உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா?

ஹேக்கர்களின் கையில் சிக்கிவிட்டால் உங்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவுகள் உங்களை அறியாமல் பகிரவும், தேவையில்லாத பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்,

|

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சமூக வலைத்தள கணக்கு என்பது பொழுதுபோக்கையும் தாண்டி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் உள்ள உங்கள் சமூக வலைத்தளம் ஹேக்கர்களின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். ஒருவேளை ஹேக்கர்களின் கையில் சிக்கிவிட்டால் உங்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள பதிவுகள் உங்களை அறியாமல் பகிரவும், தேவையில்லாத பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.

 உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பாதுகாப்பாக உள்ளதா?


ஒருவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பல தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருக்கும் என்பதால் ஹேக் செய்யப்பட்டதாக சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நம்முடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை சோதனை செய்து கொள்வது அவசியம்.

உங்கள் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க நாங்கள் சில வழிமுறைகளை உங்களுக்கு கூறுகிறோம்.

உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் செட்டிங் செல்லுங்கள்

ஸ்டெப் 2: பின்னர் செக்யூரிட்டி மற்றும் லாகின் செல்லுங்கள்

ஸ்டெப் 3: பின்னர் எங்கிருந்து லாகின் செய்கிறீர்கள் என்பதை க்ளிக் செய்யுங்கள்

இதன்பின்னர் நீங்கள் எப்போது எங்கிருந்தெல்லாம் அக்கவுண்டில் லாகின் செய்தீர்கள் என்ற முழு விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும். இந்த பட்டியலில் உங்களுக்கு தெரியாத ஒரு இடத்தில் இருந்து லாகின் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் உங்கள் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பது அர்த்தம். உடனே சுதாரித்து கொள்ளுங்கள்.

 உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பாதுகாப்பாக உள்ளதா?


உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க எளிய வழி, நீங்கள் தொடர்ந்து நினைவில் கொள்ளாத நபர்களிடம் இருந்து பதிவுகள் பார்த்து, அத்தகைய படங்களில் பிடிக்கும். இவை உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருக்கும். இத்தகைய செயல்களைப் பார்த்த பின்னர் உங்கள் கணக்கில் இன்னும் அவர்களுடைய அணுகல் இருந்தால், உடனடியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றவும்.

அதேபோல் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் மூன்றாவது பார்ட்டி நுழைவதற்கு அனுமதிக்க வேண்டாம். அதேபோல் கணக்கில் நுழைய கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான லாகின் வசதியான டூ ஃபேக்டர் ஆதன்சேஷன் என்ற லாகின் முறையை பின்பற்ற தவற வேண்டாம்.

 உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பாதுகாப்பாக உள்ளதா?


உங்கள் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்களுடைய டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? என்பதை கண்டுபிடிப்பது ஃபேஸ்புக் போன்ற முறையில் முடியாது. டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றவும்

1. முதலில் செட்டிங்ஸ் மற்றும் பிரைவைசி செல்லவும்

2. பின்னர் பிரைவைச் மற்றும் சேஃப்டி என்பதை க்ளிக் செய்யவும்

3. பின்னர் உங்களுடைய டுவிட்டர் டேட்டாவை செலக்ட் செய்யவும்

தற்போது உங்களுடைய டுவிட்டர் டேட்டா பக்கத்தை சோதனை செய்யவும். இந்த பகுதியில் உங்களுடைய கணக்கின் முழு விபரங்களும் இருக்கும். இதில் அக்கவுண்ட்ஸ் மற்றும் ஹிஸ்ட்ரி என்ற பகுதியிலும் ஆப்ஸ் மற்றும் டிவைசஸ் என்ற பகுதியிலும் உங்களுடைய போன், ஆப்ஸ்கள் மற்றும் பிரெளசர்களின் விபரங்கள் இருக்கும். இதில் உள்ள ஒரு கவலைக்குரிய விஷயம் என்னவெனில் ஹேக் செய்யப்பட்டதை நீங்கள் அறிந்தாலும் ஃபேஸ்புக் போல் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. இருப்பினும் உங்கள் டுவிட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றி கூடுதல் பாதுகாப்பை பெறலாம். மேலும் இரண்டு ஸ்டெப்கள் லாகின் முறையை பின்பற்றினால் இன்னும் அதிக பாதுகாப்பு உங்கள் டுவிட்டர் பக்கத்திற்கு கிடைக்கும்.

மொத்தத்தில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் நுழையும்போது இரண்டு ஸ்டெப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லாகினை பயன்படுத்துங்கள். இந்த முறையால் உங்களுடைய கணக்கை ஹேக் செய்யவே முடியாது என்ற கூற முடியாவிட்டாலும் ஹேக்கர்கள் உங்களுடைய கணக்கில் எளிதில் கையகப்படுத்த முடியாது என்பதை மட்டும் தெளிவாக கூஉற முடியும்

Best Mobiles in India

English summary
How to check if your Facebook Instagram or Twitter account been hacked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X