Home
How to

பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் டேட்டா பயன்பாட்டை டிராக் செய்ய சூப்பர் டிப்ஸ்.!

இன்டர்நெட் பயன்படுத்தும் பலரையும் பாதிக்கும் முக்கிய அம்சங்களில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்து டேட்டா பயன்படுத்துவது தான்.

By Gizbot Bureau

இன்டர்நெட் பயன்படுத்தும் பலரையும் பாதிக்கும் முக்கிய அம்சங்களில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்து டேட்டா பயன்படுத்துவது தான். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்து இன்டர்நெட் பயன்படுத்தும் போது கூடுதலாக அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் டேட்டா பயன்பாட்டை அறிந்து கொள்வது எப்படி?

அதிகளவு இன்டர்நெட் பயன்பாட்டு வீணாக கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, குறிப்பிட்ட கால அளவுகளில் நீங்கள் பயன்படுத்தி இருக்கும் டேட்டா அளவை தெரிந்து கொள்வது சரியான தீர்வாக இருக்கும். இதே நிலை பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் பயன்படுத்துவோருக்கும் நிச்சயம் ஏற்படும்.

பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் டேட்டா பயன்படுத்துவோரில் நீங்களும் ஒருவரா? உங்களின் பிராட்பேன்ட் டேட்டா அளவை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் அக்கவுன்ட்

பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் அக்கவுன்ட்

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்திருக்கும் ஆன்லைன் செல்ஃப்கேர் போர்ட்டலில் நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இங்கு உங்களின் பிராட்பேன்ட் டேட்டா பயன்பாடு மற்றும் லேன்ட்லைன் பயன்பாட்டு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

இதே போர்டலில் நீங்கள் பயன்படுத்தும் சலுகைகளை மாற்றிக் கொள்வது, புகார் அளிப்பது, கட்டணத்தை அறிந்து கொள்வது, கட்டணம் செலுத்துவது, ப்ரோஃபைல் அப்டேட் மற்றும் இதர தகவல்ளை இயக்க முடியும்.

டேட்டா பயன்பாட்டை அறிந்து கொள்வது எப்படி?

டேட்டா பயன்பாட்டை அறிந்து கொள்வது எப்படி?

நீங்கள் பதிவு செய்த கணக்கில் சைன்-இன் செய்து டேஷ்போர்டு செல்ல வேண்டும். அங்கு சர்வீசஸ் ஆப்ஷனில் காணப்படும் பிராட்பேன்ட் அன்பில்டு பயன்பாட்டு விவரங்களை குறிக்கும் "Check My Broadband Unbilled Usage Details" ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு ஏற்ப பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் போர்டல்களை கீழே வழங்கப்பட்டிருப்பதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

http://selfcare.sdc.bsnl.co.in for South Zone

http://selfcare.ndc.bsnl.co.in for North Zone

http://selfcare.wdc.bsnl.co.in for West Zone

http://selfcare.edc.bsnl.co.in for East Zone

 பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் முறை

பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் முறை

முதலில் உங்களது லேன்ட்லைன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். இதற்கு 52295 என்ற எண்ணுக்கு , "REG ஸ்பேஸ் லேன்ட்லைன் நம்பர் மற்றும் எஸ்டிடி குறியீடு(STD code)" டைப் செய்த எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

பிஎஸ்என்எல் அல்லாத சேவைகளை பயன்படுத்துவோர் பதிவு செய்யும் முறை

பிஎஸ்என்எல் அல்லாத சேவைகளை பயன்படுத்துவோர் பதிவு செய்யும் முறை

பிஎஸ்என்எல் அல்லாத நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பதிவு செய்ய வேண்டும். இவர்கள் பிஎஸ்என்எல் லேன்ட்லைன் நம்பரை பதிவு செய்ய "REG ஸ்பேஸ் லேன்ட்லைன் நம்பர் மற்றும் எஸ்டிடி குறியீட்டை பதிவு செய்து" 919448077777 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் டேட்டா பயன்பாட்டை அறிந்து கொள்வது எப்படி?

எஸ்எம்எஸ் மூலம் டேட்டா பயன்பாட்டை அறிந்து கொள்வது எப்படி?

பதிவு செய்ததும், வாடிக்கையாளர்கள் மற்றொரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இம்முறை, "BBU ஸ்பேஸ் லேன்ட்லைன் நம்பர் மற்றும் எஸ்டிடி குறியீடு" டைப் செய்து 52295 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

பிஎஸ்என்எல் அல்லாத மற்ற நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் "BBU ஸ்பேஸ் லேன்ட்லைன் நம்பர் மற்றும் குறிப்பிட்ட எஸ்டிடி குறியீடு" டைப் செய்து 09448077777 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Check Data Usage on BSNL Broadband 3 Quick Tricks: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X