ஆன்லைனில் பான்கார்டு விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்வது எப்படி?
முதலில் NSDL பான்கார்டு விண்ணப்பம் செய்யும் இணையதளத்தில் டிராக்கிங் பக்கத்திற்கு செல்லுங்கள்.
நீங்கள் ஆன்லைனில் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தால் அல்லது. உங்களுடைய பான்கார்டை மேலும் ஒரு கூடுதல் பிரிண்ட் பெற வேண்டி விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இந்த பான்கார்டு விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள ஆன்லைனில் வசதிகள் உள்ளது. நீங்கள் பான்கார்டுக்கு விண்ணப்பம் செய்தபோது உங்கள் இமெயிலுக்கு ஒரு அப்ளிகேசன் எண் வந்திருக்கும். அந்த எண் இருந்தால் போதும் உங்கள் பான்கார்டு நிலையை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். தற்போது விண்ணப்பம் செய்யப்பட்ட பான்கார்டு நிலையை அறிந்து கொள்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

பான்கார்டு நிலையை அறிந்து கொள்ளும் முறை: (NSDL)
1. முதலில் NSDL பான்கார்டு விண்ணப்பம் செய்யும் இணையதளத்தில் டிராக்கிங் பக்கத்திற்கு செல்லுங்கள்
2. அதில் விண்ணப்பத்தின் டைப் என்ற ஆப்சனை செலக்ட் செய்யுங்கள். அதாவது புதிய பான்கார்டு, அல்லது மாற்றம் செய்யும் வசதி
3. பின்னர் உங்கள் இமெயிலுக்கு வந்திருந்த அப்ளிகேசன் எண்ணை அதற்குரிய இடத்தில் குறிப்பிடவும்.
4. பின்னர் அதில் குறிப்பிடப்பட்ட கேப்சா வை சரியாக அதற்குரிய இடத்தில் டைப் செய்யவும்.
5. பின்னர் சப்மிட் என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் பான்கார்டு அப்ளிகேசன் திரையில் தெரியும். அதில் உங்கள் விண்ணப்பத்தின் பரிசீலனை முடிந்துவிட்டதால் அல்லது நடந்து கொண்டிருக்கின்றதா? என்பது தெரியும்..

பான்கார்டு நிலையை அறிந்து கொள்ளும் முறை: (UTITSL)
1. முதலில் நீங்கள் UTITSL மூலம் பான்கார்ட் விண்ணப்பம் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அதில் விண்ணப்பத்தின் கூப்பன் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த எண் நீங்கள் விண்ணப்பம் செய்தபோது அனுப்பப்பட்டிருக்கும்.
3. அதேபோல் உங்களுடைய பான் எண்ணை குறிப்பிடவும்.
4. பின்னர் கேப்ட்சா எண்களை குறிப்பிடவும்.
5. இப்போது சப்மிட் பட்டனை அழுத்தினால் உங்கள் பான் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications