உங்களின் ஸ்மார்ட்போன் கொண்டே பி.எஃப். அக்கவுண்ட் பேலண்ஸ் அறிந்து கொள்வது எப்படி?
அந்த வகையில் உமாங் செயலி, இ.பி.எஃ.ப்.ஓ. போர்டல், எஸ்.எம்.எஸ். என நான்கு வழிமுறைகளில் பி.எஃப். அக்கவுண்ட் பேலன்ஸ் தொகையை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
பி.எஃப். சலுகை பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் நன்மையாக இருந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்களது பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை சேர்ந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் எளிய வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் உமாங் செயலி, இ.பி.எஃ.ப்.ஓ. போர்டல், எஸ்.எம்.எஸ். என நான்கு வழிமுறைகளில் பி.எஃப். அக்கவுண்ட் பேலன்ஸ் தொகையை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

உமாங் செயலியை பயன்படுத்துவது
மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட செயலி தான் உமாங். இந்த செயலியில் பெரும்பாலான அரசு சேவைகளை பொதுமக்கள் இயக்கி பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு பயனர்கள் புகார் எழுப்புவது, இ.பி.எஃப். பாஸ்புக் விவரங்களை பார்ப்பது என பல்வேறு விவரங்களை இயக்க முடியும். இதற்கு பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் மூலம் ஒருமுறை பதிவு செய்து கொண்டாலே போதுமானது.
1 - முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் உமாங் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
2 - உங்களது மொபைல் நம்பர் மூலம் செயலியை பதிவு செய்து கொள்ளவும்.
3 - இனி செயலியின் இடதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் கோடுகளை க்ளிக் செய்யவும்.
4 - இனி Service Directory ஆப்ஷனை க்ளிக் செய்து EPFO ஆப்ஷனை தேடவும்.
5 - அடுத்து View Passbook ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது அக்கவுண்ட்டில் இருக்கும் தொகையை அறிந்து கொள்ளலாம்.

இ.பி.எஃப்.ஓ. வழிமுறையை பயன்படுத்துவது
செயலியை பயன்படுத்த வேண்டாம் என நினைப்போர் கணினி அல்லது லேப்டாப்பில் EPFO போர்டல் சென்று அக்கவுண்ட் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
1 - முதலில் www.epfindia.gov.in வலைதள முகவரிக்கு செல்லவும்.
2 - இனி Our Services ஆப்ஷனில் இருக்கும் For Employees ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - அடுத்து Services ஆப்ஷனில் Member Passbook ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
4 - இனி புதிய வலைதளம் திறக்கும்.
5 - இங்கு உங்களது UAN நம்பர், கடவுச்சொல் மற்றும் கேப்ச்சா உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
6 - இவ்வாறு செய்ததும் உங்களது பி.எஃப். அக்கவுண்ட் பாஸ்புக்கை பார்க்கலாம்.
குறிப்பு: உங்களது UAN நிறுவனத்தால் மட்டுமே ஆக்டிவேட் செய்யப்படும்.

எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவது
உங்களது UAN நம்பரை EPFO உடன் பதிவு செய்திருந்தால், உங்களது மொபைல் போனில் இருந்து EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களது பி.எஃப். அக்கவுண்ட் விவரங்கள் உங்களது நம்பருக்கு அனுப்பப்படும். இந்த சேவை ஆங்கிலம், தமிழ், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது.

மிஸ்டு கால் பயன்படுத்துவது
எஸ்.எம்.எஸ். போன்றே பி.எஃப். அக்கவுண்ட் விவரங்களை ஒற்றை மிஸ்டு கால் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 011 22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications