பிளே ஸ்டோரில் போலி ஆப்ஸ் - இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.!

உங்களது மொபைல் சாதனத்தை பாதுகாக்கும் நோக்கில், செயலிகளை இன்ஸ்டால் செய்யும் முன் அதிக கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.

|

புதிதாய் ஸ்மார்ட்போன் வாங்கிய சில நாட்களுக்கு அவற்றை முடிந்த வரை பயன்படுத்தி, அதில் உள்ள ஆப்ஷன்களுக்கே சலிப்பை ஏற்படுத்தும் அளவு அவற்றை பயன்படுத்தி பார்ப்பதை நம்மில் பலரும் வழக்கமாக பின்பற்றி வருகிறோம்.

பிளே ஸ்டோரில் உள்ள போலி செயலிகளை கண்டறிவது எப்படி?

புதிய ஆப்ஷன்களில் அதிக கவனம் இல்லாதோர், அதன் கேமரா, கேமிங் உள்ளிட்ட சில அம்சங்களில் அதிக கவனம் செலுத்த சில லெஜன்டுகள் மட்டும் பிளே ஸ்டோர் பக்கம் சென்று புதிய செயலிகளை அதிகளவு இன்ஸ்டால் செய்து ஒவ்வொன்றாக பயன்படுத்த நினைப்பர்.

கேம்கள், மெசேஜிங், பியூட்டி என பல்வேறு ரகங்களில் அடுக்கடுக்காய் ஆப்ஸ்களை ஆப் ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து விடுவர். பிளே ஸ்டோரில் ஒவ்வொரு நாளும் அதிகப்படியான ஆப்ஸ்கள் சேர்க்கப்படும் நிலையில் போலி செயலிகளும் அவற்றில் மால்வேர் அச்சுறுத்தல்களும் அவசியம் நாம் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.

சில போலி செயலிகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாய் உங்களுக்கு லின்க்-களை அனுப்பும், இவற்றை க்ளிக் செய்தால் போதும், உங்களது முழு விவரங்களும் திருடப்பட்டு விடும். போலி செயலிகளை உருவாக்குவோர் பெரும்பாலும் அவற்றை கச்சிதமாகவே உருவாக்குவர். சமீபத்தில் பிளே ஸ்டோரில் இது போன்ற செயலிகள் கண்டறியப்பட்டன.

உங்களது மொபைல் சாதனத்தை பாதுகாக்கும் நோக்கில், செயலிகளை இன்ஸ்டால் செய்யும் முன் அதிக கவனமாக இருப்பது அவசியம் ஆகும். கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள போலி செயலிகளை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பிளே ஸ்டோரில் உள்ள போலி செயலிகளை கண்டறிவது எப்படி?

- எந்த செயலியை இன்ஸ்டால் செய்யும் முன்பும் டெவலப்பர்களை பற்றி ஆய்வு செய்து முக்கியமாகும். பிளே ஸ்டோரில் டெவலப்பர்களின் பெயர் செயலியிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கும். குறிப்பிச்ச டெவலப்பர் நம்பத்தகுந்தவர் எனில் சொந்தமான வலைத்தளம் அல்லது உறுதிப்படுத்தும் தகவல்கள் இணையத்தில் இருக்கும்.

- செயலியை இன்ஸ்டால் செய்யும் முன் ஆப் டிஸ்க்ரிப்ஷனை வாசித்தாலே போலி செயலிகளை கண்டறிந்து விட முடியும். பெரும்பாலான செயலிகளின் அனுமதிகள் அவற்றின் செயல்பாடு அல்லது அம்சங்களுடன் ஒற்று போக வேண்டும்.

- பயனுள்ள செயலியை உருவாக்குவோர் செயலியை சிறப்பாக வழங்குவர். அந்த வகையில் போலி செயலிகளில் பல்வேறு லின்க் அல்லது விளம்பரங்களை க்ளிக் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.


- பிரபல செயலிகளை டவுன்லோடு செய்யும் முன் அதனை எத்தனை பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். குறைந்த அளவு டவுன்லோடு செய்யப்பட்டிருந்தால், நிச்சயம் இது போலி செயலி என்பதை அறிந்து கொள்ள முடியும்.


- செயலியில் நீங்கள் கவனித்த அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் செயலிக்கு மற்றவர்கள் அளித்து இருக்கும் விமர்சனங்களை படிக்கவும். போலி செயலிகளுக்கு அதிகளவு மோசமான விமர்சனங்கள் இருக்கும்.

பிளே ஸ்டோரில் உள்ள போலி செயலிகளை கண்டறிவது எப்படி?

- நீங்கள் இன்ஸ்டால் செய்ய இருக்கும் செயலியில் சந்தேகம் ஏதும் இருப்பின், அவற்றை இன்ஸ்டால் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேலை இன்ஸ்டால் செய்யலாம் என்ற எண்ணம் மனதளவில் எழுந்தால், குறிப்பிட்ட செயலி குறித்த ஆய்வை மேலும் செய்து பின் முடிவு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to check if apps are fake in the Play Store ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X