உஷார் : மார்க்கெட்டில் அசலை மிஞ்சும் போலி ஐபோன்கள் - போலிகளை கண்டறிய 7 டிப்ஸ்.!

|

போலி ஐபோன்களை சந்தையில் களமறிக்கி விட, இதை விட சரியான தருணம் அமையாது. புதிய ஐபோன்களின் மீதான மோகத்தில் மூழ்கித்திளைக்கும் ஐபோன் வெறியர்களின் கண்களில் மலிவான விலையில் ஐபோன்கள் தென்பட்டால் அதை உடனே வாங்கிவிடத்தான் தோன்றும். உங்களின் உற்சாகத்தை அடக்க, முதலில் ஒரு குட்டிக்கதையை சொல்லி விடுறேன்.

முன்பொருமுறை, பார்ப்பதற்கு அப்படியே சார்லி சாப்ளின் போன்றே இருப்பவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. மிகவும் சுவாரசியமாக அந்த போட்டியில் நிஜமான சார்லி சாப்ளின் கலந்து கொண்டார். நம்பினால் நம்புங்கள் அவருக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது - அதாவது நிஜ சார்லி சாப்ளினை போலியான வேடமிட்ட ஒரு சார்லி சாப்ளின் தோற்கடித்து விட்டார்.!

இந்த வரலாற்று சம்பவம் போலிகளுக்கான அங்கீகாரத்தை சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வாக எடுத்துக்கொண்டால் மார்க்கெட்டில் கிடைக்கும் சில போலி ஐபோன் ஆனது அசல் கருவிகளையே மிஞ்சும் அளவு துல்லியமான வடிவமைப்பை பெற்றுள்ளன. அந்த துல்லியதையும் மீறி அதில் எது போலியான கருவி எது அசலான கருவி என்பதை எப்படி கண்டறிவது என்பதில் குழப்பம் வேண்டாம்.

ஐபோன் என்பது ஒரு கனவுக்கருவி, ஒரு எட்டாத கேஜெட் கனி, அதுவொரு ஏக்கம் - ஏங்குபவர்களுக்கு மட்டுமே புரியும். அந்த மயக்கத்தில், கண்டதெல்லாம் நிஜம் தான் என்ற பிரமையில், மிகவும் மலிவான விலையில் ஐபோன்கள் விற்பனைக்கு வருகிறது என்று பார்த்ததுமே ஒரு ஆர்டர் செய்து அதை வாங்கி விடாதீர்கள்.

ஆப்பிள் லோகோ

ஆப்பிள் லோகோ

ஐபோன்களை வாங்கும் போது முதலில் ஆப்பிள் லோகோ சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்திடுங்கள். பெரும்பாலான போலி ஐபோன்களில் லோகோ வித்தியாசமாக இருக்கும்.

திருகாணி

திருகாணி

ஆப்பிள் ஐபோன்களில் பென்டா லோப் ஸ்க்ரூகள் பயன்படுத்தப்படும். இதனால் சாதாரண ஸ்கிரூ இருந்தால் அது போலி ஐபோன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மெமரி கார்டு

மெமரி கார்டு

ஐபோன் கருவிகளில் கூடுதல் மெமரி வழங்க மெமரி கார்டு ஸ்லாட்கள் ஏதும் இருக்காது. இதனால் எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு கொண்ட ஐபோன்கள் என்றாலே அது போலி தான். இதே போல் சார்ஜிங் போர்ட் சுற்றி பிளாஸ்டிக் பார்டர் இருந்தாலும் போலி ஐபோன் தான்.

கேமரா

கேமரா

இது பலரும் எளிதாக அறிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். கேமரா தரம் குறைவாக இருந்தால் அது நிச்சயம் போலி ஐபோன் தான். இதோடு போலி ஐபோனினை ஆன் செய்ததும் வெல்கம் ஸ்கிரீனில் வெல்கம் என்ற ஆங்கில வார்த்தை வரும். ஒரிஜினல் ஐபோன்களில் ஆப்பிள் லோக் வரும்.

ஐஎம்இஐ நம்பர்

ஐஎம்இஐ நம்பர்

ஐபோனின் ஜெனரல் செட்டிங்ஸ் பகுதியில் ஐஎம்இஐ (IMEI) நம்பரை பார்க்க முடியும். இதே நம்பரை ஆப்பிள் தளத்திலும் உறுதி செய்து கொள்ள முடியும். போலி ஐபோனில் இதைச் செய்ய முடியாது.

ஐட்யூன்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்

ஐட்யூன்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்

போலி ஐபோன்களில் ஐட்யூன்ஸ் கனெக்ட் ஆகாது. இதனால் போலி ஐபோன்களைக் கண்டறிவது மிகவும் சுலபமாகிறது. மேலும் ஆப்பிள் ஸ்டோர் ஐகான் கிளிக் செய்து ஆப்பிள் ஸ்டோர் தளம் ஓபன் ஆகவில்லை எனில் அது போலி ஐபோன் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பேக்கேஜிங்

பேக்கேஜிங்

உண்மையான ஐபோன் பேக்கேஜிங் ஐபோன் மாடல், அது தயாரிக்கப்பட்ட நாடு, சீரியல் நம்பர் போன்றவற்றைக் கொண்டிருக்கும். இந்தத் தகவல்கள் இல்லையெனில் இது போலி பேக்கேஜிங் என்பதை உறுதி செய்திடுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to check if your iPhone is fake or Original. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X