நாளையோடு முடியும் ஜியோ ப்ரைம் வேலிடிட்டி; இன்றே நீங்கள் செய்ய வேண்டிய 2 விஷயங்கள்.!

நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா கூட பற்றவில்லை என்கிற நிலைப்பாடு உருவாகி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி, 2ஜிபி, 3ஜிபி, 4ஜிபி என்ற உயரத்தை எட்டிவிட்டோம். அதற்காக ஆரம்பித்த இடத்தை மறக்க கூடாது அல்லவா.?

|

2016 வரையிலாகி 100எம்பி, 150எம்பி என்கிற அளவிலான மொபைல் டேட்டாவை பயன்படுத்தி வந்த நமக்கு, 2017-ல் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மூலமாக அடித்தது யோகம்.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா கூட பற்றவில்லை என்கிற நிலைப்பாடு உருவாகி நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி, 2ஜிபி, 3ஜிபி, 4ஜிபி என்ற உயரத்தை எட்டிவிட்டோம். அதற்காக ஆரம்பித்த இடத்தை மறக்க கூடாது அல்லவா.?

ஜியோ சேவைகளை அணுகும் முன்னர், ரூ.99/- என்கிற ஜியோ ரீசார்ஜை செய்து ஜியோ ப்ரைம் மெம்பராக மாறினோம். நினைவு இருக்கிறதா.? அது ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும் என்பதாவது நினைவில் இருக்கிறதா.? அந்த செல்லுபடி வருகிற மார்ச் 31, அதாவது நாளை முடிவடைகிறது என்பதாவது ஞாபகம் இருக்கிறதா.?

கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா.?

கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டுமா.?

ஆம். ரூ.99/- என்கிற ஜியோ ப்ரைம் மெம்பருக்கான வேலிடிட்டி நாளையொடு முடிகிறது. அடுத்தது என்ன.? உங்களின் ஜியோ ப்ரைம் வேலிடிட்டியை செக் செய்வது எப்படி.? அதை மீண்டும் ரீசார்ஜ் செய்வது எப்படி.? அதை கட்டாயம் ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டுமா.?

சேவை எஸ்எம்எஸ்-ஐ பெறவில்லை என்றால்.?

சேவை எஸ்எம்எஸ்-ஐ பெறவில்லை என்றால்.?

ஒருவேளை நீங்கள் - "ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆனது மார்ச் 31, 2018-ல் முடிவடைகிறது. தொடர்ந்து சிறப்பான நன்மைகளை அனுபவிக்க ரூ.99/- ரீசாஜ் செய்யவும்" என்கிற ஒரு சேவை எஸ்எம்எஸ்-ஐ பெறவில்லை என்றால் உங்கள் ஜியோ ப்ரைம் வேலிடிட்டியை செக் செய்து பார்ப்பது நல்லது. இதை மைஜியோ ஆண்ட்ராய்டு ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் நிகழ்த்தலாம். அங்கு ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் வேலிடிட்டி மட்டுமின்றி அனைத்து சலுகைகளுக்கான வேலிடிட்டிகளையும் சோதிக்க முடியும்.

வழிமுறைகள்.!

வழிமுறைகள்.!

01. மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளத்திற்குள் செல்லவும்.
02. உங்கள் ஜியோ எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து, கிடைக்கப்பட்டார் ஒடிபி-ஐ உள்ளிடவும்.
03. வெற்றிகரமாக உள்நுழைந்த பின்னர், மேல் இடது புறத்தில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்யவும்.
04. அதனுள் மெனு பட்டனை டாப் செய்யவும்.
05. கிடைக்கும் விருப்பங்களில் மைபிளான்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.
06.அங்கு உங்கள் எண் விவரங்கள் மற்றும் வேலிடிட்டி உட்பட இதர திட்ட விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

ப்ரைம் மெம்பர்ஷிப் கூடுதல் நன்மைகளை வழங்கியது பற்றி தெரியுமா.?

ப்ரைம் மெம்பர்ஷிப் கூடுதல் நன்மைகளை வழங்கியது பற்றி தெரியுமா.?

- ஒரு நாளைக்கு ரூ.10 /- என்கிற விலையின்கீழ் இலவச வரம்பற்ற தரவு மற்றும் குரல் சேவைகள்.
- கூடுதல் தரவு மற்றும் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்.
- எந்த நெட்வொர்க் உடனாகவும் வோல்ட் அடிப்படையிலான ரோமிங் உட்பட இலவச வாய்ஸ் நன்மைகள்
- ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல். இதுதான் ப்ரைம் மெம்பர்ஷிப் வழியாக நாம் இதுநாள் வரை அனுபவித்த நன்மைகள் ஆகும்.

ரூ.99/- ஆனது ஒரு இலவச சேவையாக மாறும்?

ரூ.99/- ஆனது ஒரு இலவச சேவையாக மாறும்?

இந்த காலாவதி சார்ந்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் கூட, இது சார்ந்த நினைவூட்டல் அறிவிப்பு வெளியாகவே இல்லை என்றால், நிறுவனத்தின் ஜியோ ப்ரைம் சந்தா என்கிற ஒரு விடயமே இல்லாமல் ஆக்கப்படும் அல்லது ஜியோ ப்ரைம் சந்தாவானது ஒரு இலவச சேவையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.99/- ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

லிமிடெட் பீரியட் ஆபராகவே விளம்பரப்படுத்தப்பட்டது.!

லிமிடெட் பீரியட் ஆபராகவே விளம்பரப்படுத்தப்பட்டது.!

முதலில், ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ஆனது ஒரு லிமிடெட் பீரியட் ஆபராகவே விளம்பரப்படுத்தப்பட்டது. அதாவது குறிப்பிட்ட தேதிக்குள் ரூ.99/- ரீசார்ஜை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில், அதிகமான சந்தாதாரர்களைப் பெறும் நோக்கத்தின் கீழ் ப்ரைம் சந்தாவை பெறும் காலம் நீடிக்கப்பட்டு கொண்டே போனது.

ரீசார்ஜை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.!

ரீசார்ஜை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.!

இப்போது, ​​ஜியோவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில், ப்ரைம் மெம்பராக இல்லாத சந்தாதாரர்களுக்கு வழங்கும் சேவைகள் பற்றி எந்த குறிப்பும் இல்லை. ஆக, ரூ.99/- மதிப்புள்ள ஜியோ மெம்பர்ஷிப் சந்தாவானது மெல்ல மெல்ல மறைந்து போகும் என்பது "கிட்டத்தட்ட" உறுதியாகிவிட்டது. இருப்பினும் ஒருவேளை உங்களுக்கு ஜியோ மீது நம்பிக்கை இல்லை என்றால், கடைசி நேரத்தில் என்னால் ரீசார்ஜ் செய்ய முடியாது என்றால் வேலிடிட்டியை அறிந்த பின்னர், ரூ.99/- ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டால்.!?

இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டால்.!?

ஒருவேளை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்த ஆண்டும் அதன் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையை அறிவித்தால், நாம் கடந்த ஆண்டு செய்ததை போலவே, மூன்று வெவ்வேறு வழிகளில் ஜியோ ப்ரைம் மெம்பராக இணையலாம். அதாவது மைஜியோ ஆப், ஜியோ.காம் வலைத்தளம், மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களின் மூலம் ரூ.99/- என்கிற மதிப்பிலான ரீசார்ஜை செய்து அடுத்த ஒரு வருடத்திற்கு ஜியோ ப்ரைம் சந்தாவை நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to check Jio Prime validity, How to renew Jio Prime subscription. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X