கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்க ஒரு வழி.!

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.

|

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார்  எங்கு பயன்படுத்தப்பட்டது: சரிபார்க்க

தற்சமயம் உங்கள் ஆதார் மற்றும் மொபைல் நம்பரையும் இணைப்பது மிகவும் எளிமையான முறைக்கு கொணடுவரப்பட்டுள்ளது, அதன்படி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது பயனர்களை ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க அனுமதிக்கின்றனர். மேலும் ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் இந்த செய்முறையின்கீழ், 14546 என்கிற டோல்-ப்ரீ எண்ணை கொண்டு உங்களின் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க முடியும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

ஆதார் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக நம்முடைய ஆதார் சார்ந்த தகவல்கள் பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். யுஐடிஏஐ (இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்) தற்சமயம் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளது, இது கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

யுஐடிஏஐ

யுஐடிஏஐ

மேலும் கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள யுஐடிஏஐ வலைதளத்தில் பார்க்க முடியும். குறிப்பாக இந்த வலைதளத்தில் புகார் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும் இணையதளம் உதவுகிறது.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் சாதனங்களில் https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இந்த வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டினை அந்த வலைதளத்தில் உள்ளிடவும்.

 வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்பு ஒடிபி-ஐ பெற அந்த வலைபக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும், பின்பு உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு அந்த ஒடிபி அனுப்பி வைக்கப்படும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் அந்த வலைதளத்தில் ஒடிபி-ஐ உள்ளிட வேண்டும். அடுத்து கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
How to check where your Aadhaar has been used; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X