுவான கேள்வியாகும்.

எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்

எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்

இந்நேரத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியதெல்லாம் எது நாள் வரை ஜியோ திட்டம் செல்லுபடியாகும் மற்றும் பேலன்ஸ் என்ன என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதனை தொடர்ந்து நீங்கள் அடுத்த எந்த ரீசார்ஜ் பாக்ஸை தேர்ந்தெடுக்கலாம்.? எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகிய விவரங்களை பெறலாம்.

செல்லுபடி

செல்லுபடி

சரி உங்களுக்கான சிறப்பான அடுத்த ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தை சரிபார்ப்பது எப்படி.? மேலும் ஜியோ திட்டத்தின் செல்லுபடி மற்றும் சிம் அட்டையின் பேலன்ஸ் ஆகியவைகளை சரிபார்ப்பது எப்படி.? - ஒருவேளை உங்கள் தற்போதைய ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் செல்லுபடி காலத்தை காண விரும்பினால் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும். அத்துடன் மைஜியோ ஆப் பயன்படுத்தி உங்கள் ப்ரீபெய்ட் பேலன்ஸையும் சரிபார்க்கலாம்.

பேலன்ஸ் 'நில்'

பேலன்ஸ் 'நில்'

1. மைஜியோ பயன்பாட்டைத் திறந்து கடவுச்சொல் அல்லது சிம் சரிபார்ப்பு மூலம் உள்நுழையவும்.
2. நீங்கள் பயன்பாட்டைத் திறக்கும்போதே, மேலே உங்களின் பேலன்ஸை பார்ப்பீர்கள். உடன் நீங்கள் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் அல்லது ஜியோ தன் டாணா தன் ஆஃபருடன் இருந்தால் பேலன்ஸை பார்ப்பீர்கள். வேறு எந்த ரீசார்ஜும் நீங்கள் செய்யவில்லை எனில் உங்கள் பேலன்ஸ் 'நில்' என்று ஆதாவது ஒன்றுமில்லை என காட்டலாம்.

ஜியோ ப்ரைம் உறுப்பினர் முடிவு காலம்

ஜியோ ப்ரைம் உறுப்பினர் முடிவு காலம்

3. உங்கள் ஜியோ திட்டம் மற்றும் செல்லுபடியை சரிபார்க்க, இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக ஸ்வைப் செய்யவதின் மூலம் மெனுவைத் திறக்கவும்.
4. மை பிளான்ஸ் விருப்பத்தை சொடுக்கவும், செயலில் உள்ள திட்டத்தின் செல்லுபடி மற்றும் உங்கள் ஜியோ ப்ரைம் உறுப்பினர் முடிவு காலம் ஆகியவற்றை நீங்கள் காண்பீர்கள்.

ஜியோ.காம்

ஜியோ.காம்

இணைய தளத்தை பயன்படுத்தி உங்கள் ரிலையன்ஸ் ஜியோ திட்டம் செல்லுபடியாகும் காலம் மற்றும் பேலன்ஸ் சரிபார்க்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும் : 1. ஜியோ.காம் (Jio.com) வலைத்தளத்தைத் திறந்து, வலது மேல் உள்ள உள்நுழை விருப்பத்தை கிளிக் செய்யவும். இங்கே, கடவுச்சொல் அல்லது ஒடிபி-ஐ பயன்படுத்தி உங்கள் ஜியோ கணக்கில் உள்நுழையலாம்.

மைபிளான்ஸ்

மைபிளான்ஸ்

2. நீங்கள் உள்நுழைந்தவுடன், உங்கள் ரிலயன்ஸ் ஜியோ பேலன்ஸ் மேலே காட்சிப்படும். உங்களின் ஜியோ வேலிடிட்டி சரிபார்க்க, மைபிளான்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும், ஜியோ திட்டத்தின் காலாவதி தேதியை நீங்கள் கீழே பார்ப்பீர்கள். 3. வலைத்தளத்தில் கிடைக்கும் மை ஸ்டேட்மெண்ட்ஸ் விருப்பத்தில், உங்கள் தரவு நுகர்வு அறிக்கையை நீங்கள் உருவாக்கலாம்.

சரியான நாள் அன்று

சரியான நாள் அன்று

ஒருமுறை நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்தின் விவரங்களை அறிந்த பின்னர் செல்லுபடி காலம் முடியும் சரியான நாள் அன்று உங்களுக்கான அடுத்த ரீசார்ஜை நீங்கள் நிகழ்த்திக் கொள்ளலாம். உங்களுக்கான சிறந்த ரீசார்ஜ்தனை உங்கள் ஆப் மூலம் அல்லது வலைத்தளம் மூலம் தேர்ந்தெடுக்கலாம். அல்லது புதிய சலுகைகளை எதிர்நோக்கினால் அப்டேட் தகவல்களுக்காக தமிழ் கிஸ்பாட் செய்திகளை தொடருங்கள்.New-Jio-9.jpg

Best Mobiles in India

English summary
How to Check Your Reliance Jio Plan, Balance, Validity. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X